Posts

நட்பிட்டிமுனையில் முதலாவது காதி நீதிபதி மௌலவி கே.எல். நஸ்பருக்கு கெளரவிப்பு

Image
நட்பிட்டிமுனை மண்ணில் இருந்து முதல் தடவையாக கல்முனை பிராந்தியத்துக்கான காதி நீதிபதியாக தெரிவு செய்யப் பட மௌலவி கே.எல்.நஸ்பர் அவர்களுக்கு நட்பிட்டிமுனை மஸ்ஜிதுல் ஹுனபா பள்ளிவாசலில் அதன் நிருவாக சபையினரால் ஏற்பாடு செய்யப் பட்ட கெரவிப்பு வி ழா ஏற்பாட்டுக்கு குழு தலைவர் ஏ.ஏ.அப்துல்   கபூர் தலைமையில் நேற்று முன் தினம் (2016.08.19) மாலை 3.30 மணிக்கு நடை பெற்றது. மஸ்ஜிதுல் ஹுனபா பள்ளிவாசல் ஆயுட் கால ஆலோசகர் காசிம் பாவா ஹாலித் , ஹுனபா பள்ளிவாசல் தலைவர் ஏ.எல்.கமால், உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.ஜஹாங்கீர் , பிரதி அதிபர் வீ .ஸம்ஸம் , மௌலவி நிஸ்பர் உட்பட பலர் அங்கு நட்பிட்டிமுனை மண்ணுக்கு கிடைத்த இந்த பெரும் பதவி பற்றி புகழ்ந்து உரையாற்றினர். நிகழ்வில் காதி நீதிபதி அல் -ஹாஜ் கே.எல்.நஸ்பர் மௌலவி அவர்களுக்கு நினைவு சின்னம் வழங்கி கெளரவிக்கப் படடன . ஹுனபா பள்ளிவாசல் செயலாளர் எம்.எல்.நௌசாத் நன்றியுரை வழங்கினார்

தரம் ஐந்து புலமைப் பரீட்சை இன்று

Image
தரம் ஐந்து  புலமைப் பரீட்சை இன்று  நடை பெற்ற  போது  கல்முனை கார்மேல் பற்றிமா பரீட்சை  நிலையத்துக்கு  மாணவர்களை பெற்றோர்  அழைத்துவந்து  காத்திருப்பதையும் , கல்லூரி அதிபர்  அருட்தந்தை  பிரைன் செல்லர்  உட்பட மாணவர்களை  ஆசிரியர்கள்  ஆசிர்வதிப்பதையும்  பெற்றோர்களையும் படங்களில் காணலாம் .

கல்முனை விக்டோறியஸ் வெற்றி

Image
இலங்கை கிறிக்கட் கட்டுப்பாட்டுசபை நடாத்தும் அம்பாறை மாவட்ட அணிகளுக்கிடையிலான டிவிசன் III கிறிக்கட் சுற்றுப் போட்டியின் 50 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட இரண்டாம் சுற்றில் கல்முனை விக்டோறியஸ் அணியிணர் அம்பாரை சதாதிஸ்ஸ அணியினரை 2 விக்கெட்டினால் வெற்றி பெற்றுள்ளனர்.   முதலில் துடுப்பெடுத்தாடிய அம்பாரை சதாதிஸ்ஸ அணியினர் 34 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 140 ஓட்டங்களைப் பெற்றனர். வெற்றிக்கு 141 ஓட்டங்களைப்பெற துடுப்பெடுத்தாடிய கல்முனை விக்ட ோறியஸ் அணியிணர் 24 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு ஓட்ட இலக்கை எட்டி 2 விக்கெட்டினால் வெற்றி பெற்றுள்ளனர்.  கல்முனை விக்டோறியஸ் அணி சார்பில் நியாஸ் மற்றும் கரன் ஆகியோர் ஆட்டமிழக்காது முறையே 51 மற்றும் 23 ஓட்டங்களைப் பெற்றதுடன் பந்துவீச்சில் கரன் 4 விக்கெட்டுக்களையும் அஸ்பர் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். கல்முனை சந்தாங்கேணி பொது மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் வெற்றி பெற்ற கல்முனை விக்டோறியஸ் அணியிணர் அடுத்த போட்டியில் உகணை விளையாட்டுக்கழகத்துடன் அம்பாரையில் விளையாடவுள்ளனர்.

பொலிஸ் கிண்ண உதைபந்தாட்டம்; கல்முனை பொலிஸ் பிரிவு சிவில் பாதுகாப்புக் குழு அணி அகில இலங்கை போட்டிக்கு தெரிவு

Image
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் நூற்றி ஐம்பதாவது ஆண்டு நிறைவினை நினைவு கூறும் முகமாக பொலிஸ் திணைக்களத்தினால், அகில இலங்கை ரீதியாக சிவில் பாதுகாப்புக் குழு அணிகளுக்கிடையே நடாத்தப்பட்டுக் கொண்டிருக்கும் பொலிஸ் கிண்ண உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியின் மாவட்ட அணியினரை தெரிவு செய்யும் போட்டிகள் தற்பொழுது அகில இலங்கை ரீதியாக நடைபெற்று வருகின்றன. மேற்படி சுற்றுப் போட்டியின் ஒரு பிரிவாக அம்பாறை மாவட்ட அணியினரை தெரிவு செய்யும் போட்டிகளின், அரை இறுதிப் போட்டிகள் கடந்த புதன்கிழமை, கல்முனை சந்தாங்கேணி ஐக்கிய பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றன. மு.ப. 10.00 மணிக்கு நடைபெற்ற அரை இறுதிப் போட்டியில் கலந்து கொண்ட மத்திய முகாம் பொலிஸ் பிரிவின் சிவில் பாதுகாப்புக் குழு அணியினர், தன்னை எதிர்கொண்ட திருக்கோவில் பொலிஸ் பிரிவு சிவில் பாதுகாப்புக் குழு அணியினரை (02-01) கோல்கள் அடிப்படையில் வெற்றி கொண்டனர். பி.ப. 04.00 மணிக்கு நடைபெற்ற இறுதிப் போட்டியில் கலந்துகொண்ட கல்முனை பொலிஸ் பிரிவின் சிவில் பாதுகாப்புக்குழு அணியினர் தன்னை எதிர்த்து ஆடிய மத்திய முகாம் குழுவினரை (6-−0) கோல்கள் அடிப்படையில் வெற்றி கொ

மஹிந்த, கெஹலிய, ரோஹித, பவித்ரா உட்பட பலர் நீக்கம்

Image
ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு புதிய தொகுதி அமைப்பாளர்கள் 41 பேரை நியமிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். இந்த புதிய தொகுதி அமைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு தற்போது ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்று வருகிறது. அதேவேளை மஹிந்த யாப்பா, கெஹலிய ரம்புகவெல்ல, ரோஹித அபேயகுணவர்தன, பவித்ரா வன்னியாராச்சி, உட்பட பலர் அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கல்முனை பிரதேச செயலக சமூக அபிவிருத்தி மன்றால் பிரதேச மட்ட சிறுவர்களுக்கு பரிசு வழங்கல்

Image
கல்முனை பிரதேச செயலக பிரதேச மட்டத்திலான சிறுவர் கலை,கலாச்சார போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கான பரிசளிப்பு நிகழ்வு கல்முனை சமூக அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில் பிரதேச செயலகத்தில் சமீபத்தில் நடை  பெற்றது .  திவி நெகும தலமைப் பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.ஸாலிஹ் தலைமையில்  நடை பெற்ற  நிகழ்வில் பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி உட்பட அதிதிகள்  வெற்றி பெற்ற  மாணவர்களுக்கு  பரிசுகள் வழங்குகின்றனர்  .

கல்முனை மாநகர சபைக் கட்டிடமும் -நினைவு கல்லுகளும்

Image
1953 ஆம் ஆண்டு  கேட் முதலியார் எம்.எஸ். காரியப்பரினால்   கட்டப்பட்ட கல்முனை  பட்டின  சபைக்கான  கட்டிடம்  பட்டின சபைக்கும், பிரதேச சபைக்கும்,நகர சபைக்கும் ,மாநகர சபைக்கும் இடம் கொடுத்துள்ளது. ஆட்சி செய்தவர்கள் மாறினார்கள் தவிர  கட்டிடத்தில் மாற்றம் வரவில்லை . 1953 ஆம் ஆண்டு கட்டிடம்தான் 2016 லும்  சிறிய மாற்றமும்  இல்லாமல் உள்ளது .  கட்டிடம்  மாறுமோ அல்லது மாறியதோ அல்லது மாறவில்லையோ  அமர்ந்தவர்களின்  நினைவு பெயர் பொறிக்கப் பட்ட  கல்லுகள்  மாறி இருக்கின்றன .  கல்முனை மாநகர சபைக் கட்டிடத்தை சுற்றிவர 08 நினைவுக்கு கல்லுகள்  பொறிக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது 

