புதிய பாராளுமன்றம் நாளை காலை கூடுகிறது

புதிய பாராளுமன்றம் நாளை காலை கூடுகிறது. காலை 9.30 மணிக்கு சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கும் நிகழ்வில் முதலில் பாராளுமன்றத்தின் சபாநாயகர் தெரிவு இடம்பெறவுள்ளது. கடந்த 17ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் கூடி சபாநாயகரைத் தெரிவு செய்வார்கள் என்று பாராளுமன்ற செயலாளர் நாயகம்  டபிள்யு.பி.டி. தசநாயக்க தெரிவித்துள்ளார்.
சபாநாயகராக ஒருவர் தெரிவு செய்யப்பட்டால் அவர் ஏற்றுக்கொள்ளப்படுவார் என்றும் இருவர் அல்லது அதற்கு மேற்பட்டோர் தெரிவு செய்யப்பட்டால் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். சபாநாயகரின் தெரிவை அடுத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் முன்பாக பதவிப் பிரமாணம் செய்துகொள்வார்கள். இதேவேளை பிற்பகல் 3மணிக்கு சபை ஒத்திவைக்கப்டபவுள்ளது.
அதனைத் தொடர்ந்து நடைபெறும் அமர்வில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலமையிலான வைபவரீதியலான அமர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது நாட்டின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொள்கை விளக்க உரையாற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பாராளுமன்றம் நாளை கூடும்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் தாம் விரும்பிய ஆசன வரிசையில் அமர முடியுமென பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார். சபாநாயகர் தெரிவுக்குப் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஆசன வரிசைகள் நிரந்தரமாக உறுதி செய்யப்படுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்..

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது