Posts

Showing posts from August, 2015

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நாளை முதல் மீண்டும் இலவச அஞ்சல் வசதி

Image
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இலவசமாக விசேட முத்திரை தபால் வசதிகளை வழங்கும் நடவடிக்கை நாளை (01) தொடக்கம் ஆரம்பமாகவுள்ளது என்று தபால் மா அதிபர்  டி.எம்.பி.ஆர். அபயரத்ன கூறியுள்ளார். தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த குறித்த வசதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளது என அவர் சுட்டிக்காட்டினார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், கடந்த ஜூன் மாதம் 26ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து உறுபினர்கள் பதவி ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் உத்தியோகபூர்வ கடிதங்களை அனுப்ப வழங்கப்பட்டிருந்த வரப்பிரசாதமும் இடைநிறுத்தப்பட்டது.   நாளை புதிய பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இடம்பெற்றுள்ளதையடுத்து மீண்டும் அவ்வசதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அனைத்து அஞ்சல் அதிபர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

புதிய பாராளுமன்றம் நாளை காலை கூடுகிறது

Image
புதிய பாராளுமன்றம் நாளை காலை கூடுகிறது. காலை 9.30 மணிக்கு சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கும் நிகழ்வில் முதலில் பாராளுமன்றத்தின் சபாநாயகர் தெரிவு இடம்பெறவுள்ளது. கடந்த 17ஆம் திகதி  நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் கூடி சபாநாயகரைத் தெரிவு செய்வார்கள் என்று பாராளுமன்ற செயலாளர் நாயகம்  டபிள்யு.பி.டி. தசநாயக்க தெரிவித்துள்ளார். சபாநாயகராக ஒருவர் தெரிவு செய்யப்பட்டால் அவர் ஏற்றுக்கொள்ளப்படுவார் என்றும் இருவர் அல்லது அதற்கு மேற்பட்டோர் தெரிவு செய்யப்பட்டால் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். சபாநாயகரின் தெரிவை அடுத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் முன்பாக பதவிப் பிரமாணம் செய்துகொள்வார்கள். இதேவேளை பிற்பகல் 3மணிக்கு சபை ஒத்திவைக்கப்டபவுள்ளது. அதனைத் தொடர்ந்து நடைபெறும் அமர்வில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலமையிலான வைபவரீதியலான அமர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது நாட்டின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொள்கை விளக்க உரையாற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பாராளுமன்றம் ...

உள்ளகப் பொறிமுறையை நிராகரித்து சர்வதேச நீதி விசாரணை அவசியம்

Image
தமிழ் தேசிய கூடமைப்பின் அங்கத்துவ கட்சிகளான தமிழ் விடுதலை இயக்கம் ( ரெலோ ), தமிழ் மக்கள் விடுதலை கழகம் (புளொட்), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி (ஈபி .ஆர் .எல் .எப்) ஆகியவற்றின் உயர் மட்ட உறுப்பினர்கள் கொழும்பில் 2015 ஆகஸ்ட் 30ம் திகதி நேற்று  கூடி தேர்தலுக்குப் பின்னரான கள நிலவரங்கள் தொடர்பாகவும், அரசியல் நிலவரங்கள் தொடர்பாகவும் ஆராய்ந்தனர். மேலும் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் வர இருக்கும் ஐக்கிய நாடுகள்  மனித உரிமைப் பேரவையின் கூட்ட தொடர் பற்றியும் , இலங்கையில் நடைபெற்ற போரின் பொழுது நடைபெற்ற குற்றங்கள் தொடர்பான விசாரணை அறிக்கை பற்றியும் கலந்துரையாடப் பட்டது. அத்துடன் வரும் ஜெனீவா கூட்டத் தொடரில் அமெரிக்கா இலங்கை அரசுடன் இணைந்தது கொண்டு வரவிருக்கும் தீர்மானம் தொடர்பாகவும் கலந்துரையாடப் பட்டத்துடன் உள்ளகப் பொறிமுறையை நிராகரித்து சர்வதேச நீதி விசாரணையைத் தொடர்ந்து  முன்னெடுத்துக் கொள்வதற்கான பொறிமுறை ஒன்றை வலியிறுத்துவது என்றும் தீர்மானிக்கப் பட்டது. நடைபெற்று முடிந்த  பாராளுமன்றப் பொதுத் தேர்தலுக்கு முன்னரும் அதன் பின்னரும் கூட்டமைப்புக்கு...

கல்முனையில் பால் நிலை தொடர்பான கருத்தரங்கு

Image
ஏ,பி.எம்.அஸ்ஹர் கல்முனை பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆண் பெண் பால் நிலை  தொடர்பான கருத்தரங்கொன்று இன்று நடைபெற்றது. பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி தலைமையில் கல்முனைக்குடி றோயல் வித்தியாலயத்தில் நடை பெற்ற இந்நிகழ்வில் கல்முனை பொலிஸ் நிலைய தலைமைப் பொறுப்பதிகாரி ஏ.டப்ளியு.ஏ கப்பார் மற்றும் டாக்டர் சராப்டின் ஆகியோர்  வளவாளர்களாகக் கலந்து  கொண்டதுடன்  பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல் .முஸ்பிரா,ஒ.கே.எப் ஸரீபா றோயல் வித்தியாலய அதிபர் எம்.எச்.எம்.அன்ஸார்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கல்முனை வலயக் கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள் சுற்றுலா

Image
கல்முனை வலயக் கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள் நேற்று கணக்காளர் எல்.ரீ.சாலிதீன் தலைமையில் சுற்றுலா சென்ற போது மட்டக்களப்பு  முகத்துவாரத்தில்  தங்கியிருந்து  கொக்கு தீவு பகுதிக்கு சென்று வந்தனர்

நாளை முதல் 3ம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம் !

Image
இந்த ஆண்டின் மூன்றாம் தவணைக்காக அனத்து தமிழ் மற்றும் சிங்கள மொழி மூல பாடசாலைகளும் நாளை மீண்டும் ஆரம்பிக்கப்படும். க.பொ.த. உயர்தரம் மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் வினாத்தாள்கள் திருத்தும் பாடசாலைகள் தவிர்ந்த மற்ற அனைத்து பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கைகள் மீண்டும் நாளை முதல் ஆரம்பிக்கப்பம் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. க.பொ.த. உயர்தர பரீட்சையின் விடைத்தாள்களை திருத்தும் பாடசாலைகள் வரும் 28ம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும். அத்துடன் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் விடைத்தாள்கள் திருத்தும் பாடசாலைகள் வரும் 15ம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. இது தவிர க.பொ.த. உயர்தர பரீட்சை செப்டம்பர் மாதம் 8ம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது .

மண்டூர் கந்தனின் தீர்த்தோற்சவம் ! பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் !!!

Image
மட்டக்களப்பு பிரதேச நீண்ட பாரம்ரிய வழிபாட்டு முறைகளையும் அதனோடு கூடிய பண்பாட்டுக்கோலஙகளையும் இயற்கையோடியைந்த இறைவழிபாட்டினையும் மெருகு குறையாது இன்னும் கட்டிக்காக்கின்ற பெருமை மண்டூர் ஆலயத்திற்கே உண்டு. கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு நகரின் தெற்கே சுமார்  30  கிலோமீற்றர் தூரத்தில் இயற்கை அழகு செறிந்த மண்டூர்.அமைந்துள்ளது தில்லை மரங்கள் அடந்த காட்டில் இளந்தென்றல் மெய்லென வீசும் அமைதியான சூழலிலே தானாக அடியார்களுக்கு அருள்பாலிப்பதற்காக வந்துதித்த ஒளி வீசும் வேலாயுதமாகும் முருகப்பெருமானார்    சூரபத்மனைத் சங்கரித்த வேலாயுதத்தில் பிறந்த மூன்று ஒளிப்பிளம்புகளில் ஒன்று உகந்தமலையிலும்.இன்னொன்று திருக்கோவில் வெள்ளைநாவல் மரமொன்றிலும் மற்றையது மண்டூர் தில்லைமரத்திலும் வேல்களாக உதித்து காட்சி கொடுத்தன.என்பது கர்ண பரம்பரையின் ஐதீகக் கதை தில்லை மண்டூர் ஆலயத்தின் வருடாந்த உற்சவமானது மிகவும் விமரிசையாக ஆகஸ்ட் மாதம்  9 ந் திகதி ஞாயிறு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து  20  நாட்கள் எம்பெருமானின் திருவிழா நடைபெற்றது ஆகஸ்ட் மாதம்   29 ந் திகதி சனிக்கிழம...

