கல்முனை பிரதேசத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரணம் வழங்குவது தொடர்பான கலந்துரையாடல்
வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களம் சமூக வலுவூட்டல் மற்றும் நலனோன்புகை அமைச்சு ஊடாக நிவாரண உதவிகள் கிடைக்காத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரணம் பெறுவதற்கான வாய்ப்பு புதிய அரசாங்கத்தினால் ஏற்படுத்தப் பட்டுள்ளது .
இதுவரை காலமும் சமுர்த்தி நிவாரணம் பெறாதவர்கள் பிரதேச செயலகங்களில் விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து நவம்பர் 24ஆம் திகதிக்கு முன்னர் பிரதேச செயலாளர் அல்லது வாழ்வின் எழுச்சிப் பிரிவின் தலைமை முகாமையாளரிடம் ஒப்படைக்குமாறு கேட்க்கப் பட்டிருந்தது . அதன் பிரகாரம் சமர்ப்பிக்கப் பட்ட விண்ணப்பங்கள் தொடர்பாக உதவி வழங்கும் வேலை திட்டத்தை உத்தியோகத்தர்களுக்கு தெளிவு படுத்தும் கூட்டம் நேற்று கல்முனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
வாழ்வின் எழுச்சிப் பிரிவின் தலைமை முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் தலைமையில் நடை பெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி,சிறப்பு அதிதிகளாக தலமைக் காரியாலய திவிநெகும இணைப்பாளர் ஐ.அலியார்,புள்ளிவிபர திணைக்கள அதிகாரி எம்.பீ.எம்.சித்தீக்,சமுக சேவை உத்தியோகத்தர் ரீ.அன்சார் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்த வேலை திட்டம் தொடர்பாக வாழ்வின் எழுச்சி தலைமைக்காரியாலய இணைப்பாளர் ஐ.அலியார் உத்தியோகத்தர்களுக்கு விரிவான விளக்கமளித்தார் . இதில் வாழ்வின் எழுச்சி திணைக்கள அதிகாரிகள்,உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment