நற்பிட்டிமுனை தச்சர் வீதியில் உடைந்த பாலம் திருத்தம் செய்ய மாநகர சபை உறுப்பினர் நபார் நடவடிக்கை


ஒரு வருடத்துக்கும் மேலாக  நற்பிட்டிமுனை தச்சர் வீதியில் உடைந்திருந்த சிறிய பாலம்  அரசின் நூறுநாள் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப் படவுள்ளது . இதற்கான  பணி  இன்று ஆரம்பித்து வைக்கப் பட்டது .

கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எச்.எச்.எம்.நபார்  இன்று காலை  பாலத்துக்கான  பணிகளை ஆரம்பித்து வைத்தார் . நிகழ்வில்  பிரிவுக்கான கிராம சேவை உத்தியோகத்தர் ,திவிநெகும  உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர்  உட்பட பிரதேசத்தவர்கள் பலரும் கலந்து கொண்டனர் .

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர்  எமது கல்முனை நியூஸ் இணையத்தளம்  இந்த வீதியின் அவலம் குறித்தும் , இந்த கானில் சிறுமி ஒருத்தி  விழுந்த காட்சியும் எம்மால் வெளியிடப் பட்டது . முக்கிய அரசியல் புள்ளிகள் பயன் படுத்தும் இவ்வீதியின் உடைந்த பாலத்தை நபார் திருத்தம் செய்வதற்கு எடுத்த முயற்சிக்கு  அவ்வீதி மக்கள் பாராட்டு தெரிவிக்கின்றனர் . 

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்