கல்முனை வலயக் கல்வி அலுவலக நிருவாக பிரதிக் கல்விப் பணிப்பாளராக உமர் மௌலானா
கல்முனை வலயக் கல்வி அலுவலக நிருவாகத்துக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளராக மருதமுனையை சேர்ந்த டொக்டர் எஸ்.எம்.எம்.எஸ். உமர் மௌலானா நியமிக்கப்பட்டுள்ளார் .
கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தில் முகாமைத்துவத்துக்குப் பொறுப்பாக கடமையாற்றிய இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரியான இவர் கடந்த காலங்களில் மருதமுனை அல் -மனார் மத்திய கல்லூரி அதிபராகவும் ,சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்தில் நிருவாக்கத்துக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும் நீண்ட காலமாக பணியாற்றிய அனுபவம் பெற்ற இலங்கை கல்வி நிருவாக சேவையில் தரம் 11 ஐ சேர்ந்த அதிகாரியாவார் .
முகாமைத்துவத்துக்குப் பொறுப்பாக கடமை புரிந்த இவர் அத்துடன் நிருவாகத்துக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்
Comments
Post a Comment