Posts

அகில இலங்கை பாடசாலைகள் சம்பியன்களாக கல்முனைஸாஹிரா தேசியக்கல்லூரி அணி

Image
ஸ்ரீலங்கா   கிறிக்கட்   மற்றும்   இலங்கை   பாடசாலைகள்   கிறிக்கட் சம்மேளனம்   ஆகியன   இணைந்து   அகில   இலங்கை பாடசாலைகளுக்கிடையில்   நடாத்திய  17  வயதுக்குட்பட்ட   கடினபந்து கிறிக்கட்   சுற்றுப்   போட்டியின்   இறுதிப்   போட்டியில்    கல்முனை ஸாஹிரா   தேசியக்கல்லூரி   அணி     யாழ்ப்பாணம்   மத்திய   கல்லூரி  கிறிக்கட்   அணியை  4  விக்கட்டுக்களினால்   தோற்கடித்து    அகில  இலங்கை   பாடசாலைகள்   சம்பியன்களாக   தெரிவு செய்யப்பட்டுள்ளது . யாழ்ப்பாணம்   மத்திய   கல்லூரி   மைதானத்தில்   ஞாயிற்றுக்கிழமை   (21)  நடைபெற்ற  50  ஓவர்கள்   மட்டுப்படுத்தப்பட்ட   கிறிக்கட்ட போட்டியின்    இறுதிப்   போட்டியில்   நாணயச்சுழற்சியில்   வெற்றி பெற்ற   கல்முனை   ஸாஹிரா   தேசியகல்லூரி   அணித்   தலைவர் றஸ்பாஸ்   யாழ்ப்பாணம்   இந்துக்   கல்லூரியினை   துடுப்பாடப் பணித்தார் . முதலில்   துடுப்பெடுத்தாடிய    யாழ்   மத்திய   கல்லூரி   அணி  49 ஓவர்களில்   சகல   விக்கட்டுக்களையும்   இழந்து  173   ஓட்டங்களைப் பெற்றது . பதிலுக்கு   துடுப்பெடுத்தாடிய   கல்முனை   ஸாஹிரா   தேசியக் கல்லூரி   அணி  41   ஓவர்களில

முடிந்தால் அரசை விட்டு SLMC விலகிக் காட்டடும் -மாநகரசபை உறுப்பினர் நபார் சவால்

Image
முடிந்தால் அரசாங்கத்தை விட்டு ஸ்ரீ லங்கா முஸ்லிம்  காங்கிரஸ்   விலகிக் காட்டடும் என  ஐக்கிய தேசியக் கட்சி கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எச்.எச்.ஏ.நபார்  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தலைவர் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள்,மாகாண  சபை உறுப்பினர்கள் ,உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு சவால் விடுத்துள்ளார் . ஊவா மாகாண  சபை தேர்தலை அடுத்து  அங்கு ஒரு ஆசனத்தைக் கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலையில்  ஊவா மக்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசை நிராகரித்து வாக்களித்துள்ள நிலையிலும்  மாகாண  சபை உறுப்பினர் ஜெமீல் விடுத்திருக்கும்   கிழக்கு மாகாண ஆட்சி நிறுவப்படும்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்கப்பட்ட உத்தரவாதங்களை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் பிரகடனத்திற்கு முன்னதாக அரசாங்கம் நிறைவேற்றித் தர வேண்டும். இல்லையேல் இந்த அரசாங்கத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ந்தும் பங்காளிக் கட்சியாக இருப்பதில் எவ்வித அர்த்தமுமில்லை என்ற அறிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில் இந்த சவால் நபாரால் விடுக்கப் பட்டுள்ளது . நடை பெறப் போகும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பாரிய சவாலாக அமையும் என

கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம் எடுத்திருக்கும் தீர்மானத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும்

