ஐக்கிய நாடுகள் வெசாக் வைபவம் - புதன்கிழமை முதல் அரச தலைவர்கள் வருகை

ஐக்கிய நாடுகள் வெசாக் வைபவத்தில் கலந்து கொள்ளும் அரச தலைவர்கள் மற்றும் அரச பிரதிநிதிகள் எதிர்வரும்; இலங்கை வரவுள்ளனர். 
இந்த வைபவத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார். இவர் வியாழக்கிழமை இலங்கை வரவுள்ளார். 
 
இறுதி வைபவத்தில் பிரதம அதிதியாக நோபாள ஜனாதிபதி திருமதி பித்யா தேவி பண்டாரி (Bidhya Devi Bhandari எதிர்வரும் சனிக்கிழமை இலங்;கை வரவுள்ளார். ஐக்கிய நாடுகள் வெசாக் தின வைபவத்தின் இறுதி நிகழ்வு எதிர்வரும் 14ம் திகதி கண்டியில் இடம்பெறவுள்ளது.
மேலதிகமாக 8 நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் அடங்கலாக 750 வெளிநாட்டுப் பிரதிநிதிகள் இதில் கலந்து கொள்ள உள்ளனர். இவர்கள் எதிர்வரும் 10ம் திகதி முதல் 11ம் திகதி வரையில் இலங்கை வரவுள்ளனர். 
 
தேரர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக புத்தசாசன அமைச்சின் உதவி செயலாளர் பந்துல ஜயசிங்ஹ தெரிவித்துள்ளார். 
 
இந்த வைபவத்திற்கு அமைவாக, பௌத்த நிகழ்ச்சிகளில் 500 பிக்குமார்கள் கலந்துகொள்ள உள்ளனர். இவர்களுக்கான தான நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கண்டி மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு மற்றும் சபாநாயகரின் உத்தியோகபூரவ இல்லத்தை தொடர்புபடுத்தி இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்ததொடர் நிகழ்ச்சி எதிர்வரும் 10ம் திகதி ஆரம்பமாகும். 
சர்வதேச வெசாக்தின வைபவத்திற்கு அமைவாக நடைபெறும் 'தியத்த உயன' வெசாக் வலயம் எதிர்வரும் 10ம் திகதி மாலை 6.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. அன்றைய தினம் இரவு 7.30ற்கு தானம் வழங்கும் நிகழ்வும் இடம்பெறும். இந்த தான நிகழ்வு 14ம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது