நற்பிட்டிமுனை கிராமத்தில் பூரண கடையடைப்புடன் போதையொழிப்பு விழிப்பு ஊர்வலம்
மது போதைக்கு எதிர்ப்பு தெரிவித்து "கிராமத்தைப் பாதுகாப்போம்" எனும் தொனிப் பொருளில் நற்பிட்டிமுனை கிராமத்தில் பூரண கடையடைப்புடன் போதையொழிப்பு விழிப்பு ஊர்வலமும் ,மாநாடும் நற்பிட்டிமுனை ஜும்மாபள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை ஏற்பாட்டில் அனைத்து பள்ளிவாசல் சம்மேளனமும் ,உலமா சபையினரதும் பங்களிப்புடன் நடை பெற்றது . நேற்று செவ்வாய்க்கிழமை (30) காலை நற்பிட்டிமுனை ஜும்மா பள்ளிவாசல் முன்பாக கூடிய கிராம பாடசாலை மாணவர்களும் , ஊர் மக்களும் அங்கிருந்து கிராமம் முழுவதுமாக பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களுடன் ஊர்வலமாக சென்றனர் . மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட போதை ஒழிப்பு வீதி நாடகங்களும் இடம் பெற்றன . இதற்கு ஆதரவு தெரிவித்து நற்பிட்டிமுனை கிராமத்தில் வர்த்தக நிலையங்கள் ,பொது சந்தை முற்றாக மூடப் பட்டு பொது மக்களும் இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்