ஒரு வருடகால நெசவு போதனா பயிற்சிநெறியினைப் பூர்த்திசெய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
அம்பாரை மாவட்டத்தின் முதல்முறையாக கல்முனை பிரதேத்திலுள்ள நற்பிட்டிமுனை அல்-கரீம் நௌசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக சேவைகள் அமைப்பினால் ஒரு வருடகால நெசவு போதனா பயிற்சிநெறியினைப் பூர்த்திசெய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (25) கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வு கல்முனை மாநகர சபை உறுப்பினரும் சதோச நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளருமான சீ.எம்.முபீத் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவருமான றிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பயிற்சி நெறியை பூர்த்திசெய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கியதுடன் மாணவர்களால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களும் அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.
இதன்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகம் சட்டத்தரணி வை.எல்.எஸ்.ஹமீட், கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் பிரதி தவிசாளருமான எம்.எஸ்.சுபைர், கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சரின் இணைப்பாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இளைஞர் அமைப்பாளருமான சீ;.எம்.ஹலீம் மற்றும் அமைச்சின் உயர் அதிகரிகள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment