புது வருடத்தின் கடமைகள் ஆரம்பம்



2018 ஆம் ஆண்டு உணவு  உற்பத்தி ஆண்டாக அரசு பிரகடனப் படுத்தியுள்ளது. அதற்கிணங்க  நிலைபேறான விவசாய அபிவிருத்தி இலக்கினை அடைந்து கொள்வதனை  முதன்மையாகக் கொண்டு  அனைத்து அரசாங்க அலுவலர்களும்  அர்ப்பணிப்புடன்  பணியாற்றத்தக்க  மனப்பாங்கை வலியுறுத்தி கடமைகளை தொடங்கும் முதல் நாள் நிகழ்வு   கல்முனை வலயக்கல்வி அலுவலகத்திலும் இன்று (02)  இடம் பெற்றன 

கல்முனை வலயக் கல்விப்   பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் தலைமையில் இடம் பெற்ற  நிகழ்வில்  தேசியக் கொடி  ஏற்றி  வைக்கப்பட்டு    படை வீரர்கள் உட்பட நாட்டுக்காக  உயிர்த்தியாகம் செய்த சகலருக்கும்  2நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு உத்தியோகத்தர்களின் சத்திய பிரமாணமும் இடம் பெற்றது.
வலயக்கல்வி அதிகாரிகளினால் உத்தியோகத்தர்களுக்கு புத்தாண்டு  வாழ்த்து தெரிவிக்கப்பட்டதுடன்  இனிப்பும்  வழங்கி வைக்கப்பட்டது. 












Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்