Posts

தேசிய வீடமைப்பு அதிகார சபையின் கல்முனை நகர கிளைக் காரியாலயத்தை இடமாற்ற நினைத்துக் கூட பார்க்கவில்லை ஹரீஸிடம் சஜித் தெரிவிப்பு

Image
(அகமட் எஸ். முகைடீன்) தேசிய வீடமைப்பு அதிகார சபையின் கல்முனை நகர கிளைக் காரியாலயத்தை இடமாற்றம் செய்வதற்கு நினைத்துக்கூட பார்க்கவில்லை எனக் கூறியதோடு அக்காரியாலயம் எக்காரணம் கொண்டும் இடமாற்றப்படமாட்டாது என்று வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளதாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் தெரிவித்தார். கல்முனையில் செயற்பட்டுவரும் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் நகரக் கிளைக் காரியாலயத்தை மூடும்வகையில் குறித்த காரியாலய முகாமையாளருக்கு பதவி உயர்வு வழங்கி இடமாற்றம் செய்திருப்பதாகவும் அதனைத் தொடர்ந்து அம்பாறைக்கு அக்காரியாலயம் இடமாற்றம் செய்யவிருப்பதாகவும் இணையத் தளங்களிலும் முகநூல்களிலும் வெளிவந்துள்ள செய்தி தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவை தொடர்பு கொண்டு வினவியது தொடர்பில் கருத்துரைக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த நாட்டில் மிகவும் பொறுப்பு வாய்ந்த அரசியல் தலைவராக சிறுபான்மை மக்

நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மகா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் மினா இல்லம் வெற்றி

Image
ஒரு தசாப்தத்தின் பின்னர் நடை  பெற்ற நற்பிட்டிமுனை அல் -அக்ஸா  மகா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில்  மினா இல்லம் வெற்றிவாகை சூடிக் கொண்டது.  கல்லூரி அதிபர் எம்.எல்.ஏ.கையூம் தலைமையில் கடந்த சனிக்கிழமை இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வுகள் நற்பிட்டிமுனை தலைவர் அஷ்ரப் மைதானத்தில் நடை பெற்றது.  இந்த இல்ல விளையாட்டுப் போட்டியில்  மூன்று இல்லங்கள் கலந்து கொண்டன பச்சை நிற மினா இல்லம் , சிவப்பு  நிற ஸபா இல்லம் ,நீல நிற அரபா  இல்லம் . போட்டிகளின் அடிப்படையில் 694 புள்ளிகளைப்  பெற்று பச்சை நிற மினா இல்லம் முதலாம் இடத்தையும், 667 புள்ளிகளைப் பெற்று நீல நிற அரபா இல்லம் இரண்டாம் இடத்தையும் , 530 புள்ளிகளைப்  பெற்று சிவப்பு நிற சபா இல்லம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டன  நடை பெற்ற  இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வில் கிழக்கு மாகாண கல்விப்  பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிஸாம்  பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார் , கல்முனை வலையாக கல்வித் பணிப்பாளர் எம்.எஸ்.ஆயத்துல் ஜலீல் உட்பட பிரதிக்கல்வித் பணிப்பாளர்கள் ,உதவிக்கல்விப் பணிப்பாளர்கள் ,கோட்டக்  கல்விப்  பணிப்ப

கல்முனையில் களேபரம் !சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிய ஆர்ப்பாட்டம் !!

Image
மாலபே சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதனை உடனடியாக மூடிவிடுமாறு கோரியும் இன்று அம்பாறை மாவட்டத்தில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி இடம் பெற்றது. அம்பாறை மாவட்ட அரச மருத்துவ மாணவர்கள் சங்கம் ஏற்பாடு செய்த இந்த மாபெரும் எதிர்ப்பு பேரணி கல்முனையில் நடை பெற்றது. சங்கத்தின் தலைவர் எம்.நிதர்சனன் தலைமையில் இடம் பெற்ற இந்த ஆர்ப்பாட்ட எதிரப்பு பேரணி கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை முன்பாக ஆரம்பித்து கல்முனை வடக்கு அதார வைத்தியசாலை வரை சென்று மீன்டும் கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதான முன்றலில் பொதுக்கூட்டமும் நடை பெற்றது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்  பல் வைத்திய நிபுணர்கள் சங்கம், அரச ஆயுர்வேத மருத்துவ அதிகாரிகள் சங்கம் , இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் அம்பாறை மாவட்ட  முன்னணி சமூக சேவைகள் அமைப்புகளும் இணைந்து பங்கு கொண்ட இந்த எதிப்பு பேரணியில் ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் பங்குபற்றி தங்கள் எதிர்ப்பினை தெரிவித்தனர். சுதந்திரமான மருத்துவ நலனில் தலையிடவேண்டாம், சுதந்திர மருத்துவக் கல்வியை வியாபாரம் செய்ம்யும்  ராஜித, எஸ்பி, கி

''முஸ்லிம் வாக்குகளைப் பெற்று சமூகத்துக்கு எதிராக சதி! "

Image
ந.தே.முவின் கருத்துக்கு ஹிஸ்புல்லாஹ் கடும் விசனம் (ஆர்.ஹஸன்) முஸ்லிம்களுக்கு தென்கிழக்கு அலகு வழங்கக் கூடாது என்பதில் தமிழர்கள் உறுதியாக இருக்க வேண்டும் என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி குறிப்பிட்டுள்ள கருத்தை வன்மையாகக் கண்டித்த இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், வடக்கு கிழக்கு இணைய வேண்டும் அது இயற்கையானது என அது குறிப்பிட்டுள்ள கருத்துக்கு முடியுமானால் ஒரு நியாயமான காரணத்தை முன்வைக்குமாறும் சவால்விடுத்தார்.   இதேவேளை, முஸ்லிம் வாக்குகளைப் பெற்று சமூகத்துக்கு எதிரான துரோக செயல்களில் ஈடுபடும் வெளிசக்திகளால் இயக்கப்படும் ந.தே.மு.,  சமூகத்தின் உரிமைப்பற்றி பேசுவதற்கு எந்த அதிகாரமும் இல்லை எனவும் இராஜாங்க அமைச்சர் கடுமையாக சாடினார்.  காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.  அவர் அங்கு மேலும் கூறியதாவது,  இணைந்த வடகிழக்கில் முஸ்லிம்கள் சொல்லன்னா துயரங்களை அனுபவித்தனர். ஆயிரக்கணக்கான உயிர்களையும், கோடிக்கணக்கான சொத்துக்களையும் இழந்தனர்.  கடந்த ஆட்சிக்காலத்தில் உயர் நீதிமன்ற

நற்பிட்டிமுனை எஸ். மீராலெவ்வை போடியார் காலமானார்

Image
நற்பிட்டிமுனை எஸ். மீராலெவ்வை போடியார் காலமானார் . (நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மகா வித்தியாலய அதிபர் எம்.எல்.ஏ.கையூம் அவர்களின் தந்தை) இன்று 2017.05.06 சனிக்கிழமை மாலை நற்பிட்டிமுனை இல்லத்தில் மரணமடைந்தார் . அன்னாரின் ஜனாஸா நாளை ஞாயிற்றுக் கிழமை காலை 7.00மணிக்கு நற்பிட்டிமுனை மையவாடியில் அடக்கம் செய்யப் படும்

சுதந்திரமும் கௌரவமும் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ள பலஸ்தீன சிறைக் கைதிகள்

