Posts

Showing posts from July, 2016

கல்முனை தொகுதிக்கான வீட்டுக்கு வீடு மரம் நடுகை திட்டம்

Image
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான றவூப் ஹக்கீம் அவர்களின் வழிகாட்டலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுதுறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் தலைமையில் கல்முனை தொகுதிக்கான "வீட்டுக்கு வீடு மரம்" வேலைத்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வுகள் நாளை கல்முனை, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, மருதமுனை, நற்பிட்டிமுனை ஆகிய பிரதேசங்களில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. இதன்போது பயன் தரும் பல்லின மரக்கன்றுகள் நட்டிவைக்கப்படவுள்ளது. நிகழ்ச்சி நிரல். காலை 8.30 மணிக்கு மருதமுனை, காலை 10.00 மணிக்கு நற்பிட்டிமுனை, காலை 11.00 மணிக்கு மாளிகைக்காடு, மாலை 4.00 மணிக்கு சாய்ந்தமருது, மாலை 5.00 மணிக்கு கல்முனை.

மருதமுனை ஹரீஷா மிகவும் பொறுமையானவர் அந்தப் பொறுமையின் பிரதிபலிப்பு அவரது கவிதைகளில் தெரிகிறது

Image
 கிழக்கு மாகாண சபை முதலமைச்சின் செயலாளர் யு.எல்.ஏ.அஸீஸ் (பி.எம்.எம்.ஏ.காதர்ஏ,.எல்.எம்.சினாஸ்) “உன் மொழியில் தழைக்கிறேன்” கவிதை நூலின் ஆசிரியர் மருதமுனை ஹரீஷா மிகவும் பொறுமையானவர் அந்தப் பொறுமையின் பிரதிபலிப்பு அவரது கவிதைகளில் தெரிகிறது என கிழக்கு மாகாண சபை முதலமைச்சின் செயலாளர் யு.எல்.ஏ.அஸீஸ் தெரிவித்தார். மருதமுனை ஹரீஷாவின்“உன் மொழியில் தழைக்கிறேன்”கவிதை நூல் வெளியீட்டு விழா எழுத்தாளர் மர்ஹூம் எம்.எச்.எம்.ஷம்ஸ் நினைவரங்கில்  ஞாயிற்றுக்கிழமை(24-07-2016)மாலை மருதமுனை பொது நூலக வளநிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். எழுத்தாளரும், உதவிக்  கல்விப் பணிப்பாளருமான கலாநிதி சத்தார் எம் .பிர்தௌஸ்  தலைமையில் நடைபெற்ற  இந்த கவிதை நூல் வெளியீட்டு விழாவில் கௌரவ அதிதியாக தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறைத் தலைவர் பேராசிரியர் றமீஸ் அப்துல்லாவும்வி,ஷேட அதிதியாக கல்முனை மாநகர சபையின் ஆணையாளர் ஜே.லியாக்கத் அலியூம் கலந்து கொண்டனர். இங்கு ஊடவியலாளரும்எ, ழுத்தாளரும...

நட்பிட்டிமுனையில்த ரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான (அட்சோ)இலவசக் கருத்தரங்கு

Image
அம்பாரை மாவட்ட சமூக சேவைகள் அமைப்பு (அட்சோ) ஏற்பாடு செய்து நடாத்தி வரும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான இலவசக் கருத்தரங்கு சமீபத்தில்  நட்பிட்டிமுனை அல் -அக்ஸா  மகா வித்தியாலய ஆராதனை  மண்டபத்தில்  அமைப்பின் தலைவரும், ஓய்வு பெற்ற அதிபரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான ஏ.ஆர்.எம். ஜிப்ரியினால் நடாத்தப்பட்டது. ஜூலை 17 தொடக்கம் ஜூலை 31 வரை அம்பாரை மாவட்டத்தின் நற்பிட்டிமுனை, மருதமுனை சாய்ந்தமருது, கல்முனை, இறக்கமாமம், சம்மாந்துறை, நிந்தவூர், அட்டாளைச் சேனை, அக்கரைப்பற்று, பொத்துவில் ஆகிய பல இடங்களில் இந்த இலவசக் கருத்தரங்கு இடம்பெறவுள்ளது. நட்பிட்டிமுனை  அல் - கரீம்  நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக சேவைகள் அமைப்பின் தலைவர் சி.எம்.ஹலீம் விடுத்த வேண்டு கோளை  ஏற்று  இந்தக் கருத்தரங்கு  நட்பிட்டிமுனையில்  நடை பெற்றது .  

க. பொ த உயர்தர பரீட்சையில் இலத்திரனியல் உபகரணங்கள் வைத்திருந்தால் 5 வருட பரீட்சைத் தடை

Image
க. பொ. த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் கையடக்க தொலைபேசிகள், ஸ்மார்ட் கைக் கடிகாரங்கள் உள்ளிட்ட இலத்திரனியல் உபகரணங்கள் எடுத்து வருவதனை தவிர்த்துக்கொள்ளுமாறு பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. மேற்படி உபகரணங்கள் பரீட்சை மண்டபத்தினுள் பரீட்சார்த்திகளுடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் பெறுபேறுகள் ரத்து செய்யப்படும். இவர்களுக்கு 05 வருடங்களுக்கு எந்தவொரு அரசாங்கப் பரீட்சைகளும் எழுத அனுமதிக்கப்படமாட்டாது. கண்டு பிடிக்கப்படும் கையடக்கத் தொலைபேசி அல்லது ஸ்மார்ட் கைக்கடிகாரம் அல்லது இலத்திரனியல் சாதனங்கள் அரசுடமையாக்கப்படும். எதிர்வரும் 02 ஆம் திகதி க. பொ. த உயர்தரப் பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் இவற்றை கண்டுபிடிப்பதற்கென நான்கு விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. அத்துடன் வலய மட்டத்திலும் விசேட குழுக்கள், கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும். கையடக்கத் தொலைபேசிகள், ஸ்மார்ட கைக்கடிகாரங்கள் மற்றும் இலத்திரனியல் உபகரணங்கள் என்பவற்றை மாணவர்கள் எடுத்து வருகிறார்களா என்பதனை தீவிரமாக கண்காணிக்குமாறு பரீட்சை மண்டப உத்தியோகத்தர்களுக்கும் கண்காணிப்பாளர்களுக்கும் பரீட்சைகள் திண...

ஒலுவில் பாதிப்பு குறித்து பாராளுமன்றத்தில் காட்டமாக உரையாற்றிய மன்சூர்....

Image
நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற தலைப்பில் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன அவர்களால் நேற்று முன்தினம் சமர்ப்பிக்கப்பட்ட ஒத்திவைக்கப்பட்ட விவாத வேளையின் போது அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் உரையாற்றினார். பாராளுமன்றில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் ள் உரையாற்றும் போது "நாட்டினுடைய பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டுமானால் நாடு, மக்கள், வளங்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டியது அவசியமானதொன்றாகும். அம்பாறை மாவட்டத்தை பொறுத்தளவில் கடந்த ஆட்சியின் போது திட்டமிட்ட முறையில் தமிழ், முஸ்லிம் மக்களுக்குரிய அவர்களுக்கு உரித்தான காணிகளின் உரிமைப்பத்திரங்களை கொண்டிருந்த போதும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகளில் விவசாயம் செய்ய விடாமல் தடுத்த ஒரு நிலைமை காணப்பட்டு வந்தது. அவ்வாறானதொரு நிலைமை இந்த ஆட்சியின் போதும், நல்லாட்சியின் போதும், தேசிய அரசாங்கத்தின் ஆட்சியிலும் நீடிப்பதானது அனுமதிக்க முடியாத ஒரு விடயமாகும். இந்த அரசாங்கத்தின் நல்லாட்சியில் அவசரமாக அம்பாறை மாவட்டத்திலேயே இருக்கின்ற சகல காணிப்பிரச்சினைகளையும் தீர்த்...

வெற்றியுடன் நிறைவடைந்த அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் " ஊடக குடும்ப சவாரி "

Image
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்  சம்மேளனத்தின்   ஊடக  குடும்ப சவாரி  இன்று  நிந்தவூர்  அட்டப்பள்ளம் இஸ்மாயில் மாஸ்டர்  தோட்டத்தில் நடை பெற்றது . இதில் சம்மேளன   ஊடகவியலாளர்களின்   குடும்பத்தவர்கள்  கலந்து கொண்டு சிறப்பித்தனர் . இங்கு இடம் பெற்ற  10க்கும் மேற்பட்ட விளையாட்டுப்  போட்டிகளில் ஊடகவியலாளர்களும்,அவர்களது  துணைவியரும் ,பிள்ளைகளும் பங்குபற்றினர் .  பங்கு பற்றி  வெற்றி பெற்றவர்களுக்கு  பரிசுகளும்  வழங்கப் பட்டன . ஊடக குடும்பசவாரி நிகழ்வில்  கலை காலாச்சார  நிகழ்வுகளும் இடம் பெற்றன. அம்பாறை  மாவட்ட ஊடகவியலாளர்  சம்மேளனத்தின்  தலைவர்  கலாபூசணம்  மீரா எஸ்.இஸ்ஸதீன் தலைமையில் இடம் பெற்ற  நிகழ்வில்  அம்பாறை மாவட்ட  இலங்கை வாங்கி பிராந்திய  முகாமையாளர் ஐ.எல்.எம்.ஹனிபா , நட்பிட்டிமுனை  அல் - கரீம்  நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக சேவைகள் அமைப்பின் தலைவர் சி.எம்.ஹலீம் , அக்கரைப்பற்று  மத்திய பலநோக்கு கூட்டுறவுச் சங்க ...

ஐக்கிய தேசியக் கட்சி வழங்காத பதவிக்கு உரிமை கோரியவர்கள் கட்சியில் இருந்து விலகி உள்ளனர்

Image
நட்பிட்டிமுனையில்     ஐ க்கிய தேசியக் கட்சி  உறுப்பினர்கள் இருவர்   அகில  இலங்கை மக்கள்   காங்கிரசில்   இணைந்தமை தொடர்பில்  ஐக்கிய தேசியக்  கட்சி முக்கியஸ்தரும்    கல்முனை மாநகர சபை  முன்னாள்  உறுப்பினருமான  ஏ.எச் .எச்.ஏ.நபார் கருத்து தெரிவிக்கையில்  எம்முடன்   இருந்து  விலகிய இருவரும்  கட்சியின் உத்தியோக பூர்வமான எந்தப்  பதவியையும் வகிக்காதவர்கள் . கட்சிக்கு  அவப் பெயரை  உண்டாக்கும்   வகையில்  தங்களுக்கு தாங்களே  பெயர் சூட்டியுள்ளனர் என்றார் 

நற்பிட்டிமுனை ஐக்கியதேசியக் கட்சி இளைஞர் அமைப்பாளர் அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைவு

Image
நற்பிட்டிமுனை  ஐக்கிய தேசியக் கட்சி இளைஞர் அமைப்பாளர் எம்.எல்.எம்.அன்சார்  மற்றும்  இளைஞர் அமைப்பின்  செயலாளர் ஏ.அர்ஷாத் ஆகியோர் அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்து கொண்டுள்ளனர் . கல்முனை தொகுதி  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  இளைஞர் அமைப்பாளர்  சீ.எம்.ஹலீமுடன்  இணைந்து  கட்சி அங்கத்துவத்தைப் பெற்றுள்ளதாகவும் . கடந்த காலத்தில் தொடர்ந்து  ஐக்கிய தேசியக் கட்சியினால் ஏமாற்றப் பட்டு வந்ததாகவும்  அக்கட்சியில் இருந்து விலகி அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்ததாகவும்  எதிர் காலத்தில் அக்கட்சியின் வெற்றிக்கு  உழைக்கப் போவதாகவும்  எம்.எல்.எம்.அன்சார் தெரிவித்தார் 

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் ஊடக குடும்ப சவாரி -03

Image
அம்பாறை   மாவட்ட   ஊடகவியலாளர்   சம் மேளனத்தின் இவ்வருட நோன்பு பெருநாள்  ஊடக குடும்ப சவாரி -03 ஒன்றுகூடல் நிகழ்வு    எதிர்வரும் சனிக்கிழமை 23ஆம் திகதி  காலை 8.30 மணிக்கு நிந்தவூர் அட்டப்பள்ளம்  இஸ்மாயில் மாஸ்டர் தோட்டத்தில்  இடம்பெறவுள் ளது. சம்மேளனத்தின்  தலைவர்   கலாபூ ஷணம்  மீரா எஸ். இஸ்ஸடீன் தலைமையில்  இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில்  கலை,கலாசார நிகழ்ச்சிகள்,  ஊடகவியலாளர்களின் சிறார்களுக்கான விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகளும் , பரிசளிப்பு நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபையின் கல்முனை பஸ் டிப்போ முகாமையாளராக நட்பிட்டிமுனை ஜஹ்பர் நியமனம்

