கல்முனை மாநகர சபையின் புத்தாண்டு சத்தியப் பிரமாண நிகழ்வு
(சௌஜீர் ஏ முகைடீன்) கல்முனை மாநகர சபையின் புத்தாண்டு சத்தியப் பிரமாண நிகழ்வு இன்று (01.01.2013) காலை மாநகர முன்றலில் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் நடைபெற்றது. இதன்போது மாநகர சபையின் உத்தியோகத்தர்களும் ஊழியர்களும் முதல்வர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர். அத்தோடு முதல்வர் ஊழியர்களுக்கும் உத்தியோகத்தர்களுக்கும் கைலாகு கொடுத்து புத்தாண்டு வாழ்துக்களை தெரிவித்தார். இந்நிகழ்வில் ஆணையாளர் ஜே.லியாகத்அலி, பொறியியலாளர் ஹலீம் ஜௌசி, கணக்காளர் எல்.ரீ.சாலிதீன், ஆயுள்வேத வைத்திய அதிகாரி எச்.என்.எம்.றம்சீன், மாநகர சபை உறுப்பினர்களான எச்.எம்.எம்.நபார், ஏ.விஜயரட்னம் மற்றும் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர். இங்கு மாநகர முதல்வர் உரையாற்றுகையில். கடந்த மூன்று தசாப்த காலங்களாக இடம்பெற்ற யுத்தத்தின்போது இந்த கல்முனை பிரதேச வாழ் மக்கள் நிம்மதியாக மூச்சு விட முடியாத துர்ப்பாக்கியமான நிலை காணப்பட்டது. இன்று நம் நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் அயராத முயற்சியின் பயனாய் அந்த கொடிய யுத்தம் முடிவுக்...