Posts

Showing posts with the label கல்வி

நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் புதிய நிருவாகம்

Image
நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் இவ்வாண்டுக்கான  புதிய நிருவாகக் குழு தெரிவு கடந்த சனிக்கிழமை நடை  பெற்றது . கல்லூரி அதிபர் எம்.எல்.ஏ.கையூம் தலைமையில் நடை  பெற்ற  பழைய மாணவர் சங்கத்தின் புதிய செயலாளராக கைத்தொழில் வணிக அமைச்சரின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரும் நற்பிட்டிமுனை அல் -கரீம் பவுண்டேஷன்  தலைவருமான சி.எம்.ஹலீம் தெரிவு செய்யப்பட்டுள்ளார் .  இணை  செயலாளர்களாக ஐ.எம்.உபைதுல்லாஹ் ,மௌலவி எச்.எம்.தானீஸ்  ஆகியோரும் பொருளாளராக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எம்.ரவூப்  உட்பட 16 குழு உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். நிருவாக குழு உறுப்பினர்களாக நற்பிட்டிமுனை ஜும்மா பள்ளிவாசல் செயலாளர் எம்.எல்.எம்.அஸ்ரப் ஆசிரியர், நற்பிட்டிமுனை உலமா சபை செயலாளர் மௌலவி எம்.ரீ.ஏ.முனாப் ,நற்பிட்டிமுனை ஜும்மாபள்ளிவாசல் உப தலைவர் ஐ.எம்.நூர்முகம்மட் ,ஆசிரியர் எம்.ஏ.ஜெஸ்லி ,ஆய்வுகூட உதவியாளர் யு.எல்.எம்.பாயிஸ் ,கல்முனை  வீதி அபிவிருத்தி அதிகார சபை முகாமைத்துவ உதவியாளர் ஏ.எம்.பைதாஸ் ,மட்டக்களப்பு  மேல்நீதிமன்ற  உத்தியோகத்தர் ஏ.எம்.அஸீம் ,அல் -கரீம் பவுண்டேஷன்  உ

நான்கு பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்த ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் நடவடிக்கை

Image
வாழைச்சேனை இந்துக் கல்லூரி, செங்கலடி மகா வித்தியாலயம், களுதாவளை மகா வித்தியாலயம் மற்றும் பொத்துவில் மத்திய கல்லூரி ஆகியவற்றை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்த கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நடவடிக்கை எடுத்துள்ளார்.  அதற்கமைய குறித்த பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்த தேவையான அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் ஜே.எஸ்.டி.எம்.அஸங்க அபேவர்தன, கல்வி அமைச்சுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.  தேசிய பாடசாலையாக தரமுயர்த்துவதற்கு தேவையான தரங்களை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வாழைச்சேனை இந்துக் கல்லூரி, செங்கலடி மகா வித்தியாலயம், களுதாவளை மகா வித்தியாலயம் மற்றும் அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில் மத்திய கல்லூரி ஆகியன பூர்த்தி செய்துள்ளதாக மாகாண கல்வி அமைச்சினால் சிபாரிசு செய்யப்பட்டிருந்த நிலையில், கிழக்கு மாகாண ஆளுநராக பதவியேற்ற கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அதற்கான அனுமதியினை வழங்கியுள்ளமை விசேட அம்சமாகும்.

கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு எதிர்வரும் திங்கள் விடுமுறை

Image
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை(15) தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு அனைத்து கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கும்  தைப்பொங்கலு க்கு  முதல் நாள் திங்கட் கிழமையும் (14) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது . இதற்கான உத்தரவு கிழக்கு மாகாண ஆளுநரினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண ஆளுநரினரின் செயலாளரினால் மாகாண கல்விப்பணிப்பாளருக்கு விடுக்கப்பட்டுள்ள உத்தரவுக்கமைய  கிழக்கு மாகாண சகல வலயக்கல்விப்பணிப்பாளர்களுக்கு ம்  மாகாணக் கல்விப் பணிப்பாளரினால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது . இதன் பிரகாரம் கிழக்கு மாகாணத்தில் உள்ள தேசிய பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய மாகாணப்பாடசாலைகள்  அனைத்துக்கும்  திங்கட் கிழமை (14) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. திங்கட் கிழமை (14) விடுமுறை தினத்திற்குப் பதிலாக எதிர் வரும் சனிக்கிழமை (19) பதில் பாடசாலை நடத்துவதற்கும் கிழக்குமாகாண ஆளுநரினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் தெரிவித்தார் 

பாடசாலைகளில் கல்வி பயிலும் பார்வைக்குறைவு மற்றும் கேட்டல் குறைவு மாணவர்களுக்கு மூக்குக் கண்ணாடி மற்றும் கேட்டல் கருவி வழங்கும் நிகழ்வு

Image
ஜனாதிபதியின் விசேட வேலைத்திட்டத்தின்கீழ் கல்வி அமைச்சினால்  பாடசாலைகளில்  கல்வி பயிலும்  பார்வைக்குறைவு மற்றும் கேட்டல் குறைவு மாணவர்களுக்கு மூக்குக் கண்ணாடி மற்றும்  கேட்டல்  கருவி வழங்கும் திட்டம் பாடசாலைகள் மட்டத்தில் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. இந்த திட்டத்தின் அடிப்படையில்  கல்முனை வலயக்கல்வி அலுவலகத்துக்குட்பட்ட 65 பாடசாலைகளில் பார்வைக்குறைபாடு ,கேட்டல் குறைபாடுள்ள  26 மாணவர்களுக்கு மூக்குக் கண்ணாடி மற்றும்  கேட்டல்  கருவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது. சாய்ந்தமருது மழ்ஹர் சம்ஸ் மகாவித்தியாலயம்,கல்முனை மஹ்மூத் மகளீர் வித்தியாலயம் ,மருதமுனை அல் -ஹம்றா  வித்தியாலயம்,நிந்தவூர் அல் -மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலை ,கல்முனை றோயல்  வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளிலிருந்து இனங் காணப்பட்ட 26 மாணவர்ளுக்கும் மூக்குக் கண்ணாடி மற்றும்  கேட்டல்  கருவி வழங்கி வைக்கப்பட்டது . மூக்குக் கண்ணாடி மற்றும்  கேட்டல்  கருவி வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று   கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் தலைமையில் வலயக்கல்வி அலுவலகத்தில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் குறித்த பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரி

சாய்ந்தமருதில் சவிபல சிஷ்ய திட்டத்தில் மாணவர்களுக்கு உதவி

Image
"சவிபல சிஷ்ய "திட்டத்தின் கீழ் பாடசாலையில் கல்வி பயிலும் வருமானம் குறைந்த சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள், அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் ஏற்பாட்டில் 2019.01.07ம் திகதியன்று சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் அமைப்பின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.ஐ. சம்சுதீன்  தலைமையில் நடைபெற்றது.  அமைப்பின் நிதியிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 100 மாணவர்களுக்கான 100000/ - பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் கையளிக்கப்பட்டது.இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் ஐ.எம் .றிகாஸ்  கலந்து கொண்டதோடு விசேட அதிதியாக சிரேஷ்ட தலமைப்பீட சமுர்த்தி முகாமையாளர் ஏ.ஆர்.எம்..சாலிஹ், முகாமைத்துவ பணிப்பாளர், திட்ட முகாமையாளர், வங்கி முகாமையார்,உதவி முகாமையாளர்கள் உட்பட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் அமைப்பின் செயலாளர்,பொருளாளர், பொதுமக்கள் மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தன. 

அதிபர் சேவைப் போட்டிப் பரீட்சைக்கு தயார்படுத்தல் கருத்தரங்கு – 2019

Image
(பி.எம்.எம்.ஏ.காதர்) 2019 இம்மாதம் ஜனவரியில் கல்வியமைச்சின் கீழுள்ள பாடசாலைகளுக்கு அதிபர் சேவை தரம் iii இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான போட்டிப் பரீட்சை நடைபெறவுள்ளது.இப் போட்டிப் பரீட்சைக்கான தயார்படுத்தல் கருத்தரங்கு புத்தளம் பாத்திமா மகளிர் கல்லூரியில் 2019.01.12 சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 9.00 மணி தொடக்கம் மாலை 3.00 மணி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கருத்தரங்கில் பொது அறிவு மற்றும் நுண்ணறிவு ஆகிய பாடங்கள் சிறப்பாக கற்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.சம்பவக் கற்கை பாடநெறி பிரபல நூலாசிரியர் எம் .ஐ. முஹம்மது அலி ஜின்னா (SLEAS) அவர்களினால் எதிர்வரும் வாரங்களில் நடாத்தப்படும்.இதில் பொது அறிவு நுண்ணறிவு பாடங்களுக்கு நாடளாவிய ரீதியில் அனுபவமும் தேர்ச்சியுமிக்க வளவாளர்களான யு.எல்.எம்  முதைதீன் - (SLEAS), எம். றியாஸ் (ஊடகக் கற்கை) ஆகியோரின் பிரதான வழிகாட்டலில் விரிவுரைகள் இடம்பெறவிருக்கின்றன. எனவே மேற்படி கருத்தரங்கு வடமேல்,வடமத்திய, மேல், மத்திய, வட மாகாண பரீட்சாத்திகளின் நலன் கருதி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.  மேற்படி போட்டிப் பரீட்சைக்கு வ

தரம் ஒன்று மாணவர்களுக்கான வகுப்புக்கள் 17 ஆம் திகதி ஆரம்பம்

Image
அரச பாடசாலைகளில் முதலாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகியதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.  இதேவேளை அரச பாடசாலைகளில் தரம் ஒன்று மாணவர்களுக்கு முறையாக வகுப்புக்களை ஆரம்பிக்கும் நடவடிக்கையை இம்மாதம் 17 ஆம் திகதி மேற்கொள்ள அமைச்சுத் தீர்மானித்துள்ளது.  வவுச்சர்கள் மூலம் சீருடைகளைக் கொள்வனவு செய்யும் போது மாணவர்களுக்கு எதுவித அழுத்தம் கொடுக்காமல் வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிருபத்திற்கு அமைய செயற்படுமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் வலியுறுத்தியுள்ளார்.  கடந்த ஆட்சிக்காலத்தில் சீருடையை வழங்கும்போது இடம்பெற்ற ஊழல் மோசடியைத் தவிர்த்து அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரணத்தை இடைத் தரகர்களின் தலையீடு இன்றி நேரடியாக பாடசாலை மாணவர்களக்குப் பெற்றுக்கொடுக்கும் வகையில் இந்தச் சீருடை வவுச்சர் முறை அறிமுகப்படுத்தப்பட்டதாக அமைச்சர் அகில விராஜ் காரியவசம் சுட்டிக்காட்டியுள்ளார்.  (அரசாங்க தகவல் திணைக்களம்)

39 ஆண்டுகள் கல்விப் பணியாற்றிய கல்முனை தமிழ் பிரிவு கோட்டக்கல்விப் பணிப்பாளர் திருமதி திரவியராஜா ஓய்வு பெற்றார்

Image
கல்முனை தமிழ் பிரிவு கோட்டக்கல்விப் பணிப்பாளராக பணிபுரிந்த கல்வித்துறையில் 39 ஆண்டுகள் சேவையாற்றிய திருமதி வீ.திரவியராஜா கடந்த திங்கட் கிழமை (2018.12.31) ஓய்வு பெற்றார். 1958 டிசம்பர் 31இல் பலாங்கொடையில்  பிறந்த ராஜமல்லிகா  திரவியராஜா தனது ஆரம்பக்கல்வியை  பலாங்கொடை சாந்த அக்னஸ் மகளீர் கல்லூரியிலும்  இடைநிலைக்கல்வியை கண்டி மோபிரே  கல்லூரியிலும் உயர்கல்வியை பலாங்கொடை ஸாஹிரா மகாவித்தியாலயத்திலும் கற்றுள்ளார் . மும்மொழிகளிலும் சிறந்த தேர்ச்சி பெற்ற  இவர் 1979 ஆம் ஆண்டு  பலாங்கொடை சிசில்டன் தமிழ் வித்தியாலயத்தில் ஆசிரியராக முதல் நியமனம் பெற்றார் . 1983 தொடக்கம் 1984 வரையான ஓராண்டு காலத்தில் மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் கணித ஆசிரியராக பயிற்றப்பட்ட இவர் 1991 இல் பேராதனைப்பல்கலைக்கழகத்தில் கலைமானிப்படத்தையும் பெற்றுக்கொண்டார். 1991 இல் நடைபெற்ற  அதிபர் தரம்- iii  போட்டிப்பரீடசைக்கு தோற்றி அதில்  சித்தியடைந்த திருமதி திரவியராஜா 2004.06.01 தொடக்கம் தரம்-i  அதிபராக பதவி  உயர்வு பெற்று இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயம் ,பலாங்கொடை மெதகந்த தமிழ் வித்தியாலயம்,பலாங்கொடை

2018 A/L பெறுபேறுகள்; அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றோர்

Image
2018-வௌியிடப்பட்ட, 2018 கல்விப் பொதுத்தராதரப் பத்திர உயர் தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் ஒவ்வொரு துறையிலும் அகில இலங்கை ரீதியாக, முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களின் பெயர்களை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அந்த வகையில், உயிரியல் விஞ்ஞான பிரிவில் மாத்தளை சாஹிரா கல்லூரி மாணவன், எம்.ஆர்.எம். ஹக்கீம் கரீம், 3 ஆம் இடத்தை பிடித்துள்ளார். சம்மாந்துறை முஸ்லிம் மகா வித்தியாலய மாணவன், மொஹிதீன் பாவா ரீஸா மொஹமட், உயிரியல் தொழில்நுட்ப பிரிவில் 2 ஆம் இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இம்முறை, கல்விப்பொதுத்தராதரப் பத்திர உயர் தர பரீட்சைக்கு 3 இலட்சத்து 21 ஆயிரத்து 469 பரீட்சார்த்திகள் (321,469) பரீட்சை எழுத தகுதி பெற்றிருந்தனர். இவர்களில் 167,907 பேர் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளதோடு, பரீட்சைக்கு தோற்றியோரில் 119 பேரின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்தார். உயிரியல் விஞ்ஞானப் பிரிவு (Biological Science) 1 ஆம் இடம் – கலனி ராஜபக்ஷ, கம்பஹா ரத்னாவலி மகளிர் பாடசாலை 2 ஆம் இடம் – ரவிந்து ஷஷிக, கொழும்பு டி.எஸ். சேனாந

செஸ்டோ”99” அமைப்பின் வருடாந்த பொது ஒன்றுகூடலும் புதிய நிர்வாகத் தெரிவும்

Image
அம்பாறை மாவட்டத்தில் கடந்த ஏழு வருடங்களாக பல்வேறு வகையான சமூக சேவைகளில் ஈடுபட்டு  இயங்கிவருகின்ற கல்வி மற்றும் சமூக அபிவிருத்தி அமைப்பின் வருடாந்த பொது ஒன்றுகூடல் கடந்த சனிக்கிழமை (22) இறக்காமம் பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.  இவ்வருடாந்த ஒன்றுகூடலின் போது 2019 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகத்  தெரிவு  இடம்பெற்றது. இதன் போது இவ்வமைப்பின் 2019 ஆம் ஆண்டுக்கான புதிய தலைவராக இலங்கை கல்வி நிர்வாக சேவை  அதிகாரி   என்.எம்.ஏ மலீக் தெரிவு  செய்யப்பட்டதோடு செயலாளராக  எஸ்.ரீ. சதாத் , பொருளாளராக ஏ.ஏம்.இர்ஷாத் ஆகியோர்  தெரிவு  செய்யப்பட்டனர் . இதனைத் தொடர்ந்து இவ்வமைப்பின் புதிய தலைவர்  என்.எம்.ஏ மலீக் உரையாற்றும போது போது 2018 ஆம் ஆண்டில் சிறப்பாக இவ்வமைப்பை வழி நடாத்திய நிர்வாகத்தினருக்கு தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்ததோடு எதிர்வரும் வருடத்தில் இவ்வமைப்பை சிறப்பாக வழி நடாத்தி இப்பிரதேச மக்களுக்கு தேவையான சேவைகளில் ஈடுபட அனைத்து உறுப்பினர்களினதும் ஒத்துழைப்பு இன்றியமையாதது எனவும்  தெரிவித்தார் . செஸ்டோ”99” அமைப்பானது இப்பிரதேச மக்களின் நீண்ட கால தேவையாக இருந்

உயர்தரப் பரீட்சை பெறுபெறுகள் இம்மாத இறுதிக்குள்

Image
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபெறுகளை இம்மாத இறுதிக்குள் வௌியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித் கூறியுள்ளார்.  வினாத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கை தற்போது நிறைவடைந்துள்ளதாகவும், பெறுபேறு மறுஆய்வு நடவடிக்கை இடம்பெற்றுக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.  இதேவேளை இம்முறை சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் நடவடிக்கை நாளை முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது.  இரண்டு கட்டங்களாக இந்த விடைத்தாள் திருத்தும் நடவடிக்கை இடம்பெறவுள்ளதுடன், முதல் கட்டம் நாளை முதல் ஜனவரி 01ம் திகதி வரை இடம்பெற உள்ளது.  இடண்டாம் கட்டம் ஜனவரி 08ம் திகதி தொடக்கம் 17ம் திகதி வரை இடம்பெற உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

