கல்முனையில் அலையும் இப்பெண்ணுக்கு அபயக்கரம் நீடுவார்களா?
மனநலம் என்பது, ஒருவர் தன்னைத் தன்னோடும் சுற்றியுள்ள பிறரோடும் இணைத்துக்கொள்ளக்கூடிய திறனை, வாழ்க்கையின் சவால்களைக் கையாளக்கூடிய திறனைக் குறிக்கிறது. சுருக்கமாகச் சொல்வதென்றால், மனநலம் என்பது, வெறுமனே மனநலப் பிரச்னை இல்லாத நிலை அல்ல. மனநலத்தை நேர்விதமாக வரையறுக்கும் நோக்கத்துடன், உலக சுகாதார நிறுவனம் (WHO) ஆரோக்கியம் என்பதை இவ்வாறு வரையறுக்கிறது: 'முழுமையான உடல், மன மற்றும் சமூக நலன் உள்ள நிலை, வெறுமனே நோய் அல்லது பலவீனம் இல்லாத நிலை அல்ல'. WHO இன்னொரு விஷயமும் சொல்கிறது, ஒருவருடைய நலன் என்பது, அவர்கள் தங்களுடைய திறன்களை உணர்வதில், வாழ்க்கையின் வழக்கமான அழுத்தங்களைக் கையாள்வதில், பணியிடத்தில் செயல்திறனோடு செயல்படுவதில், தங்கள் சமூகத்துக்குப் பங்களிப்பதில் இருக்கிறது.
மனிதர்கள் எல்லாருக்கும் சிரமங்கள் வரும், அதனால் தாற்காலிக அழுத்தம் வரும், தனிப்பட்ட, தொழில்சார்ந்த மாற்றங்கள் வரும், அதனால், மனச்சோர்வு வரும், பதற்றம் வரும். இது இயல்புதான். ஆனால், இவற்றினால் ஒருவருடைய இயல்பான செயல்பாடுகள் பாதிக்கப்பட்டால், அவருக்கு ஒரு மனநலப் பிரச்னை இருக்கலாம். இந்தியாவில் உடல்நலம்பற்றிய விழிப்புணர்வு அதிகரித்திருக்கிறது. இதற்குக்காரணம், மக்கள் வாழ்க்கைமுறைக் குறைபாடுகளைப்பற்றி அதிகம் தெரிந்துகொண்டிருக்கிறார்கள். அதேசமயம், மனநலத்தைப்பற்றி யாரும் பேச விரும்புவதில்லை, இதனால், மனநலப் பிரச்னைகள் என எவையும் உண்மையில் இல்லை, எல்லாம் அவரவர் சும்மா நினைத்துக்கொள்வதுதான் என்றுகூடப் பலர் கருதுகிறார்கள்.
மன நலம் குன்றியவர்களாக இரவு பகலாக வீதிகளில் அலைந்து திரியும் சிலர் மற்றவர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் அவர்களது செயற்பாடுகள் அமைகின்றன. தவறாமல் பத்திரிகை வாசிக்கும் பழக்கமுடையவர்களாக காணப்படுகின்றனர் .இவ்வாறான ஒரு பெண் கல்முனை பிரதேசத்தில் நடமாடுவதை அவதானிக்க முடிகிறது. இவர் கல்முனை நகரில் எந்த நேரமும் உலாவி வருகின்றார் . ஆனால் தினமும் பத்திரிகை வாங்கி வாசிக்கிறார் . உண்மையாகவே மன நலம் பாதிக்கப்பட்ட ஒருவரால் அவ்வாறான வாசிப்பு பழக்கம் இருப்பதற்கு வாய்ப்பு குறைவு இருந்து இவரது செயற்பாடு கண்டு வியப்படைந்த நான் இவரை பற்றி அறிவதற்கு பலரை நாடிய போது அதிர்ச்சி தகவல் கிடைத்தது.
இவர் வாழ்ந்த வீடு இவரது சகோதரனால் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அந்த வீட்டைக் கொள்வனவு செய்தவர் இவரை வீட்டிலிருந்து வெளியற்றி இருக்கிறார் இப்போது இவருக்கு தஞ்சம் வீதியாகி விட்டது . வீதியில் இருந்தவாறு தன சகோதரனை சந்திக்கலாம் என்று இன்றுவரை வீதியில் அலைகின்றார் அனால் சகோதரன் பல ஆண்டுகளுக்கு முன்னர் திகாரி எனுமிடத்தில் கொலை செய்யப்பட்டதாக அறிய முடிகின்றது. இதன் காரணமாக இவருக்கு இருக்கவும் வீடில்லை உதவிக்கு உறவும் இல்லாத நிலையில் வீதியை வீடாகவும் பத்திரிகையை உறவாகவும் வைத்துள்ளார் . இவர் யாரும் கொடுப்பதை உண்கின்றார் வீதி ஓரத்தில் உறங்குகின்றார் காலம் கடத்தப்படுகின்றது.
எனினும் அவரும் ஒரு மனிதனே என்ற எண்ணம் எம்மில் பலருக்கு இல்லாமல் இருப்பது கவலையான விடயமாகும் . கல்முனை பிரதேசத்தில் இவரை நல்லதொரு பெண்ணாக வாழவைக்கும் எண்ணம் யாருக்கும் வரவில்லை அந்த சகோதரியை வேடிக்கை பார்பவர்களாக இருக்கிறோமே தவிர அவரையும் சமூகத்தில் நம்மை போன்ற ஒருவராக பார்ப்பதற்கு மனம் இல்லாதவர்களாக வாழ்கின்றோம் .
கல்முனை மாநகரம் வர்த்தகர்கள், தனவந்தர்கள் ,படித்தவர்கள் ,வைத்தியர்கள் ,சமூக சேவை அமைப்புகள் நிறைந்து காணப்படுகின்றது எனினும் இந்த சகோதரியை யாரும் கண்டுகொள்ளாமல் இருப்பதன் அர்த்தம் என்னவென்பதை காலம்தான் பதில் சொல்ல வேண்டும் .
Comments
Post a Comment