ஹரீஸ் ,மன்சூர் வாக்களித்த மக்களின் காலடிக்கு சென்று நன்றி தெரிவிப்பு

Image
திகாமடுல்ல மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், எம்.ஐ.எம்.மன்சூர் ஆகியோர்   நேற்று சனிக்கிழமை (29) காலை முதல் இரவு  12 மணி வரை அம்பாறை மாவட்டத்தின் பல ஊர்களுக்கு நேரடியாக விஜயம் செய்து வாக்களித்த மக்களுக்கு நன்றிகளைத் தெரிவித்தனர்  சவளக்கடை, சென்றல் கேம்ப், கொலணி  பிரதேசங்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக சென்ற பாராளுமன்ற உறுப்பிகளை பிரதேச மக்கள் பட்டாசு கொளுத்தி மாலை அணிவித்து வீதி வீதியாக   இன்முகத்துடன் வரவேற்றனர் . இதன்போது இப்பிரதேசங்களில் இடம்பெற்ற நன்றி நவிலல் கூட்டங்களிலும் கலந்து கொண்டனர் . 

இரத்துச் செய்யப் பட்ட கிழக்கு மாகாண கணித வினா விடைப் போட்டி மீண்டும் எதிர் வரும் 11 ஆம் திகதி

Image
இவ்வருடம் கிழக்கு மாகாண  கல்வி திணைக்களத்தினால் நடாத்தப் பட்டு பெறு  பேறுகள்  இரத்துச் செய்யப் பட்ட தரம் 06 தொடக்கம் தரம் 12 மாணவர்களுக்கான மாகாண மட்ட  கணித வினா விடைப் போட்டி  மீண்டும்  எதிர் வரும் 11 ஆம் திகதி வெள்ளிக் கிழமை நடாத்தப் படவுள்ளதாக  கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ .நிஸாம் சகல வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும்  அறிவித்துள்ளார் . கிழக்கு மாகாண மட்ட  கணித வினா விடைப் போட்டி தொடர்பாக  மாகாண  கல்விப் பணிப்பாளர்  கிழக்கு மாகாணத்தில் உள்ள வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு  இது தொடர்பாக தெரிவித்துள்ளதாவது  கிழக்கு மாகாண  கணித வினா விடைப் போட்டி 2015 ஆணி மாதம் 04 ஆம் திகதி மூன்று மொழிகளிலும்  நடாத்தப் பட்டு  பின்பு மாகாணத்தில் நிலவிய அசாதாரண  சூழ் நிலை காரணமாக எமது  குழுவினால்  நடாத்தப் பட்ட போட்டி பெறு பேறுகள்  செல்லுபடியற்றதாக்கப் பட்டது. அப்போட்டியை  மீண்டும்  20.08.2015 இல் மட்டக்களப்பு  மஹாஜனக்  கல்லூரியில் நடாத்த...

வாங்காம மக்களுக்கு ஹரீஸ் MP நன்றி தெரிவிப்பு ! அவருக்கு மக்கள் வரவேற்பு !!

Image
கடந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ்  மாவட்டத்தில் வாக்களித்த மக்களுக்கு நன்றி செலுத்தி வருகின்றார் . அதன் அடிப்படையில் வாங்காமம்  பிரதேசத்துக்கு சென்ற  பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ்  அங்கு திரண்ட மக்களால் வரவேர்க்கப் பட்டார். 

கிழக்கு வான் பரப்பில் விமானங்கள் பறப்பின் அச்சப்பட தேவையில்லை

Image
இராணுவத்தின் பிரதான அதிகாரி மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் எதிர்வரும் மூன்றாம் திகதி ஆரம்பமாகவுள்ள நீர்காகம் கூட்டுப் பயிற்சியின் போது கிழக்கு மாகாண வான்பரப்பில் விமானங்கள் பறக்கக்கூடும் என்றும் இதனால் மக்கள் அச்சமடைய தேவையில்லையென்று இலங்கை இராணுவத்தின் பிரதான அதிகாரி மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் தெரிவித்தார். செப்டெம்பர் 3ஆம் திகதி நீர்காகம் கூட்டுப்பயிற்சி ஆரம்பமாகவுள்ளது. இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் 6ஆவது தடவையாக முப்படையினர் இணைந்து நடத்தும் இப்பயிற்சியானது இம்முறை கொக்கிளாய் தொடக்கம் யாழ்ப்பாணம் வரை நடைபெறவுள்ளது. பயிற்சி நடக்கவுள்ள பிரதேசங்களில் விமானங்கள் பறப்பதையிட்டு மக்கள் அச்சமடையத் ​தேவையில்லையென்றும் இதனால் மக்களின் அன்றாட நடவடிக்கையில் எவ்வித பாதிப்பும் ஏற்படப்போவதில்லையென்றும் அவர் மேலும் தெரிவித்தார். 'நீர்காகம் கூட்டுப் பயிற்சி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 3ஆம் திகதி தொடக்கம் 23ஆம் திகதி வரை கிழக்கு மாகாணத்தில் ஆரம்பமாகவுள்ளது. இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் 6ஆவது தடவையாக முப்படையினர் இணைந்து நடத்தும் இப்பயிற்சியானது இம்முறை கொக்கிளாய் தொடக்கம்...