சீருடை வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

Image
பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலத்தை அதிகரிக்க கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் நடவடிக்கை எடுத்துள்ளார்.  அதன்படி குறித்த வவுச்சரின் காலத்தை எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி 28ம் திகதி வரை நீடிக்க அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார்.  இது சம்பந்தமாக உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மாணவர்களுக்கான சீருடை வவுச்சர்கள் முதலாம் தவணை ஆரம்பத்தில்

Image
பாடசாலைகளின் முதலாம் தவணை ஆரம்பித்தவுடன் 40 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கான பாடசாலை சீருடைத்துணி வவுச்சர்கள் வழங்கப்பட இருக்கின்றன.   நிதி மற்றும் ஊடக துறை அமைச்சர் மங்கள சமவீர இன்று இத்தகவலை தெரிவித்துள்ளார்.  அடுத்த வருடத்தில் முதல் மாதத்திற்கென அரசாங்கம் ஆயிரத்து 765 பில்லியன் ரூபாவை பாடசாலை மாணவர்களின் சீருடைக்காக ஒதுக்கியுள்ளதாக அமைச்சர் மங்கள சமவீர தெரிவித்துள்ளார்.  (அரசாங்க தகவல் திணைக்களம்)

சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.பி.எம்.இஸ்மாயில் பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார்.

Image
(பி.எம்.எம்.ஏ.காதர்) இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் மருதமுனையைச் சேர்ந்த கலாநிதி எம்.பி.எம்.இஸ்மாயில் தென்கிழக்குப் பல்கலைக்கழக வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் முகாமைத்துவத் திணைக்களத்தில் முகாமைத்துவப் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றுள்ளார். 1974ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28ஆம் திகதி பிறந்த இவர் தனது ஆரம்பக் கல்வியை மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூயில் கற்று உயர்கல்வியை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கற்று வியாபார நிருவாக  இளமானி பட்டத்தையும்,கொழும்பு பல்கலைக்கழகத்தில் வியாபார நிருவாக முதுமானி பட்டத்தையும்; பெற்றார். இவர் 2003ஆம் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தற்காலிக விரிவுரையாளராக இணைந்து பின்னர் விரிவுரையாளராக பதவி பெற்று சிரேஸ்ட விரிவுரையாளராகி தற்போது பேராசிரியராகியுள்ளமை சிறப்பம்சமாகும். மருதமுனையைச் சேர்ந்த மர்ஹ_ம் சீனிமுகம்மது முகைதீன் பாவா, இப்றாலெப்பை ஆபிதா உம்மா தம்பதியின் மூத்த புதல்வராவார். மேலும் களணிப் பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் விஞ்ஞான முதுமானிப் பட்டத்தையும்,யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முகாமைத்

நற்பிட்டிமுனை ரெயின்போ முன்பள்ளி மாணவர்களில் விடுகை விழா

Image
நற்பிட்டிமுனை ரெயின்போ முன்பள்ளி மாணவர்களில் விடுகை விழா  15.12.2018 சனிக்கிழமை நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலயத்தில் நடை பெற்றது . ரெயின்போ கல்லூரியின் நிருவாகிகளான லாபீர் வித்தியாலய பழைய மாணவர்களின் ஏற்பாட்டில்  ரெயின்போ முன்பள்ளி பொறுப்பாளரும் கிராமசேவை உத்தியோகத்தருமான ஆஷிக் தலைமையில் இடம் பெற்ற    இந்த நிகழ்வில் இலங்கை போக்குவரத்து சபை கல்முனை டிப்போ முகாமையாளர் வெள்ளைத்தம்பி ஜஹுபர் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்  . கல்முனை பிரதேச செயலக முதியோர் சங்க செயலாளர் ஓய்வு பெற்ற அதிபர் எஸ்.எல்.எம்.ஜலாலுதீன்  கெளரவ அதிதியாகவும் , நற்பிட்டிமுனை  ஜும்மா பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை தலைவர் மௌலவி ஜெ.எம்.ரிஷான் ,லாபிர் வித்தியாலய பகுதி தலைவரும்  நற்பிட்டிமுனை  ஜும்மா பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை செயலாளருமான     எம்.எல்.எம்.அஸ்ரப் ,   ஆகியோர் நிகழ்வில் விசேட அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர். நிகழ்வில் முன்பள்ளி மாணவர்களின் கலை,கலாச்சார நிகழ்வுகளும் பரிசளிப்பு நிகழ்வும் இடம் பெற்றது