உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி தமிழ் - முஸ்லிம் உறவை சிதைக்க சதி!
இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் காட்டம் முகவரியற்ற சமூக ஊடகங்கள் வாயிலாக உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி வடகிழக்கில் ஒற்றுமையாக வாழ்கின்ற தமிழ் - முஸ்லிம் மக்களின் உறவை பிரிக்க திட்டமிட்ட ரீதியில் சதி மேற்கொள்ளப்படுவதாக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். அவர் இன்று வியாழக்கிழமை வெளியிட்ட விசேட ஊடக அறிக்கையிலேயே பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- ‘மட்டக்களப்பு, கிரான் பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற பஸ் - வேன் விபத்தொன்று சம்பந்தமாக சில முகவரியற்ற இனவாத தமிழ் இணையதளங்கள் உண்மைக்கு புறம்பான செய்திகளை என்னைத் தொடர்பு படுத்து வெளியிட்டிருந்தன. குறித்த செய்தியில் விபத்துக்குள்ளான பஸ் எனக்குச் சொந்தமானாதாகவும், அதற்கு வீதி போக்குவரத்து அனுமதி பத்திரம் இல்லையென்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. குறித்த பஸ் எனக்குச் சொந்தமானது அல்ல. குறித்த பஸ் காத்தான்குடியிலிருந்து சொல்வதற்காக அது எனக்...