பிரதமருக்கான பாதுகாப்பு நீக்கம்; ரணிலுக்கு 10 பேர் பாதுகாப்பு
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்புக்கு வழங்கப்பட்ட பிரதமருக்கான பாதுகாப்பு பிரிவு அகற்றப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர தெரிவித்துள்ளார் .
ஜனாதிபதியினால் ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு வழங்கப்பட்டுள்ள பிரதமர் பதவிக்கான பாதுகாப்பை நீக்குமாறு, பிரதமர் பாதுகாப்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமசிங்கவிற்கு குறித்த உத்தரவை கடிதம் மூலம் அனுப்பியுள்ளார்.
அதற்கமைய முன்னாள் பிரதமருக்கு வழங்கப்பட்டுள்ள பிரதமருக்கான பாதுகாப்பு மற்றும் அவருக்கு வழங்கப்பட்டுள்ள மேலதிகமான விசேட அதிரடிப்படை பாதுகாப்பை நீக்குமாறு அவர் அவ்வுத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில் பிரதமரின் பாதுகாப்புக்காக 10 பாதுகாப்பு உத்தியோகத்தர்களைக் கொண்ட குழுவொன்றை நியமிக்குமாறு அவர் மேலும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
Comments
Post a Comment