ஆடை வியாபாரம் செய்த இந்தியர்கள் 07பேர் நட்பிட்டிமுனையில் கைது


சுற்றுலா விசாவில் இலங்கை வந்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஏழு இந்தியப் பிரஜைகள்  நேற்று (20)  கல்முனை பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு இன்று (21) விடுவிக்கப்பட்டுள்ளனர்.  மீண்டும் நாளை(22) நீதி மன்றில் ஆஜர் படுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


கல்முனை பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட  நற்பிட்டிமுனை  பிரதேசத்தில்  ஆடை வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதே  குறித்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டதாக கல்முனை  பெருகுற்றத் தடுப்பு பொலிஸார்  தெரிவித்தனர் 



இஸ்லாமியர்களின் எதிர்வரும்  ஹஜ்ஜுப் பெருநாளுக்கு ஆடை விற்பனைக்கு மேலும் பல இந்தியர்கள் வருகை தந்திருப்பதாகவும்  சுற்றுலா விஸாவில்  இலங்கைக்கு வந்தவர்கள் வியாபார நடவடிக்கைகளில் ஈடு படுவது குற்றச்செயலாகும் எனவும் பொலிஸ்  அதிகாரி தெரிவித்தார்  

Comments

Popular posts from this blog

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்