அரச அலுவலகர்களின் அலுவலக நேரம் தொடர்பான சுற்றறிக்கைகள்
அரச அலுவலகர்களின் அலுவலக நேரம் தொடர்பான சுற்றறிக்கைகளுக்கு அமைவாக 2006.06.19 ஆம் திகதி முதல் நடைமுறைப்படும் வண்ணம் அரச சேவைகளின் கனிட்ட ஊழியர்கள் தவிர்ந்த மற்றைய எல்லா ஊழியர்களதும் அலுவலக நேரம் (மதிய உணவுக்காக 30 நிமிட காலத்துடன்) மு.ப. 8.30 மணிமுதல் பி.ப. 4.15 மணிவரை ஆதல் வேண்டுமென அரசு தீர்மானித்துள்ளது, பணக்கொடுக்கல் வாங்கல்களுக்காக சகல அரச அலுவலகங்களும் வேலை செய்கின்ற நாட்களில் பிற்பகல் 3.00 மணிவரை அதற்காக வசதியளிக்க வேண்டும்.
அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை இல: 162 இல் குறிப்பிட்டுள்ள வாறு கனிட்ட ஊழியர்களின் அலுவவக நேரம் மதிய உணவுக்காக 30 நிமிடங்களுடன் மு.ப.8.30 மணி இல் இருந்து பி.ப.4.45 மணிவரை அமையும்.
Comments
Post a Comment