நட்பிட்டிமுனை பிரதான வீதி நபாரின் விடா முயற்சியால் காபட் இடப்படவுள்ளது

Image
ஆள் பாதி  ஆடை பாதி என்று சொல்வது போல் நட்பிட்டிமுனை பிரதான வீதி அரைக் கல்லும் அரைக் காபட்டுமாக நீண்ட நாட்களாக காட்சி தருகிறது .  கிராமத்தின்  அரைப் பகுதியில் இருந்து சேனைக்குடியிருப்பு  முக்கால் பகுதிக்கு  காபட்  வீதி போடப் பட்டது . கல்முனை நகரில் இருந்து நட்பிட்டிமுனை ஜும்மா பள்ளி வாசல்  வீதி வரை  உள்ள பிரதான வீதி கவனிப்பாரற்று  கிடக்கிறது. இந்த  வீதியின் அவலத்தை அரசியல் உயர் மட்டம்  வரை எடுத்து சென்று கல்முனை மக்கள் வங்கி  முன்பாகவிருந்து  கல்முனை  பொலிஸின் முன்பாக நட்பிட்டிமுனை வரை செல்லும்  2 கி.மீ வீதி  30 மில்லியன்   ரூபா செலவில் நிர்மாணிக்கப் படவுள்ளது . இதற்கான  ஆரம்ப வேலைகள் அடுத்த வாரம்  இடம் பெறும்  என  கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்கள  மேலதிக மாகாணப் பணிப்பாளர்  பொறியியலாளர்  ஏ.எல்.எம்.நிஸார்  தெரிவித்தார் . இந்த  வீதியின்  அவல  நிலையை  அமைச்சர்களான கபீர் ஹாசிம் , லக்ஷ்மன்  கிரியெல்ல ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு வந்ததை அடுத்து  இதற்கான  30 மில்லியன்  பணம் ஒதுக்கப் பட்டதாகவும்  மேலும்  தனது கோரிக்கையின் அடிப்படையில்  நட்பிட்டிமுனை உள்  வீதிகளான  ஆலயட

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் EPRLF மத்திய குழு தோழர் கரனுக்கு இருதய சத்திர சிகிச்சை

Image
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் EPRLF  மத்திய குழு உறுப்பினர் தோழர்  சிவ சுந்தரம் புண்ணியநாதன்  (கரன்) கொழும்பு லேடன்  வைத்தியசாலையில்  இருதய சத்திர சிகிச்சை செய்து கொடுள்ளார் . தமிழ் தேசியக் கூட்டமைப்பின்  வன்னி  மாவட்டப் பாராளுமன்ற  உறுப்பினர்  சிவ சக்தி  ஆனந்தன்  வைத்தியசாலைக்கு சென்று  அவரது சுகம் விசாரித்து  உதவியும் வழங்கியுள்ளார் . இதேவேளை புண்ணியநாதனை அறிமுகம் கொண்டிராத  அமைச்சர்  மனோ கணேசன்  வைத்தியசாலைக்கு  சென்று  அவருக்காக  இரத்தக் கொடை செய்துள்ளார்   

நீர் வழங்கல் அதிகார சபையின் பிராந்தியக் காரியாலயம் கல்முனைக்கும் அவசியம்

Image
அமைச்சர் ஹக்கீம் அறிவிப்பு  நாட்டில் நிரந்தரமான குழப்பம் இல்லாத நின்மதியான தீர்வு ஒன்று ஏற்பட வேண்டும். அந்த தீர்வானது எல்லா சமூகங்களாலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரே தீர்வாக அமைய வேண்டும். அந்த தீர்வை நாட்டில் உள்ள நல்லாட்சி அரசாங்கத்தின் மூலம் அடைந்து கொள்ளக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதற்காக சில விட்டுக் கொடுப்புக்கள் எல்லாத் தரப்பினரிடமிருந்தும் தேவை. இந்த நாட்டில் யாரும் வாய்திறந்து பேச முடியாத நிலை இரண்டு வருடங்களுக்கு முன்னர் காணப் பட்டது. அந்த நிலை இன்றில்லை யாவரும் வெளிப்படை தன்மையாக பேசும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் ஒரு தீர்வை முன்னெடுப்பதற்கான காலம் கனிந்துள்ளது என்று நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் நேற்று மாலை(13) கல்முனையில் தெரிவித்தார். நல்லாட்சி அரசாங்கத்தின் அனுசரணையுடன் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் முயற்சியினால் சுமார் 2,525 மில்லியன் ரூபா செலவில் 76,276 குடும்பங்களுக்கு சீராக குடிநீரை வழங்குவதற்கு கல்முனை பாண்டிருப்பில் அமைக்கப்பட்ட நீர் சேகரிப்பு மற்றும் நீர் உந்தும் நி