பாண்டிருப்பு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில்நடை பெற்ற வரலெட்சுமி வழிபாடு
இந்துப் பெண்கள் கொண்டாடும் முக்கியமான விரதங்களில் வரலட்சுமி விரத பூஜை குறிப்பிடத்தக்கது. மகாலட்சுமி வரங்களை அள்ளிக்கொடுப்பதற்கு பிரசித்தி பெற்ற தெய்வம் என்பதால் லட்சுமியை நினைத்து மேற்கொள்ளும் இந்த விரதம் வரலட்சுமி விரதம் என்று அழைக்கப்படுகிறது.
எல்லா பெண்களும் இந்த விரதத்தில் பங்குகொள்வர் என்றாலும் திருமணமான பெண்கள் இந்த விரதத்தை தங்கள் மாங்கல்யம் கெட்டியாக இருக்கவூம்இ வீட்டில் சுபீட்சம் நிலைத்திருக்கவூம் அதிகம் மேற்கொள்வர்.
அதன் அடிப்படையில் அம்பாறை மாவட்டத்திலுள்ள அனைத்து ஆலயங்களிலும் வரங்கள் நல்கிடும் வரலட்சுமி பூசை இன்று வெள்ளிக்கிழமை மாலை சிறப்பாக நடை பெற்றது. கல்முனை பிரதேசத்தில் பிரதான வழிபாடுகள் பஞ்ச பாண்டவர்களின் பதியாக விளங்கும் பாண்டிருப்பில் அமையப் பெற்றுள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆலய குரு சிவஸ்ரீ ரத்தின சபா சசிசர்மா குருக்கள் தலைமையில் இடம் பெற்றன .
Comments
Post a Comment