Image
கடந்த பல வருடங்களாக இஸ்ரேல் நூற்றுக்கணக்கான பலஸ்தீனியர்களை சிறையில் வைத்திருக்கின்றது. சிலர் பல தசாப்தங்களாகவும் மற்றும் சிலர் சில மாதங்களாகவும் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். 1967ஆம் ஆண்டு முதல் மேற்குக் கரை, கிழக்கு ஜெருஸலம், காஸா பள்ளத்தாக்கு ஆகிய பிரதேங்களைச் சேர்ந்த 8 இலட்சத்துக்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் இஸ்ரேல் சிறையில் வைக்கப்பட்டிருந்ததாக பலஸ்தீன் தெரிவிக்கின்றது.  இந்த எண்ணிக்கையானது மொத்த பலஸ்தீன  சனத் தொகையில் 20 சதவீதமாகும். பலஸ்தீன ஆண்களில் 40 சதவீதமானோர் சிறைக்கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். ஒவ்வொரு பலஸ்தீனக் குடும்பத்திலும் குறைந்த பட்சம் ஒருவராவது இவ்வாறு சிறையில் வைக்கப்பட்டிருந்தனர். உலகிலே அரசியல் காரணங்களுக்காக ஆகக் கூடுதலானோர் சிறை வைக்கப்பட்டிருக்கும் நாடாக இஸ்ரேல் காணப்படுகின்றது.  2017ஆம் ஆண்டு ஆரம்பம் முதல் 1597 பலஸ்தீனர்கள்  கைது செயப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் 46 பெண்களும் 18 வயதிற்குக் குறைந்த 311 சிறுவர்களும் அடங்குவர். இப்போது இஸ்ரேலின் சிறைகளில் 6500 பலஸ்தீனர்கள் இருக்கிறார்கள்.  பலஸ்தீனர்கள் தமது தாயகத்தை மீட்பதற்காக நடத்திவரும் போ

ஐக்கிய நாடுகள் வெசாக் வைபவம் - புதன்கிழமை முதல் அரச தலைவர்கள் வருகை

Image
ஐக்கிய நாடுகள் வெசாக் வைபவத்தில் கலந்து கொள்ளும் அரச தலைவர்கள் மற்றும் அரச பிரதிநிதிகள் எதிர்வரும்; இலங்கை வரவுள்ளனர்.  இந்த வைபவத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார். இவர் வியாழக்கிழமை இலங்கை வரவுள்ளார்.    இறுதி வைபவத்தில் பிரதம அதிதியாக நோபாள ஜனாதிபதி திருமதி பித்யா தேவி பண்டாரி  ( Bidhya Devi Bhandari )   எதிர்வரும் சனிக்கிழமை இலங்;கை வரவுள்ளார். ஐக்கிய நாடுகள் வெசாக் தின வைபவத்தின் இறுதி நிகழ்வு எதிர்வரும் 14ம் திகதி கண்டியில் இடம்பெறவுள்ளது. மேலதிகமாக 8 நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் அடங்கலாக 750 வெளிநாட்டுப் பிரதிநிதிகள் இதில் கலந்து கொள்ள உள்ளனர். இவர்கள் எதிர்வரும் 10ம் திகதி முதல் 11ம் திகதி வரையில் இலங்கை வரவுள்ளனர்.    தேரர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக புத்தசாசன அமைச்சின் உதவி செயலாளர் பந்துல ஜயசிங்ஹ தெரிவித்துள்ளார்.    இந்த வைபவத்திற்கு அமைவாக, பௌத்த நிகழ்ச்சிகளில் 500 பிக்குமார்கள் கலந்துகொள்ள உள்ளனர். இவர்களுக்கான தான நிகழ்வும் ஏற்ப

கல்முனை அக்கரைப் பற்று பிரதான வீதியில் வாகன விபத்து

Image
கல்முனை அக்கரைப் பற்று பிரதான வீதியில் கல்முனை அஸ்ரப் வைத்தியசாலைக்கு அருகாமையில் 12.05மணிக்கு வாகன விபத்து இடம் பெற்றுள்ளது. கல்முனை நோக்கி வந்த லொறி ஒன்று மின் கம்பத்துடன் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது . காயமடைந்த நிலையில் லொறி சாரதியும் உதவியாளரும் அஸ்ரப் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப் பட்டுள்ளனர்