எதிர்க்கட்சி தலைவர் பதவியைக் கோரும் தமிழரசுக் கட்சி

Image
இலங்கையின் புதிய பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் அங்கீகரிக்கப்பட வேண்டும் என, இலங்கை தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது.  இன்று அக் கட்சியால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.   கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி அதிகளவான ஆசனங்களைப் பெற்றுக் கொண்டுள்ளதோடு, இரண்டாவதாக அதிக ஆசனங்களை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பெற்றுள்ளது.   இந்த நிலையில் இரு கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கத்தை உருவாக்கவும் அமைச்சுப் பதவிகளை ஏற்று கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது, என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.   இதன்படி ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகியன அமைச்சரவையில் கூட்டாக பொறுப்புக்களை ஏற்கவுள்ளன.   இதனால், 16 ஆசனங்களுடன் அடுத்தபடியாக பாராளுமன்றத்தில் உள்ள இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் (இலங்கை தமிழரசுக் கட்சி) பாராளுமன்ற குழுத் தலைவர் எதிர்க்கட்சித் தலைவராக அங்கீகரிக்கப்பட வேண்டும் என அந்த அறிக்...

அம்பாறையில் தீ 15 அங்காடி கடைகள் கருகி நாசம்

Image
அம்பாறை - டீ.எஸ். சேனாநாயக்க வீதியில் உள்ள ஆடை அங்காடியில் இன்று காலை தீ பரவியது. இதில் அங்காடியில் இருந்த 15 கடைகள் சேதமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. எனினும் சேதமடைந்த சொத்து விபரங்கள் இன்னும் கணிக்கப்படவில்லை. அம்பாறை நகர சபையின் தீயணைப்பு படையினர், காவற்துறை மற்றும் பொது மக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்தனர். 

தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் 05 தமிழ், 10 முஸ்லிம்கள் உள்ளடக்கம்! இறுதிப் பட்டியல் விபரம் கசிந்தது

Image
தேசிய அரசாங்கத்தின் முழுமையான அமைச்சரவை மற்றும் அதற்கான அமைச்சர்கள் தொடர்பான இணக்கப்பாடு தற்போது எட்டப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் 50 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும், 10 இராஜாங்க அமைச்சர்களும், 30 பிரதி அமைச்சர்களும் தெரிவுசெய்யப்படவுள்ளனர். இதில் 10 முஸ்லிம் மற்றும் 5 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இடம் பிடித்துள்ளனர். எனினும் இவர்களுக்கு ஒதுக்கப்படவுள்ள அமைச்சுக்களின் விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. எதிர்வரும் நான்காம் திகதியளவில் அமைச்சர்களின் பதவிப் பிரமாண வைபவம் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் ஊடாக கிடைக்கப்பெற்ற தேசிய அரசாங்கத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர், பிரதி அமைச்சர் பதவிகளை பெற்று கொள்ளும் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களின் பெயர் பட்டியல் விபரம் கீழே தரப்பட்டுள்ளது. தமிழ் அமைச்சர்கள்! 01. பீ.திகாம்பரம் -கெபினட் அமைச்சர்  02. தொண்டமான் -கெபினட் அமைச்சர்  03. டீ.எம்.சுவாமிநாதன் – புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர்  04. ராதா கிருஷ்னன் – பி...

நற்பிட்டிமுனை தச்சர் வீதியில் உடைந்த பாலம் திருத்தம் செய்ய மாநகர சபை உறுப்பினர் நபார் நடவடிக்கை

Image
ஒரு வருடத்துக்கும் மேலாக  நற்பிட்டிமுனை தச்சர் வீதியில் உடைந்திருந்த சிறிய பாலம்  அரசின் நூறுநாள் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப் படவுள்ளது . இதற்கான  பணி  இன்று ஆரம்பித்து வைக்கப் பட்டது . கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எச்.எச்.எம்.நபார்  இன்று காலை  பாலத்துக்கான  பணிகளை ஆரம்பித்து வைத்தார் . நிகழ்வில்  பிரிவுக்கான கிராம சேவை உத்தியோகத்தர் ,திவிநெகும  உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர்  உட்பட பிரதேசத்தவர்கள் பலரும் கலந்து கொண்டனர் . கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர்  எமது கல்முனை நியூஸ் இணையத்தளம்  இந்த வீதியின் அவலம் குறித்தும் , இந்த கானில் சிறுமி ஒருத்தி  விழுந்த காட்சியும் எம்மால் வெளியிடப் பட்டது . முக்கிய அரசியல் புள்ளிகள் பயன் படுத்தும் இவ்வீதியின் உடைந்த பாலத்தை நபார் திருத்தம் செய்வதற்கு எடுத்த முயற்சிக்கு  அவ்வீதி மக்கள் பாராட்டு தெரிவிக்கின்றனர் . 

