அகில இலங்கை பாடசாலைகள் சம்பியன்களாக கல்முனைஸாஹிரா தேசியக்கல்லூரி அணி

ஸ்ரீலங்கா கிறிக்கட் மற்றும் இலங்கை பாடசாலைகள் கிறிக்கட்சம்மேளனம் ஆகியன இணைந்து அகில இலங்கைபாடசாலைகளுக்கிடையில் நடாத்திய 17 வயதுக்குட்பட்ட கடினபந்துகிறிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில்  கல்முனைஸாஹிரா தேசியக்கல்லூரி அணி 
 யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி கிறிக்கட் அணியை 4 விக்கட்டுக்களினால் தோற்கடித்து  
அகில இலங்கை பாடசாலைகள் சம்பியன்களாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை 

(21) நடைபெற்ற 50 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கிறிக்கட்டபோட்டியின்  இறுதிப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற கல்முனை ஸாஹிரா தேசியகல்லூரி அணித் தலைவர்றஸ்பாஸ் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியினை துடுப்பாடப்பணித்தார்.
முதலில் துடுப்பெடுத்தாடிய  யாழ் மத்திய கல்லூரி அணி 49ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 173  ஓட்டங்களைப்பெற்றது.பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி அணி 41  ஓவர்களில் 6  விக்கட்டுக்களை இழந்து 176 ஓட்டங்களைப் பெற்று  4  விக்கட்டுக்களினால் வெற்றி பெற்று  அகிலஇலங்கை சம்பியன்களாக தெரிவாகியுள்ளது.
பந்து வீச்சில் கல்முனை ஸாஹிரா தேசியகல்லூரி அணி சார்பில்அப்ரி 4 விக்கட்டுக்களையும் , நஜா மௌலானா 4விக்கட்டுக்களையும் , அணித்தலைவர் றஸ்பாஸ் 2விக்கட்டுக்களையும் கைப்பற்றியதுடன் நஜா மௌலானா 58ஓட்டங்களையும் பெற்றார்.
58 ஓட்டங்களையும் 4 விக்கட்டுக்களையும் கைப்பற்றிய கல்முனைஸாஹிரா தேசியகல்லூரி வீரர் நஜா மௌலானா இப் போட்டியின்சிறப்பாட்டக்காரருக்கான விருதினைப் பெற்றுக் கொண்டார்.
வெற்றி பெற்ற மாணவர்களையும் பயிற்சி வழங்கிய விளையாட்டுபொறுப்பாசிரியர் அலியார் பைஸர் உள்ளிட்ட விளையாட்டுத் துறைஆசிரியர்களுக்கும் கல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் ,பிரதிஅதிபர்கள் , உதவி அதிபர்கள் , ஆசிரியர்கள் , மாணவர்கள் ,விளையாட்டு அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் , பழைய மாணவர்சங்கம் , பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும்  நலன்விரும்பிகள் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும்தெரிவித்துள்ளனர்.

Comments

Popular posts from this blog

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்