8 பேரின் வாகன கொள்வனவுக்கு ரூபா 33 கோடி குறைநிரப்பு பிரேரணை

Image
எட்டு பேருக்கு வாகனங்கள் கொள்வனவு செய்வதற்கான   ரூபா 32 கோடி 98 இலட்சம், குறைநிரப்பு பிரேரணை ஒன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.   அமைச்சர்கள் 06 பேர், ஆளுநர் ஒருவர், பிரதமரின் செயலாளர் ஒருவர் உள்ளிட்ட 08 பேருக்கு வாகனங்களை கொள்வனவு செய்வதற்காகவே குறித்த  குறைநிரப்பு பிரேரணை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒரு தலைமைத்துவத்தின் கீழ் ஒன்றிணையாவிட்டால் பிரச்சினைகளுக்கு என்றுமே தீர்வு காண முடியாது

Image
இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் எச்சரிக்கை  ++++++++++++++++++++++++++++++ ++++++++++++++++++++++  (ஆர்.ஹஸன்) அரசியலுக்கு அப்பால் சமூகம் என்ற ரீதியில் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். ஒற்றுமைப்பட்டு ஒரு தலைமைத்துவத்தின் கீழ் இந்த சமூதாயம் ஒன்றிணையாதுவிட்டால் எமது பிரச்சினைகளுக்கு என்றுமே தீர்வு காண முடியாது போய்விடும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் எச்சரிக்கை விடுத்தார்.  இதேவேளை, சமூகத்தை ஒற்றுமைப்படுத்தும் பாரிய பொறுப்பு உலமாக்களுக்கு உள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், அதற்காக குத்பாக்களை பயன்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.  காத்தான்குடி, ஜாமியதுல் ஜமாலியா அறபுக் கல்லூரியின் அல் மர்ஹ{ம் மீரான் முபீன் ஆலிம் மண்டப திறப்பு விழா இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.  அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது, ஒருவரை ஒருவர் விமர்சிப்பதாலோ, குறைகூறுவதனாலோ, குற்றம்சாட்டுவதனாலோ நாங்கள் எதிர் நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியா

நற்பிட்டிமுனை அல் - அக்ஸா மகா வித்தியாலய இல்ல விளையாட்டுப் போட்டி

Image
அல் - அக்ஸா மகா வித்தியாலய இல்ல விளையாட்டுப் போட்டி 11 வருடங்களின் பின்னர் நாளை சனிக்கிழமை (06) நற்பிட்டிமுனை அஸ்ரப் விளையாட்டு மைதானத்தில் நடை பெறவுள்ளது. நற்பிட்டிமுனை மாணவர்களுக்கு விளையாட்டு மைதானம் ஒன்று இல்லாத நிலையில் 1993ஆம் ஆண்டு கல்லூரியின் அதிபராக இருந்த எஸ்.எச்.சமட் எடுத்துக் கொண்ட பெரு முயற்சி காரணமாக நற்பிட்டிமுனை இளைஞர்க ளின் விளையாட்டு ஆசையை நிறைவேற்றும் வகையில் முஸ்லீம் மையவாடியை மைதானமாக்கி அன்று முல்லைத்தீவு மாவட்ட அமைச்சராகவிருந்த கல்முனை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.மன்சூரை பிரதம அதிதியாக அழைத்து இற்றைக்கு 24 ஆண்டுகளுக்கு முன்னர் மிக கோலாகலமாக அந்த இல்ல விளையாட்டுப் போட்டியை நடாத்திவைத்தார் . அந்த நிகழ்வு இன்றும் நற்பிட்டிமுனை மக்களால் மறக்கப்பட முடியாத நிகழ்வாகவும் பாராட்டக் கூடிய அதிபராக சமட் அதிபர் விளங்குகிறார் . இதன் பின்னர் 2004 ஆம் ஆண்டு அதிபராக இருந்த ஏ.எம்.ஜமால்தீன் 11 ஆண்டுகளின் பின்னர் நற்பிட்டிமுனைக்கென அமர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபினால் அடையாளப் படுத்தப்பட்ட அஸ்ரப் மைதானத்தில் இல்ல விளையாட்டுப் போட்டியொன்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பாதுகாப்பு குறைப்பு

Image
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டிருப்பது குறித்து ஒன்றிணைந்த எதிரணி நேற்று சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு வந்தது. இது தொடர்பாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கவுடன் பேசி தேவையான நடவடிக்கை எடுப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய சபைக்கு அறிவித்தார். முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு குறைக்கப்பட்டது தொடர்பில் தினேஷ் குணவர்தன எம். பி. சபையின் கவனத்திற்கு கொண்டு வந்தார். இங்கு உரையாற்றிய தினேஷ் குணவர்தன எம். பி.- முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்டிருந்த 45 பாதுகாப்பு படையினர் நீக்கப்பட்டுள்ளனர். இதற்கு முன்னரும் இராணுவ பாதுகாப்பு நீக்கப்பட்டது. தற்பொழுது அதிரடிப்படை மற்றும் பொலிஸ் பாதுகாப்பு மட்டுமே வழங்கப்படுகிறது. பாதுகாப்பு குறைக்கப்பட்டதால் அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் பாராளுமன்றம் கவனம் செலுத்த வேண்டும். இது தொடர்பில் நான் பிரதமருடனும் அமைச்சர் சாகல ரத்நாயக்கவுடனும் பேசினேன். அரசியல் குரோத நோக்கிலே பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. அநுரகுமார திசாநாயக்க- (ஜே. வி. பி) மேத

சைற்றம் எதிர்ப்பு பேரணி கல்முனையில்

Image
அம்பாறை மாவட்ட  அரச மருத்துவ மாணவர்கள்   சங்கம் ஏற்பாடு செய்துள்ள  சைற்றம்  எதிர்ப்பு பேரணி கல்முனையில் நடை பெறவுள்ளது. சைற்றத்தை ஒழிப்போம் என்ற தொனிப் பொருளில் அம்பாறை மாவட்ட  அரச மருத்துவ மாணவர்கள்   சங்கதினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள  எதிர்ப்பு பேரணி ஊர்வலம்   ஞாயிற்றுக் கிழமை (07)  காலை 8.00மணி தொடக்கம் 12.00மணிவரை நடை பெறவுள்ளதுடன்  கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை முன்பாக  எதிர்ப்பு ஊர்வலம் ஆரம்பித்து  கல்முனை  சந்தாங்கேணி மைதானம் வரை எதிர்ப்பு தெரிவிக்கும் ஊர்வலமாக செல்லவுள்ளதாக அம்பாறை மாவட்ட  அரச மருத்துவ மாணவர்கள்   சங்க செயலாளர் ஏ.எல்.வசீம் அகமட் தெரிவித்துள்ளார் . இந்த எதிர்ப்பு பேரணியில்  அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்,அரச பல் வைத்திய நிபுணர்கள் சங்கம்,அரச ஆயுர்வேத மருத்துவ  அதிகாரிகள் சங்கம்,இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் அம்பாறை  மாவட்டதில் உள்ள  முன்னணி சமூக சேவை அமைப்புக்கள் பலவும் பங்கு பற்றவுள்ளதாக அரச மருத்துவ மாணவர்கள்   சங்க செயலாளர் ஏ.எல்.வசீம் அகமட் மேலும் தெரிவித்துள்ளார் .

மேதின விநோத உடை நிகழ்வு

Image
(பி.எம்.எம்.ஏ.காதர்) மேதினத்தை முன்னிட்டு மருதமுனை ஹவூஸ் ஒப் இங்கிலிஸ் முன்பள்ளி ஏற்பாடு செய்த மாணவர்களின் விநோத உடை நிகழ்வு  திங்கள் கிழமை மாலை(01-05-2017)மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் பாடசாலையின் முகாமையாளர் சுமைய்யா ஜெஸ்மி தலைமையில் நடைபெற்றது இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட பறக்கத் டெக்ஸ் பிறைவட் லிமிட்டட் நிறுவணத்தின் முகாமைத்துவப்  பணிப்பாளர் எம்.ஐ.அப்துல் பரீட் மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்  பாடசாலையின் தலைவர் ஊடகவியலாளர் ஜெஸ்மி எம். மூஸா மற்றும் அதிதிகளும் கலந்து கொண்டனர்.

நாட்டின் நிலை கருதி வேலைநிறுத்தத்தில் குதிக்க வேண்டாம்

Image
டெங்கு, சீரற்ற காலநிலை, போன்றவற்றால் நாடு முழுவதிலும் பல்வேறு நோய்கள் பரவி வரும் நிலையில், வேலைநிறுத்தத்தில் குதிப்பது நியாயமானதா என்பது தொடர்பில் மேலும் ஒரு முறை சிந்திக்குமாறு பாவனையாளர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.   அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திடம் குறித்த வேண்டுகோளை எழுத்து மூலம் விடுத்துள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.   சைட்டம் (SAITM) தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக, நாடு தழுவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால்  நாளை (05) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வேலை நிறுத்த போராட்டத்தை கைவிடுமாறு கோரும் விதத்தில், குறித்த எழுத்து மூலமான வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   நாடு முழுவதிலுமுள்ள அரசாங்க வைத்தியசாலைகள் அனைத்திலும், கட்டில் ஒன்றை பெற முடியாத அளவிற்கு, டெங்கு நோயாளர்கள் அதிகரித்துள்ளதாகவும், தனியார் வைத்தியசாலைகளும் டெங்கு நோயாளர்களால் நிரம்பி வழிவதாகவும், அச்சங்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே சுட்டிக்காட்டியுள்ளார்.   எனவே, நாட்டில் தற்போது காணப்படும் நிலையை கருத்திற்கொண்டு, நாளை (05) மேற்

2017 க.பொ.த. (சா/த) பரீட்சை விண்ணப்பம் (மாதிரி படிவம்)

Image
இவ்வருடத்திற்கான (2017) கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றுவோரிடமிருந்து இன்று முதல் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.   பரீட்சைக்கு தோற்றவுள்ளோர், இன்று (04) முதல் எதிர்வரும் மே 31 ஆம் திகதி வரையான காலப் பகுதிக்குள், தங்களது விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.   இவ்வருடம் எதிர்வரும் டிசம்பர் 12 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.   பாடசாலை பரீட்சார்த்திகளுக்கான விண்ணப்ப படிவங்கள், தபால் மூலம் அதிபர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதோடு, தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான மாதிரி விண்ணப்ப படிவங்கள் மற்றும் பரீட்சை நிலையங்கள் தொடர்பான விபரங்கள் இன்றைய (04) தினகரன் பத்திரிகையில் பார்வையிடலாம்.   பழைய பாடத்திட்ட விண்ணப்பபடிவத்தின் மாதிரி   புதிய பாடத்திட்ட விண்ணப்பபடிவத்தின் மாதிரி   பரீட்சை நிலையங்கள் தொடர்பான விபரங்களை இன்றைய தினகரனின் 19 ஆம், 21 ஆம் பக்கங்களில் காணலாம்.   விசேட தேவையுடைய மாணவர்களுக்கான சலுகை விண்ணப்ப படிவத்தின் மாதிரி...    

கணித, விஞ்ஞான பாடங்களை கற்பிக்க இந்தியாவில் இருந்து ஆசிரியர்கள் - கல்வி இராஜாங்க அமைச்சர்

Image
மலையக பாடசாலைகளில் கணித, விஞ்ஞான பாடங்களை கற்பிக்க இந்தியாவில் இருந்து ஆசிரியர்கள் அழைத்து வரப்படவிருப்பதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வி. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.   இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் ஊடாக இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இராஜாங்க  அமைச்சர் கூறினார்.   அவர் பெருந்தோட்டப் பாடசாலைகள் தொடர்பான கலந்துரையாடலில் கருத்து வெளியிட்டார். இந்தக் கலந்துரையாடல் நேற்று கல்வி அமைச்சின் மீபே தேசிய கல்வி நிறுவகத்தில் இடம்பெற்றது. இதில் புள்ளி விபரங்களை வெளியிட்ட இராஜாங்க அமைச்சர் மலையகத்தில் உன்ள 25 கணித, விஞ்ஞான பாடசாலைகளும், 35பாடசாலைகளும் அபிவிருத்தி செய்யப்படும். இவற்றுக்கு போதிய வசதிகளை பெற்றுக்கொடுக்க முடிந்தபோதிலும், கணித விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்களை பெறுவது கடினமாக உள்ளதென தெரிவித்தார். இது பற்றி இந்திய உயாஸ்தானிகராலயத்துடன் பேசி ஆசிரியர்களை தருவிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

விசேட தேவை மாணவர்களின் தேவைகளை கண்டறிய கல்முனை வலயக் கல்வி அலுவலகத்துக்கு ஜப்பான் குழு வருகை

Image
கல்முனை கல்வி வலய பாடசாலைகளில்  கல்வி கற்கும்  விசேட தேவையுடைய மாணவர்களின்  செயற்பாடும் அவர்களுக்கான பயிற்சி தொடர்பாகவும் ஆராயும் பொருட்டு கல்முனை  வலயக்கல்வி அலுவலகத்தில் இன்று சந்திப்பொன்று இடம் பெற்றது.  அலுவலகத்துக்கு   வருகைதந்த  ஜப்பான் நாட்டு  ஜெய்க்கா  தூதுக்குழுவினர் முகாமைத்துவத்துக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மௌலானாவுடன் கலந்துரையாடல்  நடாத்தி   விசேட தேவை மாணவர்களின்  தேவைகளை கண்டறிய பாடசாலைகளுக்கும் சென்றனர்

விரைவில் அமையவுள்ள மஹிந்த அரசின் பங்காளிகளாக வர முஸ்லிம்களுக்கு அஸ்வர் அழைப்பு

Image
( எம்.எஸ்.எம்.ஸாகிர்) கூட்டு எதிர்க்கட்சி மே தினக் கூட்டத்திற்கு அலையெனத் திரண்டு வந்த மக்கள் வெள்ளமானது மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் விரைவில் அரசு ஒன்று உருவாவதனை உறுதி செய்துள்ளது. அவ்வாறு உருவாகும் அரசில் பங்காளிகளாக மாறுமாறு அனைத்து முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் முற்போக்கு முன்னணி அழைப்பு விடுப்பதாக அதன் செயலதிபர் ஏ. எச். எம். அஸ்வர் தெரிவித்தார். நேற்றுக் காலை கூட்டு எதிர்க்கட்சி சார்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில் , மே தினத்திற்குப் பிறகு இந்த நாட்டு மக்களினுடைய எண்ணங்கலெல்லாம்  மஹிந்த ராஜபக்ஷ மீது  திரும்பியுள்ளது. சரித்திரத்திலே இவ்வளவு மக்கள் வெள்ளம் கூடிய ஒரு மேதினம் ,  இடது சாரி கட்சிகள் மிகவும் பிரபல்யம் பெற்றிருந்த காலத்தில் கூட ,  ஏன் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கூட நடக்கவில்லை. அன்று காலி முகத்திடலில் இருந்து பார்க்கும் போது இந்தியக் கடல் பெரிதா அல்லது மைதானத்தில் கூடி இருந்த மக்கள் வெள்ளம் பெரிதா என்ற மலைப்பு பார்ப்போருக்கு ஏற்பட்டது. இதனால் இன்று மஹிந