தமிழ் பிரதேசங்களில் நடைபெறும் அபிவிருத்தி நிகழ்வுகள் மற்றும் பொது நிகழ்வுகளுக்கு வருவதற்கு தமிழ் அரசியல் வாதிகள் தயக்கம்
கல்முனை புளு பெரி கிண்டர் கார்டன் முன்பள்ளி பாடசாலை மாணவர்களின் வருடாந்த பரிசளிப்பு விழா இன்று காலை கல்முனை கிறிஸ்தா இல்லத்தில் நடை பெற்றது .
இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு திகாமடுள்ள மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் அழைக்கப் பட்டிருந்தார் . இந்த நிகழ்வு காலை 9.00 மணிக்கு அதிபர் திருமதி எஸ்.குமாரலிங்கம் தலைமையில் ஆரம்பமாவிருந்தது . பிரதம அதிதியின் வருகைக்காக முன்பள்ளி மாணவர்கள் 10.30 மணிவரை மாலைகளுடன் எறிக்கும் வெயிலில் காத்து நின்றனர் . ஆனால் பாராளுமன்ற உறுப்பினரோ வரவில்லை . இன்று காலைதான் அவர் கொழும்பில் இருந்து வந்ததாகவும் நிகழ்வுக்கு வரமாட்டார் என்ற தகவலும் கிடைத்தது . இந்த தகவல் அங்கு கூடி இருந்த நூற்றுக்கணக்கான பெற்றோர்களையும் சின்னஞ் சிறார்களையும் கவலைக்குள்ளாக்கியது. சில பெற்றோர் ஆத்திரத்தையும் வெளிப்படுத்தினர் .
அவர் வராவிட்டாலும் கௌரவ அதிதி வந்தால் அவரைக் கொண்டு நிகழ்வை ஆரம்பிக்கலாம் என்ற நப்பாசையில் பெற்றோர்களும் ,சிறார்களும் மேலும் அரை மணித்தியாலம் காத்திருந்தனர் . கௌரவ அதிதியாக வர இருந்தவர் PSEB Woerking Director கே.எம்.சுபைர் அவரது வருகையும் தாமதம் அடைய ஆத்திரம் அடைந்த பெற்றோர் வந்தவர்களைக் கொண்டு நிகழ்வை ஆரம்பிக்குமாறு வேண்டிக் கொண்டனர் .
உரிய நேரத்துக்கு அங்கு பிரசன்னமாகி இருந்த சம்பத் வங்கி முகாமையாளர் டேவிட் ,கல்முனை உவெஸ்லி கல்லூரி அதிபர் வீ.பிரபாகரன் ,பாண்டிருப்பு மகாவித்தியாலய அதிபர் டபிள் யு .ஈ .அருள்நேசன் கல்முனை சிங்கள மகா வித்தியாலய அதிபர் என்.ரீ.லக்ஷ்மன் ஹேமகுமார ,FSEB வெளிக்கள உத்தியோகத்தர் ஏ.எல்.முகம்மட் அனீஸ், கல்முனை சைவ மகா சபை தலைவர் எஸ்.அரசரத்தினம் ஓய்வு பெற்ற ஆசிரிய ஆலோசகர் சரோஜா நொனிசப்பு ஆகியோரால் 11.00 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமாகின .
வாக்கு பெறுவதற்கு தேர்தல் காலத்தில் அரசியல் வாதிகள் உரிய நேரத்துக்கு சொல்லாமலே வந்து விடுவார்கள் ஆனால் இவ்வாறன நிகழ்வுகளுக்கு சொல்லியும், நேரம் ஒதுக்கியும் வராமல் எங்களுடைய தமிழ் பிரதேசங்களின் நிகழ்வுகளை புறக்கணிக்கின்றனர் என அங்கு நின்ற பெற்றோர்கள் பலர் தெரிவித்தனர் .
வைபவத்தில் சிறுவர்களின் வருடாந்த பரிசளிப்பு விழா சிறார்களின் கலை நிகழ்வுகளுடன் சிறப்பாக நடை பெற்றது.
குறிப்பிட்ட பாலர் பாடசாலை அதிபரின் மகள் தான் நான். அன்றைய தினம் அதிதிகளின் வருகைத் தாமதத்தினால் குழந்தைகளோடு எத்தனை கஸ்டம் அனுபவிக்க நேர்ந்தது என்பது அவர்களுக்கு தெரிந்திருக்காது. அவர்களின் அசமந்தப் போக்கு நமக்கே இப்படி என்றால் ஆட்சிக்கு என்ன வகையாக இருக்கும்? தட்டிக்கேட்ட ஊடகத்திற்கு எங்கள் நன்றிகள்.
ReplyDelete