வெற்றியுடன் நிறைவடைந்த அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் " ஊடக குடும்ப சவாரி "

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்  சம்மேளனத்தின்   ஊடக  குடும்ப சவாரி  இன்று  நிந்தவூர்  அட்டப்பள்ளம் இஸ்மாயில் மாஸ்டர்  தோட்டத்தில் நடை பெற்றது . இதில் சம்மேளன   ஊடகவியலாளர்களின்   குடும்பத்தவர்கள்  கலந்து கொண்டு சிறப்பித்தனர் .

இங்கு இடம் பெற்ற  10க்கும் மேற்பட்ட விளையாட்டுப்  போட்டிகளில் ஊடகவியலாளர்களும்,அவர்களது  துணைவியரும் ,பிள்ளைகளும் பங்குபற்றினர் .  பங்கு பற்றி  வெற்றி பெற்றவர்களுக்கு  பரிசுகளும்  வழங்கப் பட்டன .
ஊடக குடும்பசவாரி நிகழ்வில்  கலை காலாச்சார  நிகழ்வுகளும் இடம் பெற்றன.
அம்பாறை  மாவட்ட ஊடகவியலாளர்  சம்மேளனத்தின்  தலைவர்  கலாபூசணம்  மீரா எஸ்.இஸ்ஸதீன் தலைமையில் இடம் பெற்ற  நிகழ்வில்  அம்பாறை மாவட்ட  இலங்கை வாங்கி பிராந்திய  முகாமையாளர் ஐ.எல்.எம்.ஹனிபா , நட்பிட்டிமுனை  அல் - கரீம்  நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக சேவைகள் அமைப்பின் தலைவர் சி.எம்.ஹலீம் , அக்கரைப்பற்று  மத்திய பலநோக்கு கூட்டுறவுச் சங்க தலைவர் ஏ.எல்.எம்.றபீக் ,அம்பாறை  மாவட்ட கலாச்சார  உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.தௌபீக் , காரைதீவு முன்னாள் பிரதேச சபை தவிசாளர்  செல்லையா ராசையா  ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .

சங்கத்தின்  பொருளாளர்  யு.எம்.இஸ்ஹாக்  வரவேற்புரை  நிகழ்த்தி வந்தோரை  வரவேற்க  சம்மேளன தலைவர்  மீரா இஸ்ஸதீன் தலைமையுரை நிகழ்த்தினார் . சிரேஷ்ட ஊடகவியலாளரும் சம்மேளனத்தின் உப தலைவருமான  ஏ.எல்.எம்.சலீம்  விசேட  உரை நிகழ்த்தினார்.

மட்டக்களப்பு  மாவட்ட  ஊடகவியலாளர்களான  காத்தான்குடியை   சேர்ந்த முஸ்தபான மௌலவி,நூருதீன்  ஆகியோரும் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர் . 
கலந்து கொண்ட அனைவருக்கும்  ஊடக குடும்ப சவாரி  மதிய உணவு  தாமரை இலையில்  பரிமாறப் பட்டதுடன்  நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து  ஊடகவியலாளர்களின்  பிள்ளைகளுக்கும்   கற்றல் உபகரணங்களும்  வழங்கப் படடன .
நிகழ்வின் இறுதியில் சம்மேளனத்தின் செயலாளர்  எஸ்.எல் .ஏ.அஸீஸ்  நன்றியுரை வழங்கினார் .




















Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்