Posts

கல்முனை செலான் வங்கி கிளையின் புத்தாண்டு கொடுக்கல் வாங்கல்

Image
கடந்த 06 வருடங்களாக கல்முனையில் இயங்கி வரும் செலான் வாங்கி கிளையின் 2018 புது வருடத்துக்கான புத்தாண்டு கொடுக்கல் வாங்கல்  பணி ஆரம்பம் இன்று காலை வாங்கி முகாமையாளர் திருமதி பிறேமினி மோகன்ராஜ் தலைமையில் நடை பெற்றது  

புது வருடத்தின் கடமைகள் ஆரம்பம்

Image
2018 ஆம் ஆண்டு உணவு  உற்பத்தி ஆண்டாக அரசு பிரகடனப் படுத்தியுள்ளது. அதற்கிணங்க  நிலைபேறான விவசாய அபிவிருத்தி இலக்கினை அடைந்து கொள்வதனை  முதன்மையாகக் கொண்டு  அனைத்து அரசாங்க அலுவலர்களும்  அர்ப்பணிப்புடன்  பணியாற்றத்தக்க  மனப்பாங்கை வலியுறுத்தி கடமைகளை தொடங்கும் முதல் நாள் நிகழ்வு   கல்முனை வலயக்கல்வி அலுவலகத்திலும் இன்று (02)  இடம் பெற்றன  கல்முனை வலயக் கல்விப்   பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் தலைமையில் இடம் பெற்ற  நிகழ்வில்  தேசியக் கொடி  ஏற்றி  வைக்கப்பட்டு    படை வீரர்கள் உட்பட நாட்டுக்காக  உயிர்த்தியாகம் செய்த சகலருக்கும்  2நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு உத்தியோகத்தர்களின் சத்திய பிரமாணமும் இடம் பெற்றது. வலயக்கல்வி அதிகாரிகளினால் உத்தியோகத்தர்களுக்கு புத்தாண்டு  வாழ்த்து தெரிவிக்கப்பட்டதுடன்  இனிப்பும்  வழங்கி வைக்கப்பட்டது. 

தேர்தல் முறைப்பாடுகளை மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம்

Image

நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

Image
2018ஆம் ஆண்டின் முதலாம் தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பமாவதற்கு முன்னர் பாடசாலை வளாகங்களை தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டம் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு நாளையும் (30) நாளை மறுதினமும் (31) டெங்கு நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.முதலாம் தவணைக்குரிய பாடசாலை கல்வி நடவடிக்கைகள் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகின்றன. தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக, சகல பாடசாலைகளையும் டெங்கு அற்ற வலயங்களாக மாற்றுவது இத்திட்டத்தின் நோக்கமாகும். இதற்கு வலய கல்விப் பணிப்பாளர்கள் தொடக்கம் ஆசிரிய – ஆசிரியைகள் வரை சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி தெரிவித்தார். பாடசாலை வளாகங்களை தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகளில் முப்படையினர், பொலிஸார், சிவில் பாதுகாப்புப் படை அங்கத்தவர்கள், பிராந்திய சுகாதார உத்தியோகத்தர்கள் ஆகியோர் ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தத் திட்டம் தொடர்பில் அதிகாரிகளுக்கு சுற்று நிரூபத்தின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாரம் தோறும் ஞாயிறு தினங்களில் பாடசாலை வளாகங்களை சுத்தப்படுத்தும் நட

விளக்கங்களுக்கு மாவட்டதெரிவத்தாட்சி அலுவலரையோ உதவித் தேர்தல் ஆணையாளரையோ தொடர்புகொள்ள முடியும்

Image
இம்முறை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொகுதி ரீதியில் நடைபெறவுள்ளது. இதனால் இது குறித்து  வேட்பாளர்களுக்கோ வாக்காளர்களுக்கோ விளக்கம் அவசியம தேவையெனில் அவர்கள் மாவட்டங்களில் உள்ள தெரிவத்தாட்சி அலுவலரையோ உதவித் தேர்தல் ஆணையாளரையோ தொடர்புகொள்ள முடியும். தேர்தல்கள் பிரதி ஆணையாளர் எம்.எம்.மொகமட் தெரிவித்துள்ளார்   நாற்பத்தேழு ஆண்டுகளுக்குப் பின்னர் தொகுதி வாரியாக நடைபெறும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்பு தொடர்பில், வாக்காளர்களுக்கு தேவையான விளக்கங்களை வழங்க தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. என்றும் குறிப்பிட்டார். புதிய முறை தேர்தல் குறித்து உள்ளூராட்சி மன்றங்களுக்குப் போட்டியிடும் வேட்பாளர்களுக்கே சரியான தெளிவு இல்லாததால், அவர்களுக்குத் தெளிவுபடுத்த மாவட்ட ரீதியில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

கல்முனை திரு இருதயநாதர் கிறிஸ்தவ தேவாலயநத்தார் நள்ளிரவு வழிபாடுகள்

Image
கல்முனை நகரில் அமைந்துள்ள பழமைவாய்ந்த கிறிஸ்தவ தேவாலயத்திலும்   கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் சமய ஆராதனை வழிபாடுகள் நடை பெற்றன . கல்முனை திரு இருதயநாதர் கிறிஸ்தவ தேவாலயத்தின் பங்குத் தந்தை லியோ அண்டனி  வழிபாடுகளை நடாத்தி திருப்பலி ஒப்புக் கொடுத்தார் .  இந்த நள்ளிரவூ ஆராதனை வழிபாட்டில் பிரதேச கிறிஸ்தவ பங்கு மக்கள் ஆலயம் நிறைந்து காணப்பட்டனர் . நத்தார் என்பது இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் ஒரு பெரு விழாவாகும் .. இவ்விழாவானது கிறிஸ்துவ திரு வழிபாட்டு  ஆண்டில்  திரு  வருகைக் காலத்தினை  முடிவு  பெறச் செய்து  பன்னிரெண்டு நாட்கள்  கொண்டாடப்படும்  கிறிஸ்து பிறப்புக்  காலத்தின்  தொடக்க நாளாகும்  இவ்விழாவின் கொண்டாட்டங்களில்  கிறிஸ்தவ ஆலயங்களில் திருப்பலி ,குடில்கள்ந,த்தார் பாப்பா ,வாழ்த்து அட்டைகளயும்  பரிசுகளையும் பரிமாறல் ,கிறிஸ்மஸ்  மரத்தை  அழகு படுத்தல் , கிறிஸ்மஸ் பாடல் என்பன இடம் பெறுவது சிறப்பம்சமாகும். இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் வகையில்  கிறித்தவ மக்கள்  ஆலயங்களில் ஒன்று கூடி நள்ளிரவு  ஆராதனைகளில் ஈடுபடுவர். கல்முனை பிரதேசத்தில் நீண்ட கால வரலாற்

வேட்புமனுக்களை மீள் பரிசோதிக்கும் பணிகள் ஆரம்பம்

Image
உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை மீண்டும் பரிசோதிக்கும் பணிகள் தேர்தல்கள் செயலகத்தில் இடம்பெற்று வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மாவட்ட செயலகங்களில் கையளிக்கப்பட்ட வேட்புமனுப் பத்திரங்களின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதிகள் தேர்தல்கள் செயலகத்திற்கு பெறப்பட்டு இந்த பரிசீலனை இடம்பெற்று வருகின்றது. கடந்த வெள்ளிக்கிழமை நான்கு மாவட்டங்களின் வேட்புமனுக்கள் உதவி தேர்தல் ஆணையாளர்களினால் தேர்தல்கள் செயலகத்திடம் ஒப்படைக்கப்பட்டன. நேற்றைய தினம் மேலும் எட்டு மாவட்டங்களின் உறுதிப்படுத்தப்பட்ட வேட்புமனுக்களின் பிரதிகளை உதவி தேர்தல் ஆணையாளர்கள் எடுத்து வந்ததாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்றும் நாளையும் பரிசீலனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதன் பின்னர் வாக்காளர் பத்திரங்களை அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

