Posts

சாய்ந்தமருது – மாளிகைக்காடு வர்த்தகர் சங்கத்தின் சுதந்திர தின விழா

Image
( எம்.ஐ.எம்.அஸ்ஹர் , யு.கே.காலித்தீன் , எம்.வை.அமீர்) சாய்ந்தமருது  – மாளிகைக்காடு வர்த்தகர் சங்கம்  இலங்கை திருநாட்டின் 71 வது சுதந்திர தினத்தையொட்டிய நிகழ்வுகள்  சாய்ந்தமருதிலுள்ள தலைமையகத்தில் வர்த்தகர் சங்க தலைவர் எம்.எம்.முபாறக் தலைமையில்  இடம்பெற்றது. இந்நிகழ்வில் அபிவிருத்தி உபாயங்கள் சர்வதேச வர்த்தகங்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், கல்முனை இராணுவ படை முகாம் கட்டளை தளபதிகள் மேஜர் தர்மசேன , சுதுசிங்க , கல்முனைத் தொகுதி ஐக்கிய தேசியக்கட்சி அமைப்பாளர் சட்டத்தரணி எம்.எஸ்.ஏ.றஸாக் , ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர் சட்டத்தரணி எம்.ஸி.ஆதம்பாவா , கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.ஆர்.எம்.அஸீம் உட்பட வர்த்தக சங்க உயர்பீட உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கல்முனையில் நடைபெற்ற 71வது சுதந்திர தின நிகழ்வு

Image
(அகமட் எஸ். முகைடீன்)          கல்முனை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 71வது சுதந்திர தின நிகழ்வு இன்று (4) திங்கட்கிழமை காலை கல்முனை மாநகர ஐக்கிய சதுக்கத்தில் பிரதேச செயலாளர் எம்.எம். நஸீர் தலைமையில் நடைபெற்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப், அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சாமந்த விஜேசேகர, கல்முனை பொலிஸ் பிரிவு பொலிஸ் அத்தியட்சகர் எச்.எம்.ஏ.பி. ஹேரத், கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயநெத்தி, மேஜர் தர்மசேன, கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். அப்துல் ஜலீல், அம்பாறை மாவட்ட அனைத்து பள்ளிவாசல்களின் தலைவர் வைத்திய கலாநிதி எஸ்.எம்.ஏ. அஸீஸ், கல்முனை மாநகர ஆணையாளர் எம்.சி. அன்சார், கல்முனை மாநகர சபை செயலாளர் எம். பிர்னாஸ், கல்முனை மாநகர பிரதி முதல்வர் காத்தமுத்து கணேஸ், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சரின் இணைப்ப

71வது தேசிய தின நிகழ்வு நற்பிட்டிமுனை லாபிர் வித்தியாலயத்தில்

Image
71வது தேசிய தின நிகழ்வு நற்பிட்டிமுனை லாபிர் வித்தியாலயத்தில் அதிபர் வை.எல்.பஸீர்  தலைமையில் நேற்று நடை பெற்றது அமைச்சர் றிசாத் பதியுதீனின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் சி.எம்.ஹலீம் தேசிய கோடி ஏற்றி மரக்கன்று நடுவதையும் கல்லூரி ஆசிரியர்களையும் காணலாம் 

மீண்டும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக எம்.ரீ.எம்.நிசாம் நியமிக்கப்பட்டுள்ளார்.

Image
கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக எம்.ரீ.அப்துல் நிசாம் நியமிக்கப்பட்டுள்ளார்.  இந்த நியம ன ம் மாகாண ஆளுநர் கலாநிதி MLAM ஹிஸ்புழ்ழாஹ்வினால் இன்று வியாழக்கிழமை வழங்க ப்பட்டுள்ளது. இதுவரை காலமும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக செயற்பட எம்.ஐ.எம்.மன்சூர் கிழக்கு மாகாண கல்வி அமைச்சிற்கு இடமாற்றப்பட்டுள்ளார்.  

