ஓ எல் தின விழாவுடன் கல்முனை உவெஸ்லி கல்லூரியில் முப்பெரும் விழா
கல்முனை உவெஸ்லி கல்லூரியில் க.பொ .த (சா/த ) விழாவுடன் இன்று முப்பெரும் விழா நடை பெற்றது . கல்லூரியில் இவ்வருடம் சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்களினால் இவ்விழா ஏற்பாடு செய்யப் பட்டது.
பகுதி தலைவர் ஆசிரியர் கே.ருத்ரமூர்த்தியின் வழிகாட்டலில் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் மாணவர்களினால் பாடசாலை கீதம் வரவேற்பு பாடல் இசைக்கப் பட்டு வரவேற்பு நடனத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமானது.
மாணவர்களின் கலை காச்சார நிகழ்வுகளுடன் மூன்று கட்டங்களாக ஆசிரியர் கௌரவிப்பும் இடம் பெற்றது.
சமீபத்தில் ஓய்வு பெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர் பொ .ஜெகநாதன் உட்பட சமீபத்தில் ஓய்வு பெறவுள்ள கல்முனை சுவாமி விபுலானந்தா வித்தியாலய அதிபர் திருமதி ஆர் .எம்.எஸ்.ஜீவராஜா , பாண்டிருப்பு மகா வித்தியாலய அதிபர் டபிள் யு.ஈ .அருள்நேசன் ,பெரிய நீலாவணை விஷ்ணு மகாவித்தியாலய அதிபர். திருமதி நற்குணசிங்கம் ஆகியோரும் கௌரவிக்கப் பட்டனர் . அத்தோடு கல்லூரியில் சாதாரண தரப் பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்களும் ,ஐந்தாம் தரப் புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களும் பாராட்டி கௌரவிக்கப் பட்டனர் .
முன்னாள் அதிபர் எஸ்.ஏ.ஐ.மத்தேயு ,முன்னாள் அதிபர் எஸ்.சந்திரலிங்கம் ஆசிரியர்களான அருளானந்தம் ,தங்கவேல் உட்பட அதிபர்கள்,ஆசிரியர்கள்,பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள்,பெற்றோர்கள்,மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment