க. பொ த உயர்தர பரீட்சையில் இலத்திரனியல் உபகரணங்கள் வைத்திருந்தால் 5 வருட பரீட்சைத் தடை


க. பொ. த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் கையடக்க தொலைபேசிகள், ஸ்மார்ட் கைக் கடிகாரங்கள் உள்ளிட்ட இலத்திரனியல் உபகரணங்கள் எடுத்து வருவதனை தவிர்த்துக்கொள்ளுமாறு பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
மேற்படி உபகரணங்கள் பரீட்சை மண்டபத்தினுள் பரீட்சார்த்திகளுடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் பெறுபேறுகள் ரத்து செய்யப்படும். இவர்களுக்கு 05 வருடங்களுக்கு எந்தவொரு அரசாங்கப் பரீட்சைகளும் எழுத அனுமதிக்கப்படமாட்டாது. கண்டு பிடிக்கப்படும் கையடக்கத் தொலைபேசி அல்லது ஸ்மார்ட் கைக்கடிகாரம் அல்லது இலத்திரனியல் சாதனங்கள் அரசுடமையாக்கப்படும்.

எதிர்வரும் 02 ஆம் திகதி க. பொ. த உயர்தரப் பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் இவற்றை கண்டுபிடிப்பதற்கென நான்கு விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. அத்துடன் வலய மட்டத்திலும் விசேட குழுக்கள், கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும்.

கையடக்கத் தொலைபேசிகள், ஸ்மார்ட கைக்கடிகாரங்கள் மற்றும் இலத்திரனியல் உபகரணங்கள் என்பவற்றை மாணவர்கள் எடுத்து வருகிறார்களா என்பதனை தீவிரமாக கண்காணிக்குமாறு பரீட்சை மண்டப உத்தியோகத்தர்களுக்கும் கண்காணிப்பாளர்களுக்கும் பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிவுறுத்தலை விடுத்துள்ளது.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது