இரத்துச் செய்யப் பட்ட கிழக்கு மாகாண கணித வினா விடைப் போட்டி மீண்டும் எதிர் வரும் 11 ஆம் திகதி
இவ்வருடம் கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தினால் நடாத்தப் பட்டு பெறு பேறுகள் இரத்துச் செய்யப் பட்ட தரம் 06 தொடக்கம் தரம் 12 மாணவர்களுக்கான மாகாண மட்ட கணித வினா விடைப் போட்டி மீண்டும் எதிர் வரும் 11 ஆம் திகதி வெள்ளிக் கிழமை நடாத்தப் படவுள்ளதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ .நிஸாம் சகல வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் அறிவித்துள்ளார் .
கிழக்கு மாகாண மட்ட கணித வினா விடைப் போட்டி தொடர்பாக மாகாண கல்விப் பணிப்பாளர் கிழக்கு மாகாணத்தில் உள்ள வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு இது தொடர்பாக தெரிவித்துள்ளதாவது
கிழக்கு மாகாண கணித வினா விடைப் போட்டி 2015 ஆணி மாதம் 04 ஆம் திகதி மூன்று மொழிகளிலும் நடாத்தப் பட்டு பின்பு மாகாணத்தில் நிலவிய அசாதாரண சூழ் நிலை காரணமாக எமது குழுவினால் நடாத்தப் பட்ட போட்டி பெறு பேறுகள் செல்லுபடியற்றதாக்கப் பட்டது.
அப்போட்டியை மீண்டும் 20.08.2015 இல் மட்டக்களப்பு மஹாஜனக் கல்லூரியில் நடாத்த திட்டமிட்டிருந்த போதிலும் அணைத்து மொழி மூல மாணவர்களுக்கும் நியாயத்தை நிலை நாட்டும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டது . எனினும் கணணிகளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக எதிர் பார்த்த நேரத்துக்குள் வினாப் பத்திரங்களை அச்சிட முடியாத நிலை ஏற்பட்டதால் மீண்டும் கணித வினா விடைப் போட்டியை எதிர் வரும் 2015.09.11 திகதி முற்பகல் 10.00 மணிக்கு ஓட்டமாவடி மத்திய மகா வித்தியாலயத்தில் நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக மாகாண கல்விப் பணிப்பாளரினால் சகல வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் அறிவித்துள்ளார் .
குறித்த கால அட்டவணைக்கு அமைவாக இப்போட்டியை நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதுடன் அனைவருக்கும் ஏற்பட்ட இக்கட்டான நிலைமைக்காக மாகாண கல்வித் திணைக்களம் வருத்தத்தை தெரிவிப்பதாகவும் மாகான கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.நிஸாம் தெரிவித்துள்ளார் .
அத்தோடு தங்கள் வலயங்களில் வெற்றி பெற்ற உரிய வகுப்புக்களுக்கான போட்டியாளர்களை கலந்து கொள்ளச் செய்வதை தங்களின் பொறுப்பாக கருதி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சகல வலயக் கல்விப் பணிப்பாளர்களையும் மாகான கல்விப் பணிப்பாளர் கேட்டுள்ளார் .
Comments
Post a Comment