கைதான பட்டதாரி மாணவர்களின் பெற்றோர் ஆளுநர் ஹிஸ்புல்லாவிடம் தஞ்சம்

Image
அண்மையில் கைது செய்யப்பட்ட 07 பொறியியல் பீட மாணவர்களுடைய பெற்றோர்கள் உறவினர்கள் இன்று கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி MLAM ஹிஸ்புழ்ழாஹ் அவர்களை ஆளுநர் செயலகத்தில் சந்தித்தனர். கடந்த வாரம் தொல் பொருள் என அடையாளப்படுத்தப்பட்ட பகுதியில் எடுத்த புகைப்படத்தை ஒரு வருடத்திற்கு முன்பு சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குறிப்பிட்ட பொறியியல் பீட மாணவர்களுடைய பொற்றோர்கள் இவ்வாறு சந்தித்தனர்.  எதிர் வரும் 05 ஆம் திகதி வழக்கு  விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள நிலையில் இந்த சந்திப்பு இடம் பெற்றது. இதன் போது கிழக்கு ஆளுநர் கலாநிதி ஹிஸ்புழ்ழாஹ் அவர்கள் சட்டரீதியான விபரங்களை  கேட்டறிந்ததோடு , இந்த வழக்கில் மாணவர்கள் சார்பாக வாதாடுகிற சட்டத்தரிணியை தொடர்பு கொண்டு தன்னுடைய பங்களிப்பை எவ்வாறு வழங்கலாம் என சட்ட ஆலோசனையை கேட்டறிந்து கொண்டார் , இது தொடர்பாக பொலிஸார் புராதண தொல் பொருள் திணைக்களத்தில் இருந்து விரிவான அறிக்கையினை கோரியுள்ளதாகவும் , அறிக்கை கிடைத்தவுடன் அந்த அறிக்கை ஆராய்ந்து தீர்பினை நீதிமன்றம் வழங்குமென எதிர்பார்பதாக

இன்று ஆளுநர் செயலகத்தில் பட்டதாரி (Bachelor of Education) ஆசிரியர் நிரந்தர நியமனம் ஆளுநர் கலாநிதி MLAM ஹிஸ்புழ்ழாஹ் வழங்கி வைத்தார்

Image
இன்று ஆளுநர் செயலகத்தில் பட்டதாரி (Bachelor of Education) ஆசிரியர் நிரந்தர நியமனம் ஆளுநர் கலாநிதி MLAM ஹிஸ்புழ்ழாஹ் வழங்கி வைத்தார் . அன்மையில் நேர்முகப்பரீட்சைக்கு தோற்றி நியமனம் வழங்கப்படாதிருந்த  நிலையில் தற்போதைய ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ் அவர்களின் விஷேட பணிப்புரைக்கு அமைய மீண்டும் தகுதி அடிப்படையில் சுமார் 19 B.Ed பட்டதாரிகளுக்கு இன்று ஆளுநர் செயலகத்தில் ஆசிரியர்  நிரந்தர நியமன   கடிதங்களை கிழக்கு ஆளுநர் வழங்கி  வைத்தார்  இந்த 19 நியமனத்தில் 18 தமிழ் பட்டதாரிகளும் ஒரு சிங்கள பட்டதாரியும் உள்வாங்கப்பட்டாதோடு இந்த நியமனங்கள் உரியவர்களின் மாவட்டத்தில் வழங்கப்பட்டதும்  குறிப்பிடத்தக்கது.

மருதமுனையைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் பி.எம்.எம்.ஏ.காதர் கலாபூஷணம் விருது பெறுகின்றார்.

Image
மருதமுனையைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் பி.எம்.எம்.ஏ.காதர்  கலாபூஷணம் விருது பெறுகின்றார்.நாளை 29அம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணிக்கு கொழும்பு தாமரைத் தடாக மண்டபத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்விலேயே இவருக்கு இந்த கலாபூஷணம் விருது வழங்கப்படவுள்ளது. 2010ஆம் ஆண்டு இலங்கைப் பத்திரிகை ஸ்தாபனமும்,பத்திரிகை ஆசிரியர்  சங்கமும் இணைந்து நடாத்திய போட்டியில் ஞாயிறு தினக்குரல் பத்திரிகையில் எழுதிய கட்டுரைகளுக்காக சிறந்த பத்திரிகையாளருக்கான சுப்ரமணிய செட்டியார்  தேசிய விருதை வென்ற முதல் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர் என்ற பெருமை இவரையே சாரும். அதே போன்று 2012ஆம் ஆண்டு இங்கை பத்திரிகை ஸ்தாபனமும்,இலங்கை பத்;திரிகை ஆசிரியர்  சங்கமும் இணைந்து நடாத்திய போட்டியில் மெட்ரோ நியூஸ் பத்திரிகையில் ‘விலேஜ் விசிட்’என்ற தலைப்பில் எழுதிய கட்டுரைகளுக்காக சிறந்த சூழலியல் செய்தியாளருக்கான தேசிய விருதுதையும் இவர்  வென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் 2018ஆம் ஆண்டின் ஊடகத்துறைக்கான கிழக்கு மாகாண வித்தகர் விருதும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.இவை தவிர இ

அரச அலுவலகர்களின் அலுவலக நேரம் தொடர்பான சுற்றறிக்கைகள்

Image
அரச அலுவலகர்களின் அலுவலக நேரம் தொடர்பான சுற்றறிக்கைகளுக்கு அமைவாக  2006.06.19 ஆம் திகதி முதல் நடைமுறைப்படும் வண்ணம் அரச சேவைகளின் கனிட்ட ஊழியர்கள் தவிர்ந்த மற்றைய எல்லா ஊழியர்களதும் அலுவலக நேரம் (மதிய உணவுக்காக 30 நிமிட காலத்துடன்) மு.ப. 8.30 மணிமுதல் பி.ப. 4.15 மணிவரை ஆதல் வேண்டுமென அரசு தீர்மானித்துள்ளது, பணக்கொடுக்கல் வாங்கல்களுக்காக சகல அரச அலுவலகங்களும் வேலை செய்கின்ற நாட்களில் பிற்பகல் 3.00 மணிவரை அதற்காக வசதியளிக்க வேண்டும். அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை இல: 162 இல் குறிப்பிட்டுள்ள வாறு கனிட்ட ஊழியர்களின் அலுவவக நேரம் மதிய உணவுக்காக 30 நிமிடங்களுடன் மு.ப.8.30 மணி இல் இருந்து பி.ப.4.45 மணிவரை அமையும். அரச ஊளழியர்களின் அலுவலக நேரம் தொடர்பாக வெளியிடப்பட்ட அரச சுற்றுநிருபங்களின் விபரங்கள்: 08_0214(t) 09-2006(t) 17-1996(t) 162-1980(t)

காத்தான்குடி தள வைத்தியசாலையின் ஆண்கள் சிகிச்சை விடுதி திறப்பு

Image
காத்தான்குடி தளவைத்தியசாலையில் அமைக்கப்பட்ட ஆண்கள் சிகிச்சை விடுதி ஆளுநர் கலாநிதி MLAM ஹிஸ்புல்லாஹ்வினால் திறந்து வைக்கப்பட்டது மட்டக்களப்பு காத்தான்குடி தளவைத்தியசாலையில் அவசியத் தேவையாக காணப்பட்ட ஆண்கள் சிகிச்சை விடுதி பாத்திமா பௌண்டேசனின் அணுசரணையில் அமைக்கப்பட்டு இன்று பொது நோயாளிகளின் பயண்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டது. காத்தான்குடி தளவைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.எஸ்.எம்.ஜாபிர் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக பங்கேற்று இவ் வைத்தியப்பிரிவினை திறந்து வைத்தார். இந் நிகழ்வில் பாத்திமா பௌன்டேசனின் பணிப்பாளர் சஹாப்தீன் இக்ராம் சமூக செயற்பாட்டாளர் பிரோஸ் நவாஸ் ,வைத்திய அதிகாரிகள் ,உட்பட பலரும் கலந்து கொண்டனர். இதன் போது கிழக்கு மாகாண ஆளுநருக்கு காத்தான்குடி தளவைத்தியசாலையினால் அவரின் சேவைகளைப்பாராட்டி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.

தோட்டத் தொழிலாளர் சம்பளம்; கொடுப்பனவுகள் சகிதம் ரூ.855 ஆக அதிகரிப்பு

Image
கடந்த நான்கு மாதங்களாக இழுபறி நிலையில் இருந்துவந்த கூட்டுஒப்பந்தப் விவகாரம், இன்று முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. ரூபா 700 அடிப்படைச் சம்பளத்துடன், எதிர்வரும் திங்கட்கிழமை (28) ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடிப்படைச் சம்பளமாக ரூபா 700, விலைக் கொடுப்பனவு ரூபா 50, ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியமாக ரூபா 105 என்ற அடிப்படையில், மொத்தச் சம்பளம் ரூபா 855 ஆக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மேலதிகமாகப் பறிக்கப்படும் கொழுந்து ஒரு கிலோவுக்கு தலா ரூபா 40 வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம், இது வரை ரூபா 500 (கொடுப்பனவு உள்ளிட்டு ரூ. 530) ஆக காணப்பட்டதோடு, அதில் ஊழியர் சேமலாப நிதியத் தொகையும் உள்ளடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. கூட்டு ஒப்பந்தம் தொடர்பிலான பேச்சுவார்த்தை, நாரஹேன்பிட்டியிலுள்ள தொழில் திணைக்களத்தில், இன்று (25) இடம்பெற்றது.   இன்றைய பேச்சுவார்த்தையில், தொழில் அமைச்சர், பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் ஆகியோர் மத்தியஸ்தம் வகிக்க, ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் மூன்று

நற்பிட்டிமுனை லாபிர் வித்தியாலயத்தில் போதைக்கு எதிரான நடவடிக்கை

Image
ஜனாதிபதியின் விசேட திடத்தின் கீழ் கல்வி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட  போதை ஒழிப்பு வாரத்தின் இறுதிநாள் நிகழ்வான இன்று  வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் விழிப்புணர்வு செயலமர்வு இடம் பெற்றது லாபிர் வித்தியாலய அதிபர் வை.எல்.பஷீர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பாடசாலையில் நடைபெற்ற போதை ஒழிப்பு திட்டத்தின்  நடை பெற்ற  நிகழ்வில்  ஊடகவியலாளர்களுக்கு  விழிப்புணர்வு பிரசுரங்கள்  வழங்கப்பட்டன . அதிபர் உட்பட பிரதி அதிபர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர் . நேற்று வியாழக்கிழமை அரசியல் பிரமுகர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு நடைபெற்றது  

நற்பிட்டிமுனை கமு/லாபிர் வித்தியாலயத்தில் நடை பெற்ற போதைப்பொருள் தடுப்பு வாரத் தின் இரண்டாம் நாள் நிகழ்வுகள்,

Image

அரச கணக்காய்வுக் குழுவின் தலைவராக லசந்த அழகியவன்ன

Image
அரச கணக்காய்வுக் குழுவின் (COPA-Committee on Public Accounts) தலைவராக லசந்த  அழகியவன்ன  தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான இவர், இக் குழுவின் தலைவராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அம்பாறை மாவட்ட பட்டதாரிகள் Online மூலம் பதியலாம் (Application)

Image
மேலதிக அரசாங்க அதிபர் விமலநாதன் அம்பாறை மாவட்டத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகளை பதிவு செய்வதற்கான தரவுத்தளத்தினை ஒன்லைன் ஊடாக பதிவு செய்வதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே. விமலநாதன் தெரிவித்தார்.   அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளை பதிவு செய்யும் வேலைகள் கடந்த 2012ம் ஆண்டு தொடக்கம் மாவட்ட செயலகத்தினால் விண்ணப்ப படிவங்கள் ஊடாக தரவுகள் பதியப்பட்டு வந்த போதிலும் தூர இடங்களிலிருந்து வருகின்ற போது அதற்கான கால நேரம் பண விரயம் மற்றும் பல அசௌகரிங்கள் என்பவற்றினை கவனத்தில் கொண்டு வேலையற்ற பட்டதாரிகள் இலகுவாக இப் பதிவினை ஒன்லைன் ஊடாக வீட்டில் இருந்தவாறே இலகுவாகவும், துரிதமாகவும்மேற்கொள்ள இம்முறையினை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.  Please Click on your Divisional Secretariat Division to Proceed the Online Forum (உங்களது பிரதேச செயலாளர் பிரிவை தெரிவு செய்யுங்கள்)                                                             விண்ணப்பப் படிவத்திலுள்ள தகவல்கள் மிகவும் இலகுவானதோடு புதிய தொழி