Image
(பி.எம்.எம்.எ.காதர்;) சிலரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்காக முன்னேறிவரும் கிழக்கின் கல்வி அபிவிருத்தியை பாழ்படுத்தி விடமுடியாது. கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளரின் வினைத்திறனான பாடசாலை மேற்பார்வை,தலைமைத்துவம், விடாமுயற்ச்சி,ஆசிரிய வளங்களை சமனாக பங்கீடு செய்தல் தியாக மனப்பான்மை, சேவைமனப்பான்மை போன்ற விடையங்கள் கிழக்கு மாகாண  கல்வி முன்னேற்றத்திற்குத் தேவையாக உள்ளது. எனவே கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம் எடுத்திருக்கும் தீர்மானத்தில் மாற்றம் கொண்ட வர வேண்டும் என தெரிவித்து தேசிய கல்வி ஜனநாயக ஆசிரியர் சங்கத்தின் கல்முனை கல்வி மாவட்டக் கிளை அறிக்கையொன்றை வெளியீட்டுள்ளது. கிளையின் தலைவர் எம்.பி.ஏ.சவாஹிர், செயலாளர் எம்.எம்.எம்.நியாஸ் ஆகியோர் கையொப்பமிட்டு வெளியீட்டுள்ள அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :- கல்முனை முஸ்லிம் கல்விக் கோட்டத்தில் இருந்தும,; சாய்ந்தமருது கல்விக் கோட்டத்தில் இருந்தும் தனது பணிகளில் இருந்தும் விலகி இருப்பதாகவும், அந்தக் கோட்டங்களுக்கான நிர்வாகப் பணிகளை மேலதி மாகாணக் கல்விப்பணிபாளர் ஒருவரிடம் ஒப்படைத்திருப்பதாகவும் ஊடகங்கள் வாயில

கல்முனை சாஹிராக் கல்லூரியின் ஓய்வு பெற்ற அதிபர் ஏ பீர்முஹம்மத் எழுதிய 'விபுலாநந்த அடிகளும் முஸ்லீம்களும் '

Image
கல்முனை சாஹிராக் கல்லூரியின் ஓய்வு பெற்ற அதிபர் ஏ பீர்முஹம்மத் எழுதிய 'விபுலாநந்த அடிகளும் முஸ்லீம்களும் ' இன்று கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் வெளியீட்டு வைக்கப்பட்டது. இந் நிகழ்வு ஓய்வுபெற்ற முஸ்லீம் சமய கலாச்சார அமைச்சின் செயலாளர் எஸ்.எச்.எம் ஜெமீல் தலைமையில் நடைபெற்றது.  மருதூர் ஏ மஜீத், நூலின் முதற்பிரதியை புரவலர் ஹாசீம் உமர்,  சிறப்பு பிரதியயை கட்டடக்கலைஞர் எம்.ஜ.எம். இஸ்மாயில்,  கொழும்பு தமிழ்சங்கத்தின் தலைவர் ஆ.இரகுபதி பாலஸ்ரீதரன், செயலாளர் தம்பு சிவா, ஓய்வு பெற்ற சுங்க அதிகாரி எஸ்.எச்.எம் அலி,கோபாலகிருஷ்ணன் ஆகியோரும் உரையாற்றினார்கள். இங்கு உரையாற்றிய எஸ்.எச்.எம் ஜெமீல் தெரிவித்தாவது - விபுலாந்த அடிகளிடம் கல்விகற்ற முஸ்லீம்களான பேராசிரியர் அ.மு உவைஸ், முன்னாள் அமைச்சர் எம்.ஏ அப்துல் மஜீத். முன்னாள் தகவல்துறை பிரதியமைச்சர்(கின்னியா) ஏ.எல்.அப்துல் மஜீத்,  சம்மாந்துறை அமீர் அலி,  முன்னாள் செனட்டர் மசுர் மொளலானா, புலவர்மணி சரிபுத்தீன், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணத்தின் முன்னர்ள பணிப்பாளர்  வீ.ஏ கபூர், ஆகியோருடன் கலாநிதி - ஏ.எம்.ஏ அசீஸ், கல்முனை முன்னாள் அமைச

ஆடை வியாபாரம் செய்த இந்தியர்கள் 07பேர் நட்பிட்டிமுனையில் கைது

Image
சுற்றுலா விசாவில் இலங்கை வந்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஏழு இந்தியப் பிரஜைகள்  நேற்று (20)  கல்முனை பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு இன்று (21) விடுவிக்கப்பட்டுள்ளனர்.  மீண்டும் நாளை(22) நீதி மன்றில் ஆஜர் படுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கல்முனை பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட  நற்பிட்டிமுனை    பிரதேசத்தில்  ஆடை வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதே  குறித்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டதாக கல்முனை  பெருகுற்றத் தடுப்பு பொலிஸார்  தெரிவித்தனர்  இஸ்லாமியர்களின்  எதிர்வரும்  ஹஜ்ஜுப் பெருநாளுக்கு ஆடை விற்பனைக்கு மேலும் பல இந்தியர்கள் வருகை தந்திருப்பதாகவும்  சுற்றுலா விஸாவில்  இலங்கைக்கு வந்தவர்கள் வியாபார நடவடிக்கைகளில் ஈடு படுவது குற்றச்செயலாகும் எனவும் பொலிஸ்  அதிகாரி தெரிவித்தார்  

ஊவா தேர்தல் முடிவுகள் - ஒரே பார்வையில்

Image
வௌியாகியுள்ள ஊவா மாகாண சபைத் தேர்தல் முடிவுகளின் படி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 349906 வாக்குகளைப் பெற்று 19 ஆசனங்களை வசப்படுத்தி அமோக வெற்றி பெற்றுள்ளது.  இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி 274773 வாக்குகளைப் பெற்று 13 ஆசனங்களையும், மக்கள் விடுதலை முன்னணி 36580 வாக்குகளைப் பெற்று 02 ஆசனங்களையும் பெற்றுக் கொண்டுள்ளன.  இதன்படி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 51.25 வீத வாக்குகளையும், ஐக்கிய தேசியக் கட்சி 40.24 வீத வாக்குகளையும், மக்கள் விடுதலை முன்னணி 05.36 வீத வாக்குகளையும் வசப்படுத்தியுள்ளன.  இதேவேளை சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சி இரு மாவட்டங்களிலும் 6076 (0.89) வாக்குகளைப் பெற்றுள்ளது. எனினும் ஆசனங்கள் எதனையும் அக் கட்சியால் பெற முடியவில்லை.  பதுளை மாவட்டத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 209,056 வாக்குகளைப் பெற்று 09 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 197,708 வாக்குகளைப் பெற்று 08 ஆசனங்களையும், மக்கள் விடுதலை முன்னணி 20,625 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தையும் வசப்படுத்தியுள்ளன.  பதுளை மாவட்டம் மஹியங்கனை தேர்தல் தொகுதியின் முடிவுகள்படி 

ஊவா மாகான சபை தேர்தல் -2014 இறுதி முடிவு

Image
நேற்று நடைபெற்ற ஊவா மாகாணசபைத் தோ்தலில் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றி பெற்றுள்ளது. ஜக்கிய தேசிய கட்சி கடந்த தோ்தலை விடவும் அதிக வாக்குகளைப் பெற்றபோதும் மக்கள் விடுதலை முன்னணி பெரும் பின்னடைவை அடைந்துள்ளது. ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிக்காக வாக்களித்த ஊவா மக்களுக்கு அமைச்சர் டளஸ் அழகப்பொரும நன்றி தெரிவித்தார்.  பதுளை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புமொத்தமாக 209,056 வாக்குகளையும் ஐக்கிய தேசிய கட்சி 197,708 வாக்குகளையும் மக்கள் விடுதலை முன்னணி 20,625 வாக்குகளையும் ஜனநாயக ஐக்கிய முன்னணி5,045 வாக்குகளையும் பெற்றன. மொனராகலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புமொத்தமாக 140850 வாக்குகளையும் ஐக்கிய தேசிய கட்சி77065  வாக்குகளையும் மக்கள் விடுதலை முன்னணி 15955 வாக்குகளையும் பெற்றன.  இதன் அடிப்படையில் ஊவா மாகாண சபையில் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 2 போனஸ் ஆசனங்களுடன் சேர்த்து 19 ஆசனங்களும் ஜக்கிய தேசிய கட்சிக்கு 13 ஆசனங்களும் மக்கள் விடுதலை முன்னணிக்கு 2 ஆசனங்களும்  கிடைத்துள்ளன.      Name of the Party

ஊவா மாகாண தேர்தல்-2014 மொனராகல மாவட்ட தேர்தல் முடிவுகள்

Image
நடந்து முடிந்த ஊவா மாகாண சபைத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் மொனராகலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றிபெற்றுள்ளது.  மொனராகலை மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றிகொண்டுள்ளது.   மொனராகலை மாவட்ட மொத்த இறுதி முடிவுகள் வருமாறு-   ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 140,850 வாக்குகள் - 08 ஆசனங்கள் ஐக்கிய தேசியக் கட்சி - 77,065 வாக்குகள் - 05 ஆசனங்கள் மக்கள் விடுதலை முன்னணி - 15,955 வாக்குகள் - 01 ஆசனம் சுயேற்சைக் குழு5 - 3,781 ஜனநாயகக் கட்சி - 2,874 வாக்குகள்      Name of the Party/Independent Group No. of Votes Received Percentage  % No. of members Elected   United People's Freedom Alliance      140,850 58.34% 8   United National Party        77,065 31.92% 5   People's Liberation Front        15,955 6.61% 1   Independent Group 5          3,781 1.57%     Democratic Party          2,874 1.19%     Our National Front             202 0.08%     United Socialist Party             162 0.07%