தரம் உயர்வு பெற்ற கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் ஜலீலுக்கு நற்பிட்டிமுனை அல் -கரீம் பவுண்டேஷன் பாராட்டு
இலங்கை கல்வி நிருவாக சேவை தரம் -1 க்கு உயர்வு பெற்ற கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் அவர்களைப் பாராட்டும் நிகழ்வு இன்று (16) வியாழக்கிழமை கல்முனை அல்தாப் ஹோட்டலில் நற்பிட்டிமுனை அல் -கரீம் பவுண்டேஷன் தலைவர் சீ .எம்.ஹலீம் தலைமையில் நடை பெற்றது .
மதிய விருந்துபசாரத்துடன் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் பொன்னாடை போர்த்தி நினைவு சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டார் .
இந்த நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான Dr எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மௌலானா (கல்வி முகாமைத்துவம்), எஸ்.எல்.ஏ.ரஹீம் (கல்வி அபிவிருத்தி),பீ.எம்.வை.அரபாத் மொஹிதீன் (திட்டமிடல் ),கல்முனை கோட்டக்கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.சக்காப் உட்பட அல் -கரீம் பவுண்டேஷன் செயலாளர் யு.எல்.எம்.பாயிஸ் ,அல் -கரீம் பவுண்டேஷன் ஆலோசகரும் ,ஊடகவியலாளரும் ,சிரேஷ்ட முகாமைத்துவ உதவியாளருமான யு.எம்.இஸ்ஹாக் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
Comments
Post a Comment