புதிய அமைச்சர்கள் நியமனம்

இன்று (29) பிற்பகல் 12 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் இருவரும், ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றனர்.
அவர்களது பெயர் விபரங்கள் பின்வருமாறு :-
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள்
1. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ - நிதி மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர்
2. நிமல் சிறிபால டி சில்வா - போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர்
3. கலாநிதி சரத் அமுனுகம - வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்
4. மஹிந்த சமரசிங்க - துறைமுகங்கள் மற்றும் கப்பற் துறை அமைச்சர்
5. மஹிந்த அமரவீர - விவசாய அமைச்சர்
6. ரஞ்சித் சியம்பலாபிட்டிய - மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர்
7. கலாநிதி விஜயதாச ராஜபக்‌ஷ - கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சர்
8. விஜித் விஜயமுனி சொய்ஸா - மீன்பிடி, நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அமைச்சர்
9. ஆறுமுகம் தொண்டமான் - மலைநாட்டு புதிய கிராமங்கள்,  உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர்
10. டக்ளஸ் தேவானந்தா - மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர்
11. பைசர் முஸ்தபா - மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்
12. வசந்த சேனாநாயக்க - சுற்றுலாத் துறை மற்றும் வனசீவராசிகள் அமைச்சர்

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்