கல்முனையில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை
டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட டெங்கு ஒழிப்பு முன்னெடுப்பு நடவடிக்கைகள் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.
இன்று தொடக்கம் ஏப்ரல் முதலாம் திகதி வரை அனுஷ்டிக்கப்படும் இந்த வாரத்தை முன்னிட்டு கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த நிகழ்வுகளை தொடர்ந்து பிரிவுகள் ரீதியாக குழுக்களாக களப்பணியில் ஈடுபட்டனர்.
கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கே .எல்.எம். ரைஸ் தலைமையில் இடம்பெற்ற இன்றைய நிகழ்வுகளில், கல்முனை பொலிஸ் பொறுப்பதிகாரி எ.டப்ளிவ்.எ.கபார், மருதமுனை விசேட அதிரடிப்படை முகாம் அலுவலக அதிகாரி பிரியந்த குமார உட்பட பொது சுகாதார உத்தியோகத்தர்கள், திவிநெகும உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் என பலரும் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment