நட்பிட்டிமுனை பிரதான வீதி நபாரின் விடா முயற்சியால் காபட் இடப்படவுள்ளது
ஆள் பாதி ஆடை பாதி என்று சொல்வது போல் நட்பிட்டிமுனை பிரதான வீதி அரைக் கல்லும் அரைக் காபட்டுமாக நீண்ட நாட்களாக காட்சி தருகிறது . கிராமத்தின் அரைப் பகுதியில் இருந்து சேனைக்குடியிருப்பு முக்கால் பகுதிக்கு காபட் வீதி போடப் பட்டது . கல்முனை நகரில் இருந்து நட்பிட்டிமுனை ஜும்மா பள்ளி வாசல் வீதி வரை உள்ள பிரதான வீதி கவனிப்பாரற்று கிடக்கிறது.
இந்த வீதியின் அவலத்தை அரசியல் உயர் மட்டம் வரை எடுத்து சென்று கல்முனை மக்கள் வங்கி முன்பாகவிருந்து கல்முனை பொலிஸின் முன்பாக நட்பிட்டிமுனை வரை செல்லும் 2 கி.மீ வீதி 30 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப் படவுள்ளது .
இதற்கான ஆரம்ப வேலைகள் அடுத்த வாரம் இடம் பெறும் என கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்கள மேலதிக மாகாணப் பணிப்பாளர் பொறியியலாளர் ஏ.எல்.எம்.நிஸார் தெரிவித்தார் .
இந்த வீதியின் அவல நிலையை அமைச்சர்களான கபீர் ஹாசிம் , லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு வந்ததை அடுத்து இதற்கான 30 மில்லியன் பணம் ஒதுக்கப் பட்டதாகவும் மேலும் தனது கோரிக்கையின் அடிப்படையில் நட்பிட்டிமுனை உள் வீதிகளான ஆலயடி வடக்கு,தெற்கு ,பாவா வீதி,ஹிஜ்ரா வீதி, சட்டம்பியார் வீதிகளின் புனரமைப்புக்கு 5 மில்லியன் ரூபா ஒதுக்கப் பட்டிருப்பதாகவும் முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளரும் ,அரச தொழில் முயற்சி அமைச்சின் தேசிய இணைப்பாளருமான ஏ.எச்.எச்.ஏ.நபார் தெரிவித்தார் .
அடுத்த வாரம் ஆரம்பிக்கப் படவுள்ள கல்முனை நட்பிட்டிமுனை பிரதான வீதி காபட் இடும் பணிகளை துரிதமாக முன்னெடுத்த மாகாணப் பணிப்பாளர் பொறியியலாளர் நிஸார் அவர்களுக்கு நன்றியையும் நபார் தெரிவித்துள்ளார்
Comments
Post a Comment