கல்முனை திரு இருதயநாதர் கிறிஸ்தவ தேவாலயநத்தார் நள்ளிரவு வழிபாடுகள்
கல்முனை நகரில் அமைந்துள்ள பழமைவாய்ந்த கிறிஸ்தவ தேவாலயத்திலும் கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் சமய ஆராதனை வழிபாடுகள் நடை பெற்றன .
கல்முனை திரு இருதயநாதர் கிறிஸ்தவ தேவாலயத்தின் பங்குத் தந்தை லியோ அண்டனி வழிபாடுகளை நடாத்தி திருப்பலி ஒப்புக் கொடுத்தார் . இந்த நள்ளிரவூ ஆராதனை வழிபாட்டில் பிரதேச கிறிஸ்தவ பங்கு மக்கள் ஆலயம் நிறைந்து காணப்பட்டனர் .
நத்தார் என்பது இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் ஒரு பெரு விழாவாகும் .. இவ்விழாவானது கிறிஸ்துவ திரு வழிபாட்டு ஆண்டில் திரு வருகைக் காலத்தினை முடிவு பெறச் செய்து பன்னிரெண்டு நாட்கள் கொண்டாடப்படும் கிறிஸ்து பிறப்புக் காலத்தின் தொடக்க நாளாகும்
இவ்விழாவின் கொண்டாட்டங்களில் கிறிஸ்தவ ஆலயங்களில் திருப்பலி ,குடில்கள்ந,த்தார் பாப்பா ,வாழ்த்து அட்டைகளயும் பரிசுகளையும் பரிமாறல் ,கிறிஸ்மஸ் மரத்தை அழகு படுத்தல் , கிறிஸ்மஸ் பாடல் என்பன இடம் பெறுவது சிறப்பம்சமாகும்.
இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் வகையில் கிறித்தவ மக்கள் ஆலயங்களில் ஒன்று கூடி நள்ளிரவு ஆராதனைகளில் ஈடுபடுவர். கல்முனை பிரதேசத்தில் நீண்ட கால வரலாற்றைக் கொண்ட திரு இருதய நாதர் ஆலயத்திலும் நத்தார் நள்ளிரவு வழிபாடுகள் சிறப்பாக இடம் பெற்றன .
Comments
Post a Comment