உச்ச பாது காப்பு வலய தமிழ் மக்களின் காணிகளை விடுவிக்க முடியுமானால் கிழக்கு முஸ்லிம் களின் காணிகளை விடுவிப்பதில் சிக்கல் இருக்காது

Image
ஹரீஸ்  MP  பொத்துவிலில் தெரிவிப்பு  யாழ்ப்பாணத்திலும், சம்பூரிலும் உச்ச பாதுகாப்பு வலயமாக கருத்தப்பட்ட காணிகளை தமிழ் மக்களுக்கு இந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் கையளிக்க முடியுமென்றால் ஏன் பொத்துவில், ஒலுவில் பிரதேச முஸ்லிம்களின் காணிகளை இந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் கையளிக்க முடியாது என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பொத்துவிலில் இடம்பெற்ற கூட்டத்தில் கேள்வி எழுப்பி பேசினார்  நடைபெற்ற  பொதுத் தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு  செய்யப்பட்டுள்ள சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், எம்.ஐ.எம்.மன்சூர் ஆகியோரினது வெற்றிக்கு வாக்களித்த பொத்துவில் பிரதேச மக்களின் காலடிக்குச் சென்று நன்றி தேரிவிக்க நேற்று வெள்ளிக்கிழமை (29) பொத்துவிலுக்கு விஜயம் செய்தனர்  அங்கு பாராளுமன்ற உறுப்பினா;களான எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் எம்.ஐ.எம்.மன்சூருக்கு பொத்துவில் மக்களால் வரவேற்பளிக்கப்பட்டது. இதனை அடுத்து பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர்  எம்.ஐ.வாசித் தலைமையில் பொத்துவில் பிரதேச சபை கூட...

அக்கரைப்பற்று பொத்துவில் பிரதான வீதியில் விபத்து ஒருவர் பலி!

Image
அக்கரைப்பற்று பொத்துவில் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி இஸ்தலத்தில் உயிரிழந்த சம்பவம் நேற்று (28) மாலை இடம்பெற்றது.

முஸ்லிம்களுக்கு தீர்வு இணைந்த வட கிழக்கிலா? அல்லது கிழக்கைப் பிரிப்பதிலா? SLMC , ACMC இரு தலைமைகளும் முஸ்லிம்களுக்கு தெளிவாகச் சொல்லவில்லை.

Image
முஸ்லிம் தலைமைகளின் இலட்சியம் தவறிய பயணம் முஸ்லிம் பிரதேசங்கள், கிராமங்களிடையே பிரதேசவாத சிந்தனைகளைப் பலப்படுத்தியுள்ளதால் கட்சித் தலைமைகள் பெரும் தலையிடியை எதிர்நோக்கியுள்ளன. தேர்தல் முடிந்த கையோடு தேசியப் பட்டியல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளமையிலிருந்து இதனைப் புரிந்துகொள்ளலாம். முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றை மு.காவுக்கு முன் (1986) மு.காவுக்குப் பின் என இரண்டாகக் கருதமுடியும். மு. கா. வுக்கு முன் (1986) வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள முஸ்லிம் கிராமங்கள் ஊர், ஊராகப் பிளந்து வேறுபட்டுக்கிடந்தன. இப்பிரதேச முஸ்லிம்களின் வாக்குகளைப் பெறும் நோக்கில் ஊருக்கு ஒரு எம்.பி. என்ற கோஷங்களே முன்வைக்கப்பட்டன. அதிக சனத்தொகை, பண பலம், கல்வி, குடும்ப ஆதிக்கம் நிறைந்த ஊர்கள் எம்.பியைப் பெற முயன்று ஒவ்வொரு தேர்தல்களிலும் எம்.பி.யைப் பெற்றன. கிழக்கில் கல்முனை, சம்மாந்துறை, நிந்தவூர் போன்ற பிரசேதங்கள் இவ்வாறு நீண்ட காலம் ஊரின் எம்.பி.யை தக்கவைத்துக் கொண்டன. முன்னாள் அமைச்சர்களான ஏ. ஆர். எம். மன்சூர், பி. ஏ. மஜீத், முஸ்தபா ஆகியோர் இவ்வூர்களின் மன்னர்களாகவும், கதாநாயகர்களாகவும் திகழ்ந்தனர். ...