முடிந்தால் அரசை விட்டு SLMC விலகிக் காட்டடும் -மாநகரசபை உறுப்பினர் நபார் சவால்


முடிந்தால் அரசாங்கத்தை விட்டு ஸ்ரீ லங்கா முஸ்லிம்  காங்கிரஸ்   விலகிக் காட்டடும் என  ஐக்கிய தேசியக் கட்சி கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எச்.எச்.ஏ.நபார்  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தலைவர் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள்,மாகாண  சபை உறுப்பினர்கள் ,உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு சவால் விடுத்துள்ளார் .

ஊவா மாகாண  சபை தேர்தலை அடுத்து  அங்கு ஒரு ஆசனத்தைக் கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலையில்  ஊவா மக்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசை நிராகரித்து வாக்களித்துள்ள நிலையிலும்  மாகாண  சபை உறுப்பினர் ஜெமீல் விடுத்திருக்கும்  கிழக்கு மாகாண ஆட்சி நிறுவப்படும்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்கப்பட்ட உத்தரவாதங்களை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் பிரகடனத்திற்கு முன்னதாக அரசாங்கம் நிறைவேற்றித் தர வேண்டும். இல்லையேல் இந்த அரசாங்கத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ந்தும் பங்காளிக் கட்சியாக இருப்பதில் எவ்வித அர்த்தமுமில்லை என்ற அறிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில் இந்த சவால் நபாரால் விடுக்கப் பட்டுள்ளது .
நடை பெறப் போகும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பாரிய சவாலாக அமையும் என்பதை ஊவா தேர்தல் எடு கோளாக  காட்டி நிற்கின்றது .ஜனாதிபதி தேர்தலுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு தேவையாக இருக்குமா என்பதில் கேள்விகள் பல இருக்கின்றன . எது எவ்வாறாக இருந்த போதும்  ஜனாதிபதி தலமையிலான அரசுடன் ஒட்டி உறவாடும் நிலையில் ரவுப் ஹக்கீமும்  மற்றும் கட்சி முக்கியஸ்தர்களும் இருப்பதால் ஜெமீலின்  இந்த அறிக்கை ஊவா தேர்தல் முடிவை மக்கள் மத்தியில் மறைப்பதற்கான  ஒரு விடயமே தவிர வேறு எதுவும் இல்லை .

கல்முனை பிரதேச செயலாளரை நியமிக்க முடியாமலும் ,நிபந்தைப்படி கிழக்கு முதல்வரை பெற்றுக் கொள்ள முடியாமலும்  திண்டாடும் நிலையில் கரையோர மாவட்டத்தை முன் வைத்து அரசுடன் ஒட்டியிருப்பதற்கான  ஒரு நாடகமே இந்த அறிக்கையாகும் என நபார் மேலும் தெரிவித்துள்ளார் .

மக்கள் மத்தியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செல்லாக் காசாக மாறிவிட்டதை இன்னும் இவர்கள் உணராமல் இருக்கின்றனர். சமீபத்தில் மர்ஹூம் அஸ்ஸஹீத்  அஸ்ரப் அவர்களின்14 வது நினைவு தினம் சாய்ந்தமருதில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் மத்திய குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டு பரடைஸ் மண்டபத்தில் இடம் பெற்ற போது அதில் கலந்து கொண்டவர்கள் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே ஆகும் . தலைவரின் நினைவு தினத்துக்கு கூட இவர்கள் அழைத்தால் மக்கள் இவர்களது அழைப்பை நிராகரிப்பது தெளிவாகி விட்டது . இவ்வாறன நிலை இருக்கும் போது  இவ்வாறான அறிக்கைகளை விட்டு மக்களை முட்டாளாக மாற்ற நினைப்பது சமுகத்துக்கு செய்யும் துரோகமாகும். 

Comments

Popular posts from this blog

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்