நட்பிட்டிமுனையில்த ரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான (அட்சோ)இலவசக் கருத்தரங்கு
அம்பாரை மாவட்ட சமூக சேவைகள் அமைப்பு (அட்சோ) ஏற்பாடு செய்து நடாத்தி வரும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான இலவசக் கருத்தரங்கு சமீபத்தில் நட்பிட்டிமுனை அல் -அக்ஸா மகா வித்தியாலய ஆராதனை மண்டபத்தில் அமைப்பின் தலைவரும், ஓய்வு பெற்ற அதிபரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான ஏ.ஆர்.எம். ஜிப்ரியினால் நடாத்தப்பட்டது.
ஜூலை 17 தொடக்கம் ஜூலை 31 வரை அம்பாரை மாவட்டத்தின் நற்பிட்டிமுனை, மருதமுனை சாய்ந்தமருது, கல்முனை, இறக்கமாமம், சம்மாந்துறை, நிந்தவூர், அட்டாளைச் சேனை, அக்கரைப்பற்று, பொத்துவில் ஆகிய பல இடங்களில் இந்த இலவசக் கருத்தரங்கு இடம்பெறவுள்ளது.
நட்பிட்டிமுனை அல் - கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக சேவைகள் அமைப்பின் தலைவர் சி.எம்.ஹலீம் விடுத்த வேண்டு கோளை ஏற்று இந்தக் கருத்தரங்கு நட்பிட்டிமுனையில் நடை பெற்றது .
நட்பிட்டிமுனை அல் - கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக சேவைகள் அமைப்பின் தலைவர் சி.எம்.ஹலீம் விடுத்த வேண்டு கோளை ஏற்று இந்தக் கருத்தரங்கு நட்பிட்டிமுனையில் நடை பெற்றது .
Comments
Post a Comment