நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை
2018ஆம் ஆண்டின் முதலாம் தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பமாவதற்கு முன்னர் பாடசாலை வளாகங்களை தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டம் நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு நாளையும் (30) நாளை மறுதினமும் (31) டெங்கு நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.முதலாம் தவணைக்குரிய பாடசாலை கல்வி நடவடிக்கைகள் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகின்றன.
தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக, சகல பாடசாலைகளையும் டெங்கு அற்ற வலயங்களாக மாற்றுவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இதற்கு வலய கல்விப் பணிப்பாளர்கள் தொடக்கம் ஆசிரிய – ஆசிரியைகள் வரை சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
பாடசாலை வளாகங்களை தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகளில் முப்படையினர், பொலிஸார், சிவில் பாதுகாப்புப் படை அங்கத்தவர்கள், பிராந்திய சுகாதார உத்தியோகத்தர்கள் ஆகியோர் ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் திட்டம் தொடர்பில் அதிகாரிகளுக்கு சுற்று நிரூபத்தின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாரம் தோறும் ஞாயிறு தினங்களில் பாடசாலை வளாகங்களை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments
Post a Comment