கல்முனை சாஹிராக் கல்லூரியின் ஓய்வு பெற்ற அதிபர் ஏ பீர்முஹம்மத் எழுதிய 'விபுலாநந்த அடிகளும் முஸ்லீம்களும் '
கல்முனை சாஹிராக் கல்லூரியின் ஓய்வு பெற்ற அதிபர் ஏ பீர்முஹம்மத் எழுதிய 'விபுலாநந்த அடிகளும் முஸ்லீம்களும் ' இன்று கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் வெளியீட்டு வைக்கப்பட்டது.
இந் நிகழ்வு ஓய்வுபெற்ற முஸ்லீம் சமய கலாச்சார அமைச்சின் செயலாளர் எஸ்.எச்.எம் ஜெமீல் தலைமையில் நடைபெற்றது. மருதூர் ஏ மஜீத், நூலின் முதற்பிரதியை புரவலர் ஹாசீம் உமர், சிறப்பு பிரதியயை கட்டடக்கலைஞர் எம்.ஜ.எம். இஸ்மாயில், கொழும்பு தமிழ்சங்கத்தின் தலைவர் ஆ.இரகுபதி பாலஸ்ரீதரன், செயலாளர் தம்பு சிவா, ஓய்வு பெற்ற சுங்க அதிகாரி எஸ்.எச்.எம் அலி,கோபாலகிருஷ்ணன் ஆகியோரும் உரையாற்றினார்கள்.
இங்கு உரையாற்றிய எஸ்.எச்.எம் ஜெமீல் தெரிவித்தாவது -
விபுலாந்த அடிகளிடம் கல்விகற்ற முஸ்லீம்களான பேராசிரியர் அ.மு உவைஸ், முன்னாள் அமைச்சர் எம்.ஏ அப்துல் மஜீத். முன்னாள் தகவல்துறை பிரதியமைச்சர்(கின்னியா) ஏ.எல்.அப்துல் மஜீத், சம்மாந்துறை அமீர் அலி, முன்னாள் செனட்டர் மசுர் மொளலானா, புலவர்மணி சரிபுத்தீன், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணத்தின் முன்னர்ள பணிப்பாளர் வீ.ஏ கபூர், ஆகியோருடன்
கலாநிதி - ஏ.எம்.ஏ அசீஸ், கல்முனை முன்னாள் அமைச்சர் எம்.எஸ் காரியப்பர் போன்றோர்களும் மிக ஜக்கியமாகவும் நெருங்கி கல்வி அரசியல் நிரவாகத்திலும் அடிகலாரும் நெருங்கி பழகியுள்ளனர்.
விபுலாநந்த அடிகள் முஸ்லீம்களின் கல்வி, அரசியலில் நெருங்கி சேவை செய்துள்ளார். விபுலாநாந்த அடிகள் கரைதீவைப் பிறப்பிடமாக்க கொண்டு அப்பிரதேசத்தினை அண்டிய முஸ்லீம் பிரதேசத்தில் வாழும் முஸ்லீம்களுக்கும் கல்விப்பணிகளைச் செய்துள்ளார். அவரது மாணவர்கள் மிகவும் திறம்பட கல்வித்துறையில் சிறந்து விளங்கினார்கள்.
விபுலாநந்த அடிகள் காரைதீவினை பிறப்பிடமாகக் கொண்டவர், மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டிதர், காமராஜ் பல்கலைக்கழக உபவேந்தர், தமிழ் பேசும் நல்லுலகின் முதல் தமிழ்ப் பேராசிரியர், முத்தமிழ் வித்தகர், அரபுத் தமிழ் அறிந்திருந்தார், துறவியாகவும், நூற்றுக்கும் மேற்பட்ட நூலாசிரியர், கிழக்கிலங்கையின் தவப்புதல்வராகவும் இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால் எல்லோராலும் கௌரவிக்கப்பட்ட ஒரு மாமணிதராகவும் வாழ்ந்து இப்பூவுலகின் தன்பணி முடித்து 19.07.1947இல் இறைவனடி சேர்ந்தார்.
Comments
Post a Comment