2017 க.பொ.த.(சா/த) பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான “வாழ்க்கையைத் தீர்மானிக்கும் உயர்தரம்” (துறைசார் தெரிவுக்கான இலவச வழிகாட்டல் செயலமர்வு)

Image
இச்செயலமர்வில்  •துறைசார் நிபுணர்களின் விளக்கவுரைகள் •பல்கலைக்கழக மாணவர்களுடனான நேரடி கலந்துரையாடல் என்பன நடைபெறக் காத்திருக்கின்றன.அத்துடன் பல்கலைகழக மற்றும் உயர்கல்வி தெரிவுகளுக்கான வழிகாட்டல் கையேடும் வழங்கப்படவுள்ளது. இச்செயலமர்வில் பிரதம வளவாளராக சகோ.சாபிர் ஹாஸிம் (Learning motivator personality,Life skills and leadership trainer)CEO, Reality trainer international Pvt Ltd.அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றவுள்ளார்கள். துறைசார் விரிவுரையாளர்களாக, உயிரியல் விஞ்ஞான துறை - Dr.MIS.சபீனா (Senior lecturer in biology)department of biological science,SEUSL பெளதீக விஞ்ஞான துறை - Dr.SM.ஜுனைதீன் (Dean,Faculty of engineering,SEUSL) வர்த்தக துறை - Dr.S.குணபாலன் (Dean,Faculty of management,SEUSL) தொழில்நுட்ப துறை -     Mr.CMM.மன்சூர் ( Lecturer in Computer science,SEUSL) கலைத் துறை - Mrs.AWN.நளீபா (Lecturer in sociology,Department of sociology faculty of arts and culture) திங்கட்கிழமை (25 டிசம்பர் 2017) காலை 8.00 தொடக்கம் பிற்பகல் 1.30 மணிவரை ஹிஸ்புழ்
Image

கல்முனை மாநகர சபைக்கான வேட்பு மனு

Image
  கல்முனை மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக 9 கட்சிகளும் 6 சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுக்களை சமர்ப்பித்திருந்தன. இவற்றில் 2 சுயேற்சைக் குழுக்களின் வேட்பு மனுக்கள்  நிராகரிக்கப்பட்டன. வேட்பு மனு தாக்கலுக்காக  அம்பாறை மாவட்ட செயலகத்துக்கு  வருகை தந்த  அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை குழு உறுப்பினர்கள் 

அமைச்சர் றிஸாத் பதியுதீன் சிபாரிசில் நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மகா வித்தியாலயம் தரமுயர்வு

Image
முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினரும் லங்கா சதொச பணிப்பாளருமான சி.எம்.முபீத் மற்றும் நற்பிட்டிமுனை அல் -கரீம் பவுண்டேசன் தலைவர் சி.எம். ஹலீம் ஆகியோரின்  கோரிக்கைக்கு அமைய வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிஸாத் பதியுதீன் சிபாரிசில் 38வருடமாக 1C தரத்தில் இருந்த நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மகா வித்தியாலயம்  1AB  தரத்துக்கு உயர்த்தப்பட்டு உயர்தர விஞ்ஞான ,கணித ,தொழில் நுட்ப வகுப்புக்களுக்கான அனுமதி வழங்கப்படுள்ளதுடன் நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மத்திய மகா வித்தியாலயமாக பெயர் மாற்றமும் பெற்றுள்ளது . இவ்வருடம் தரம் ஐந்து புலமைப்பரிசு பரீட் சையில் சித்தி பெற்ற சாதனை மாணவர்களை பாராட்டி  கெளரவிக்கும் நிகழ்வும் நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மத்திய மகா வித்தியாலய  தரம் உயர்வு  அனுமதி கடிதம் கையளிக்கும் நிகழ்வும் இன்று  கல்லூரி ஆராதனை மண்டபத்தில் நடை பெற்றது. கல்லூரி அதிபர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.அப்துல் நிஸாம் பிரதம அதிதியாகவும் ,கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் ,முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சி.எம்.முபீத் ,பிரதிக் கல்வ