Image
இலங்கை  போக்குவரத்து சபையின்  கல்முனை  பஸ்  டிப்போ முகாமையாளராக  நட்பிட்டிமுனையை சேர்ந்த  வெள்ளைத்தம்பி    ஜஹ்பர்  நியமிக்கப் பட்டுள்ளார் . கடந்த வெள்ளிக்கிழமை  தனக்கான கடமைகளை  ஜஹ்பர் பொறுப்பேற்றார் . இலங்கை  போக்குவரத்து சபையின்  கிழக்குப் பிராந்திய  முகாமையாளர் ஏ.எல்.சித்தீக் இவருக்கான நியமனக் கடிதத்தை வழங்கியதுடன்  இவர் முன்னிலையில் கடமைகளையும்  பொறுப்பேற்றார் . டிப்போ  ஊழியர்கள் கடமையை பொறுப்பேற்ற புதிய  முகாமையாளர் ஜஹ்பருக்கு  பாராட்டுக்களும் பரிசுகளும் வழங்கி கெரவித்தனர் 

திவிநெகும சிறுவர் கலை, கலாசார போட்டி

Image
(அப்துல் அஸீஸ்) கல்முனை பிரதேச மட்ட திவிநெகும சிறுவர் கலை, கலாசார போட்டி நிகழ்வு நேற்று (17)  கல்முனை பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் பாடல், சித்திரம் , நடடார் பாடல், அறிவிப்பு, சிறுவர் கதை, நடனம், கிராமிய   நடனம், பேச்சு, குறு நாடகம் ஆகிய நிகழ்வுகளில்  29 பிரிவுகளை சேர்ந்த மாணவர்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். கல்முனை பிரதேச செயலக    திவிநெகும சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.எம்.நெளசத்தின் ஒருங்கிணைப்பிலும்,  திவிநெகும தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நடுவர்களாக ஆசிரிய ஆலோசகர் கே.சாந்தக்குமார்,  ஆசிரியர்களான ஏ.ஏ.எம்.ரஸீன்,எம்.எம்.ஏ.ஹக்கீ ம், முகாமைத்துவ உதவியாளர் திருமதி எஸ்.கைலேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் நடை பெற்ற " பெருநாள் குதூகலம் கலாச்சார உணவு பரிமாறல்"

Image
கல்முனை வலயக்  கல்வி அலுவலக நலன் புரிச் சங்கம் ஏற்பாட்டில் கல்முனை வலயக்  கல்வி அலுவலகத்தில்  நடை பெற்ற பெருநாள் குதூகலம் கலாச்சார உணவு பரிமாறல்  நிகழ்வு  நேற்று  கல்முனை வலயக் கல்வி அலுவலக மண்டபத்தில் நடை பெற்றது. வலயக்கல்வி அலுவலக  நலன்புரிச்சங்க  தலைவர் யூ.எம்.இஸ்ஹாக் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில்  வலையாக கல்வித் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல்   ஜலீல் பிரதம அதிதியாகவும் , பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான  வீ.மயில் வாகனம் ,எஸ்,எல்,ஏ,ரஹீம் .பீ.எம்.வை.அரபாத், திருமதி பீ.ஜிஹானா அலிஃப்  மற்றும் வலயக் கல்வி அலுவலக கணக்காளர் கே.ரிஸ்வி யஹ்சர் , பொறியியலாளர் ஜீ அருண் ஆகியோர் கெளரவ அதிதிகளாகவும் மற்றும் கோட்ட க்கல்விப்  பணிப்பாளர்கள்,உதவிக்கல்விப் பணிப்பாளர்கள் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர். அம்பாறை வலயக்  கல்வி அலுவலக கணக்காளர் எல்,ரீ . சாலிதீன்  நிகழ்வில்  கலந்து கொண்டார்  கடந்த நோன்பு பெருநாளை சிறப்பிக்கும் வகையில் நலன்புரி சங்கம் ஏற்பாடு செய்த...