ஒலுவில் பாதிப்பு குறித்து பாராளுமன்றத்தில் காட்டமாக உரையாற்றிய மன்சூர்....

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற தலைப்பில் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன அவர்களால் நேற்று முன்தினம் சமர்ப்பிக்கப்பட்ட ஒத்திவைக்கப்பட்ட விவாத வேளையின் போது அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் உரையாற்றினார். பாராளுமன்றில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் ள் உரையாற்றும் போது "நாட்டினுடைய பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டுமானால் நாடு, மக்கள், வளங்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டியது அவசியமானதொன்றாகும். அம்பாறை மாவட்டத்தை பொறுத்தளவில் கடந்த ஆட்சியின் போது திட்டமிட்ட முறையில் தமிழ், முஸ்லிம் மக்களுக்குரிய அவர்களுக்கு உரித்தான காணிகளின் உரிமைப்பத்திரங்களை கொண்டிருந்த போதும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகளில் விவசாயம் செய்ய விடாமல் தடுத்த ஒரு நிலைமை காணப்பட்டு வந்தது. அவ்வாறானதொரு நிலைமை இந்த ஆட்சியின் போதும், நல்லாட்சியின் போதும், தேசிய அரசாங்கத்தின் ஆட்சியிலும் நீடிப்பதானது அனுமதிக்க முடியாத ஒரு விடயமாகும். இந்த அரசாங்கத்தின் நல்லாட்சியில் அவசரமாக அம்பாறை மாவட்டத்திலேயே இருக்கின்ற சகல காணிப்பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பதன் மூலமாக அந்த காணிப்பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு இருக்கின்ற விவசாயிகளுக்கு நிவாரணத்தை வழங்குவதால், நாட்டினுடைய உணவு உற்பத்தியிலும் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்த முடியுமென நான் கருதுகின்றேன்". பாராளுமன்றில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் மேலும் உரையாற்றும்போது.... " அதே போன்றுதான் கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்திலும் எவ்விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தினால் ஒலுவில் பிரதேசமானது மிகவும் மோசமான கடலரிப்புக்கு உள்ளான சம்பவமும் இடம்பெற்றது. தற்போது இந்த ஒலுவில் கடலரிப்பானது படு மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியதாக காணப்படுகின்றது. கடலரிப்பினால் ஏற்பட்ட தாக்கமென்பது நடந்தேறிய தாக்கமல்ல. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் பல தென்னந்தோப்புக்களும், மக்கள் குடியிருப்புகளும், துறைமுகத்துக்கு சொந்தமான கட்டிடங்களும் கடலரிப்புக்குள்ளாகி படிப்படியாக நிலங்களை கடல் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றது. மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரமாக கொண்டிருந்த மீனவ தொழிலை மேற்கொள்ள முடியாதவர்களாக சொல்லென துயரங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள். பல மீனவர்கள் தொழிலை கைவிட்டு விரக்தியடைந்து உள்ளார்கள். மேலும் மீனவர்கள் தற்காலிகமாக அமைத்த தங்குமிடங்கள் கடலரிப்பினால் கழுவப்பட்டு போகின்ற நிலைமை நீடித்து வருகின்றது. மீண்டும் மீண்டும் மீனவர்கள் கூடாரங்களை நிமாணித்த போதும் அவைகளும் நீரினால் அடித்துச் சொல்லப்படுகின்ற நிலையே காணப்படுகின்றமை பரிதாபகரமாக உள்ளது. அதேபோல் பல்வேறு குடியிருப்பு காணிகளிலுள்ள மக்கள் வாழுகின்ற வீடுகளை கூட இழக்கின்ற சூழலே இந்த கடலரிப்பினால் ஏற்பட்டுள்ளதை கவலையோடு சுட்டி காட்டுகின்றேன். ஆகவேதான் இந்த விடயங்கள் தொடர்பாக கடந்த அரசாங்கம் பாராமுகமாக இருந்தாலும், இந்த அரசாங்கத்தில் நல்லாட்சியென பெருமைப்பட்டு பேசுகின்ற ஒரு ஆட்சியிலே தொடர்ந்தும் இவ்வாறான நிலைமை நீடிப்பதை அனுமதிக்காமல் இப்பிரச்சினைகளுக்கு தகுந்த ஏற்பாடுகளை செய்தேயாக வேண்டும். ஒலுவில் கடலரிப்பினால் காணிகளை சொத்துக்களை இழந்த மக்களுக்கு, தொழிலை இழந்த மீனவர்களுக்கு நஷ்டஈடுகளை வழங்குவதோடு மிக அவசரமாக இந்த கடலரிப்புக்கு உள்ளாகின்றமையை தடுத்து அதற்கான தகுந்த மாற்று ஏற்பாடுகளுடன் கூடிய நடவடிக்கைகளை செய்தேயாக வேண்டும் என இவ்வுயரிய சபையில் கேட்டுக் கொள்கின்றேன். மேலும் கரையோர பாதுகாப்பு திணைக்களம் இந்த விடயத்தில் என்ன ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்பதை கேட்க வேண்டிய அவசியம் எழுந்திருக்கின்றது. ஆகவே சம்பந்தப்பட்ட கரையோர பாதுகாப்பு திணைக்களம் மிக அவசரமாக ஒலுவில் கிராமத்தை பாதுகாக்கின்ற நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். ஒலுவில் பிரதேசத்தை பாதுகாப்பது எமது நாட்டை பாதுகாப்பது போன்றதாகும். எங்கோ ஒரு மூலையில் ஒலுவில் பாதிக்கப்படுகின்றது என்பதற்காக பாராமுகமாக இருந்தால் நாட்டினுடைய நிலவளம் இல்லாமல் போய் நாட்டின் அழகான வடிவமானது மாறுபட்டு மிக மோசமான நிலைக்கு தள்ளப்படும் வாய்ப்பிருக்கின்றது. ஆகவே சம்பந்தப்பட்ட திணைக்களம் ஒலுவில் கடலரிப்பு சம்பந்தமாக மிக அவசரமாக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, பாதிக்கப்பட்ட ஒலுவில் மக்களுக்கு போதுமான நிவாரணத்தையும் பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டுமெனவும் கேட்டு விடை பெறுகின்றேன்". என பாராளுமன்றத்தில் 2016.07.22 ஆந் திகதி மாலை தனது காட்டமான உரையை பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் ஆற்றினார். "மூத்த போராளி"

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது