நீர் வழங்கல் அதிகார சபையின் பிராந்தியக் காரியாலயம் கல்முனைக்கும் அவசியம்

அமைச்சர் ஹக்கீம் அறிவிப்பு 


நாட்டில் நிரந்தரமான குழப்பம் இல்லாத நின்மதியான தீர்வு ஒன்று ஏற்பட வேண்டும். அந்த தீர்வானது எல்லா சமூகங்களாலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரே தீர்வாக அமைய வேண்டும்.
அந்த தீர்வை நாட்டில் உள்ள நல்லாட்சி அரசாங்கத்தின் மூலம் அடைந்து கொள்ளக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதற்காக சில விட்டுக் கொடுப்புக்கள் எல்லாத் தரப்பினரிடமிருந்தும் தேவை.

இந்த நாட்டில் யாரும் வாய்திறந்து பேச முடியாத நிலை இரண்டு வருடங்களுக்கு முன்னர் காணப் பட்டது. அந்த நிலை இன்றில்லை யாவரும் வெளிப்படை தன்மையாக பேசும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் ஒரு தீர்வை முன்னெடுப்பதற்கான காலம் கனிந்துள்ளது என்று நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் நேற்று மாலை(13) கல்முனையில் தெரிவித்தார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் அனுசரணையுடன் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் முயற்சியினால் சுமார் 2,525 மில்லியன் ரூபா செலவில் 76,276 குடும்பங்களுக்கு சீராக குடிநீரை வழங்குவதற்கு கல்முனை பாண்டிருப்பில் அமைக்கப்பட்ட நீர் சேகரிப்பு மற்றும் நீர் உந்தும் நிலையத்தினை அமைச்சர் ரவூப் ஹக்கீம் திறந்து வைத்து அங்கு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு பேசினார்.
இத்திட்டத்தின் மூலம் பல சிரமங்களுக்கு மத்தியில் சீரற்ற குடிநீர் வினியோகத்தைப் பெற்று வந்த சம்மாந்துறை, மாவடிப்பள்ளி, சாய்ந்தமருது, கல்முனை, நற்பிட்டிமுனை, துறைநீலாவணை, கல்லாறு, சேனைக்குடியிருப்பு, மணற்சேனை, பாண்டிருப்பு, மருதமுனை, பெரிய நீலாவணை மக்கள் 24 மணி நேரமும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ம்யும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.
நிகழ்வில் பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் உட்பட சமயத் தலைவர்கள்அ,ரசியல் பிரமுகர்கள், நீர் வழங்கல் அதிகார சபை அதிகாரிகள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அமைச்சர் ஹக்கீம் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் கல்முனை பிரதேசத்துக்கு பிராந்திய அலுவலகம் ஒன்று அமைய வேண்டியதன் அவசியம் வெளிப் படுத்தப் பட்டுள்ளது . வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப இந்த அலுவலகம் கல்முனையில் திறக்கப் பட வேண்டும் அதற்காக ஆர்ப்பாட்டங்கள் செய்ய வேண்டிய அவசியமில்லை அக்கரைப் பற்றில்இருக்கின்ற பிராந்திய அலுவலகத்துக்கு சமாந்தரமாக இவ்வலுவலகம் கல்முனையில் அமைக்கப் பட வேண்டிய தேவை உள்ளது . நண்பர் தவம் மற்றும் மர்ஜூன் ஆகியோர் இவ்விடயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும் என அமைச்சர் குறிப்பிட்டார்



Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்