Posts

Showing posts from March, 2015

நற்பிட்டிமுனையில் இன்று டெங்கு ஒழிப்பு தினம் அனுஸ்டிக்கப் பட்டது .

Image
தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு " டெங்கை  ஒழிக்க ஒற்றுமையாக ஒன்றிணைவோம் " எனும் தொனிப் பொருளில் நற்பிட்டிமுனையில் இன்று டெங்கு ஒழிப்பு தினம் அனுஸ்டிக்கப் பட்டது . கல்முனை மாநகர சபை உறுப்பினரும் லங்கா சதொச நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான சி.எம். முபீதின் பணிப்புரைக்கமைவாக  அல் - கரீம் நெசவாளர்  மற்றும் கைத்தொழில் சமூக சேவைகல் அமைப்பினரால்  நற்பிட்டிமுனை  அரச ஆயுர்வேத வைத்திய சாலை வழாகம் ,தையல் பயிற்சி நிலைய வழாகம் ,நெசவு பயிற்சி நிலையம் ,நெசவு பயிற்சி போதனா நிலையம்  மற்றும் பிரதேச வடிகான்கள் சுத்தம் செய்யப் பட்டன . இந்த நிகழ்வுக்கு  அமைப்பின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வணிகத்துறை  அமைச்சின் இணைப்பாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கல்முனை தொகுதி அமைப்பாளருமான சி.எம்.ஹலீம் ,அமைப்பின்  செயலாளர் யு.எல்.எம்.பாயிஸ் ,மற்றும் அமைப்பின் அணைத்து அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர் 

5வது முறையாக உலகக்கிண்ணம் வென்று சாதனை படைத்தது அவுஸ்திரேலியா

Image
நியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கிண்ணம் வென்றது. உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 14ல் தொடங்கியது. இதில் பாகிஸ்தான், வங்கதேசம், மேற்கிந்திய தீவுகள், இலங்கை அணிகள் காலிறுதியுடன் திரும்பின. அரையிறுதியில் நியூசிலாந்திடம் தென்ஆப்பிரிக்க அணியும், இந்திய அணி, அவுஸ்திரேலியாவிடமும் தோற்று, தொடரை விட்டு வெளியேறியது. இந்நிலையில் இன்று மெல்போர்னில் நடக்கும் இறுதிப்போட்டியில், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. நியூசிலாந்து அணிக்கு தொடக்க வீரர்களாக அணித்தலைவர் மெக்குல்லம், குப்டில் களமிறங்கினர். ஸ்டார்க் வீசிய முதல் ஓவரின் 5வது பந்தில் அணித்தலைவர் மெக்குல்லம் டக்-அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். பின்னர் குப்டிலுடன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடி வந்த நிலையில் குப்டில் 34 பந்துகளுக்கு 15 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். வில்லியம்சனும் அவுஸ்திரேலிய பந்துவீச்சை ...

ஜனாதிபதி சகோதரரை கோடரியால் வெட்டிய லக்மால் பொலிஸில் சரண்!

Image
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் பிரியந்த சிறிசேன என்ற வெலி ராஜுவை கோடரியால் வெட்டிய சந்தேகநபர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.  லக்மால் என்ற சந்தேகநபரே பக்கமுன பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஜனாதிபதி மைத்திரியின் சகோதரர் மீது தாக்குதல்!

Image
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரான வெலி ராஜு என்று அழைக்கப்படும் பிரியந்த சிறிசேன தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்து பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.  ஜனாதிபதியின் சகோதரர் மீது பெதிஎல பகுதியில் வைத்து நபர் ஒருவரால் கோடாரியால் தலையில் வெட்டி பலத்த காயம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.   தற்போது அவர் விமானம் மூலம் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

ஒரு வருடகால நெசவு போதனா பயிற்சிநெறியினைப் பூர்த்திசெய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

Image
அம்பாரை மாவட்டத்தின் முதல்முறையாக கல்முனை பிரதேத்திலுள்ள நற்பிட்டிமுனை அல்-கரீம் நௌசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக சேவைகள் அமைப்பினால் ஒரு வருடகால நெசவு போதனா பயிற்சிநெறியினைப் பூர்த்திசெய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (25) கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வு கல்முனை மாநகர சபை உறுப்பினரும் சதோச நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளருமான சீ.எம்.முபீத் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமை ச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவருமான றிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பயிற்சி நெறியை பூர்த்திசெய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கியதுடன் மாணவர்களால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களும் அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது. இதன்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகம் சட்டத்தரணி வை.எல்.எஸ்.ஹமீட், கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் பிரதி தவிசாளருமான எம்.எஸ்.சுபைர், கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சரின் இணைப்பாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இளைஞர் அமைப்பாளருமான சீ;.எம்.ஹலீம்...

கல்முனையில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

Image
டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட டெங்கு ஒழிப்பு முன்னெடுப்பு நடவடிக்கைகள் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.  இன்று தொடக்கம் ஏப்ரல் முதலாம் திகதி வரை அனுஷ்டிக்கப்படும் இந்த வாரத்தை முன்னிட்டு கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த நிகழ்வுகளை தொடர்ந்து பிரிவுகள் ரீதியாக குழுக்களாக களப்பணியில் ஈடுபட்டனர்.  கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கே .எல்.எம். ரைஸ் தலைமையில் இடம்பெற்ற இன்றைய நிகழ்வுகளில், கல்முனை பொலிஸ் பொறுப்பதிகாரி எ.டப்ளிவ்.எ.கபார், மருதமுனை விசேட அதிரடிப்படை முகாம் அலுவலக அதிகாரி பிரியந்த குமார உட்பட பொது சுகாதார உத்தியோகத்தர்கள், திவிநெகும உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் என பலரும் கலந்துகொண்டனர். 

கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் வலய மட்ட விளையாட்டுப் போட்டிகள் இன்று

Image
கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின்  வலய  மட்ட  விளையாட்டுப் போட்டிகள்  இன்று  (26) கல்முனை வெஸ்லி கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது. வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தேசிய கொடியேற்றி நிகழ்வை சம்பிரதாய பூர்வமாக  ஆரம்பித்து வைத்தார் . வலய  மட்ட விளையாட்டுப் போட்டியின்  இணைப்பாளர்  பிரதிக் கல்விப் பணிப்பாளர்  பீ.எம்.வை.அரபாத்  தலைமையில்  இடம் பெற்ற நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள் ,உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் ,கோட்டக்  கல்விப் பணிப்பாளர்கள்,அதிபர்கள்  என பலர் கலந்து கொண்டனர்.

கல்முனை மாநகரதீயணைப்பு படையினருக்கான விசேட பயிற்சி

Image
கல்முனை மாநகர சபையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தீயணைப்பு படையினருக்கான விசேட பயிற்சி இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. கல்முனை மாநகர முதல்வர்- சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் விடுத்த வேண்டுகோளின் பேரில் மட்டக்களப்பு மாநகர சபை இப்படையினருக்கு ஒரு வார கால விசேட பயிற்சியை வழங்கவுள்ளது. இதன் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் தலைமையில்  நடைபெற்றது. கல்முனை மாநகர சபையின் தீயணைப்பு படைப் பிரிவு 24 மணித்தியாலங்களும் இயங்கும் வகையில் அதனை செயற்றிறன் மிக்கதாக மாற்றியமைக்கும் நோக்கில் அப்படையினரை பயிற்றுவிக்கும் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக இந்த ஒரு வார கால பயிற்சி வழங்கப்படுவதாக அறிவிக்கப்படுகிறது.