ஜனாதிபதி மைத்திரியின் சகோதரர் மீது தாக்குதல்!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரான வெலி ராஜு என்று அழைக்கப்படும் பிரியந்த சிறிசேன தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்து பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.
ஜனாதிபதியின் சகோதரர் மீது பெதிஎல பகுதியில் வைத்து நபர் ஒருவரால் கோடாரியால் தலையில் வெட்டி பலத்த காயம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது அவர் விமானம் மூலம் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
Comments
Post a Comment