மெட்ரோ பொலிடன் கல்லூரியின் பட்டமளிப்பு விழா 2015
(அகமட் எஸ். முகைடீன்)
மனித வாழ்க்கையின் அச்சானியாக காணப்படுகின்ற கல்வி மனிதர்களை புடம்போட்டு மனிதப்புனிதர்களாக மாற்றுகின்றது என்றால் மறுப்பதற்கில்லை. அவ்வாறான கல்வியினை மாணவச் சமூகத்திற்கு காத்திரமாக வழங்கிவரும் கல்வி நிறுவனங்களில் மெட்ரோபொலிடன் கல்லூரி சிறப்பிடம் பெறுகின்றது.
சர்வதேச தரம் மிக்க உயர் கல்வியினை மாணவர்களுக்கு வழங்குவதில் 15 ஆண்டுகளைத் தாண்டி படிக விழாக்கண்டிருக்கும் மெட்ரோ பொலிடன் கல்லூரியின் பட்டமளிப்பு விழா வெகு விமர்சையாக சனிக்கிழமை (21) மாலை கல்லூரியின் ஸ்தாபகத் தலைவர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் வெள்ளவத்தையில் அமைந்துள்ள எக்ஸலன்ஸி மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வர்தகம் மற்றும் வாணிப அமைச்சர் றிசாத் பதியுதீன் மற்றும் அதிதிகளாக கிர்னே அமெரிக்கன் பல்கலைக்கழகத்தின் ஸ்தாபக வேந்தர் கலாநிதி செர்ஹட் அக்பினார், கிர்னே அமெரிக்கன் பல்கலைக்கழகத்தின் ஆளுநர் சபை உறுப்பினர் வழக்கறிஞர் அரல் டோகூ, இலங்கைக்கான துருக்கி நாட்டு தூதுவர் துன்கா ஒஸ்சுஹதா, இலங்கைக்கான மலேசிய நாட்டு உயர் ஸ்தானிகர் அஸ்மி சைனுடீன், ஐக்கிய அறபு இராச்சிய தூதரகத்தின் முதற் செயலாளர் ஒஸாமா அல் அலி, இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, கிராமிய அபிவிருத்தி பிரதி அமைச்சர் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர்களான அப்துல் றகுமான் இஸாக், எம்.எச்.முகம்மட் நவவி மற்றும் மூன்றாம் நிலைக்கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழுவின் பணிப்பாளர் வஜிர பெரேரா ஆகியொர் கலந்து சிறப்பித்தனர்.
உளவியல், கணக்கியல், வணிக முகாமைத்துவம், மனிதவள முகாமைத்துவம், கணணி, ஆங்கிலம், செயலாளர் கற்கைநெறி, திட்ட முகாமைத்துவம், சுற்றுலா முகாமைத்துவம், சட்டம், குழந்தை உளவியல், உளவியல் ஆலோசகர் போன்ற பல்வேறு பட்ட துறைகளில் டிப்லோமா மற்றும் உயர் டிப்லோமா கற்கை நெறிகளையும், உளவியல் பட்டப்படிப்பு கற்கை நெறியினையும் பூர்த்தி செய்த 110 மாணவர்கள் இப்பட்டமளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு தமது பட்டங்களை பெற்றுக் கொண்டனர். இதன்போது தமது கற்கை நெறிக் காலப்பகுதியில் கற்றல் மற்றும் புறகீர்த்திய விடயங்களில் சிறப்பாக செயற்பட்ட மாணவர்களுக்கு துறைசார் முதன்மை பதக்கம் வழங்கிவைக்கப்பட்டது. அத்தோடு மெட்ரோபொலிடன் கல்லூரி விரிவுரையாளர்கள் மற்றும் ஊழியர்களை கௌரவித்து பாராட்டுச் சாண்றிதழ் வழங்கப்பட்டது.
மெட்ரோ பொலிடன் கல்லூரி நிறுவனத்தினால் அண்மையில் பாடசாலை மாணவர்களுக்கு நடத்தப்பட்ட 2015 ஆம் ஆண்டுக்கான மன நல கட்டுரைப்போட்டியில் முதல் மூண்று இடங்களைப் பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்கள், நினைவுச்சின்னம், சாண்றிதழ் மற்றும் புலமைப்பரிசில்களும் 10 ஆறுதல் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது.
மாணவர்களின் கல்வி இலக்கிற்கு உந்து சக்தியாக விளங்கும் மெட்ரோபொலிடன் கல்லூரியானது தற்போது தெஹிவளையில் அமைந்துள்ள நவீன கட்டிடத்தில் தமது பணியினை ஆற்றிவருகின்றது. இங்கு மாணவர்களின் கல்வி வளச்சியினை தூண்டும்வகையில் நவீன கணணி ஆய்வுகூடம் மற்றும் உள்ளக நூலக வசதிகள் அமைந்து காணப்படுகின்றது குறிப்பிடத்தக்கதாகும்.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் மாணவர்கள் சித்தியடைந்தாலும் உயர் கல்வியினை தொடர்வது விரல் விட்டு எண்ணக் கூடிய சில மாணவர்களுக்கு மாத்திரமான வரமாகிவிட்டது. அரச பல்கலைக் கழகங்களின் எண்ணிக்கை மற்றும் அடிப்படை வசதி என்பன உயர் கல்விக்கு உள்வாங்கப்படுகின்ற மாணவர்களின் எண்ணிக்கையினை தீர்மானிக்கின்ற காரணிகளாக அமைகின்றன. இதனால் அரச பல்கலைக்கழகங்களில் உயர் கல்வியினை தொடர முடியாமல் போகின்ற அதிக என்னிக்கையிலான மாணவர்களுக்கு இவ்வாறான கல்லூரிகளின் வழிகாட்டுதலினாலும் வழிநடத்தலினாலும் கேள்விக் குறியான மாணவர்களின் எதிர்காலம் வளம் மிக்கதாக மாற்றியமைக்கப்படுகின்றது.
Comments
Post a Comment