Posts

நற்பிட்டிமுனை நபீஸா ஆசிரியை ஓய்வு !! அல் -கரீம் பவுண்டேஷன் பாராட்டு !!!

Image
35 வருடம் ஆசிரியத் தொழிலை  புனிதமாக  நிறைவேற்றி  ஓய்வு பெற்ற  நற்பிட்டிமுனை ஆசிரியை  திருமதி   எஸ்.என்.எச்.முகம்மட் (Nafeesa Teacher) அவர்களின் சேவையை பாராட்டி நற்பிட்டிமுனை அல் -கரீம் பவுண்டேஷன்  ஏற்பாட்டில் சேவை நலன் பாராட்டு விழாவும் ,கல்வி சமூக சேவைக்கான தேசாபிமானி விருது வழங்கும் விழாவும்  ஆசிரியை நபீசாவின்  இல்லத்தில் இடம் பெற்றது . கல்முனை மாநகர சபை உறுப்பினரும் அல் -கரீம் பவுண்டேஷன்  ஸ்தாபகருமான  சி.எம். முபீத்தின்  ஏற்பாட்டில் அல் -கரீம் பவுண்டேஷன்  தலைவர் சி.எம்.ஹலீம்  தலைமையில் நடை பெற்ற  நிகழ்வில் அல் -கரீம் பவுண்டேஷன்  செயலாளர்  யு.எல்.எம்.பாயிஸ் , ஆலோசகரும் நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மத்திய மகாவித்தியாலய  ஆரம்பப் பிரிவு அதிபருமான திருமதி ஏ.முனாஸிர் உட்பட அதிபர்கள் ஆசிரியர்கள் நபீஸா ஆசிரியையின் கணவர் ஹயாத் முகம்மட் அவரது புதல்வர்கள்  அவரது குடும்பத்தினர்கள்  கலந்து கொண்டு பொன்னாடை போர்த்தி  வாழ்த்துப்பா வாசித்து  வாழ்த்து மடல் வழங்கி  தேசாபிமான பட்டம் சூட்டி ,நினைவு பரிசு வழங்கி வைத்தனர் .

சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாயல் நிர்வாகிகள், கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ் சந்திப்பு.

Image
சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாயல் நிர்வாகிகளும், சாய்ந்தமருதை சேர்ந்த கல்முனை மாநகர சபை உறுப்பினர்களும் கல்விமான்களும் அண்மையில் கிழக்கு ஆளுநர் கலாநிதி எம்.எல.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ் அவர்களை ஆளுநர் செயலகத்தில் சந்தித்தனர். தங்களின் பிரதேசம் நீண்டகாலமாக அபிவிருத்தி பணிகளில் புறக்கணிக்கபட்டதாகவும் , மக்களின் வேண்டுகோளுக்கு அமைய ஒரு நகரசபை கோரிக்கையை முன்வைத்த நாளிலிருந்து அரசியல்வாதிகளால் நாங்கள் புறக்கணிக்கபடுகிறோம். இதனால் இப்பிரதேசம் அபிவிருத்திகளில் பின்தங்கியுள்ளது என குறிப்பிட்டனர் . மேலும் இச் சந்திப்பில் பாடசாலை ,கல்வி அபிவிருத்தி சுகாதாரம் வைத்தியம் ,விளையாட்டு சுற்றுலா போன்ற பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது இந்த விடயங்களை செவிமடுத்த ஆளுநர் அவர்கள் இந்த விடயங்களுக்கு தேவையான நிதி ஒதுக்கீடுகளை செய்து பாடசாலை மற்றும் ஏனைய துறைகளுடைய முன்னேற்றத்திற்கு முழு ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதியளித்ததோடு இவ்விடயம் தொடர்பான செயலாளர்கள், பணிப்பாளர்கள் சாய்ந்தமருதுக்கு விஜயம் செய்து குறிப்பிட்ட பிரதேச அறிக்கைகளை உடனடியாக சமர்பித்து அவசரமாக இந்த பிரச்சனைகளுக்க

8 பல்கலை மாணவர்களும் விடுதலை; தலா ரூ. 52 ஆயிரம் அபராதம்

Image
ஹொரவபொத்தானை, கிரலாகல புராதன தூபி மீது ஏரி எடுத்த புகைப்படம் தொடர்பில் கைது செய்யப்பட்ட எட்டு பல்கலைக்கழக மாணவர்களையும் இன்று (05) கெபித்திகொல்லாவ நீதிமன்றம் விடுவித்துள்ளது. கெபித்திகொல்லாவ நீதவான் எச். கே. மாலிந்த ஹர்சன த அல்விஸ்  முன்னிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அவர்கள் மீதுமூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.  குற்றச்சாட்டிற்கு 50ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்துமாறும் நீதவான் இன்று கட்டளையிட்டுள்ளார். எட்டு பல்கலைக்கழக மாணவர்கள் சார்பில் மூன்று சட்டத்தரணிகள் சிராஸ் நூர்தீன்,  சப்ராஸ் ஹம்சா, ருஷ்தி ஹபீப்குழுவினர் கெபித்திகொல்லாவ நீதிமன்றில் 45 நிமிடங்கள் பல்கலைக்கழக மாணவர்கள் சார்பில் வாதாடினர். இதனையடுத்து அவர்கள் மீது 3குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு இருப்பதாகவும் அதில் முதலாவது குற்றச்சாட்டில் மரங்களுக்கு இடையில் குளறுபடிகளை ஏற்படுத்தியமை, சட்டவிரோதமான முறையில் ஒன்றுசேர்ந்தமை மற்றும் தொல்பொருள் திணைக்களத்துக்கு சொந்தமான இடத்தில் அனுமதி இல்லாமல் நுழைந்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது சுமத்தப்பட்டிருந்தன. மாணவர்கள் சார்பில்

71 வது சுதந்திரதின நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ். கொட்டும் மழையிலும் நனைந்து நிகழ்வில் பங்கேற்றார்

Image
கிழக்கு மாகாணத்தின் பிரதான சுதந்திர தின வைபவம் இன்று காலை திருகோணமலையில் உள்ள பெற்றிக் கோட்டை முன்றலில் வெகு சிறப்பாக இடம் பெற்றது. இலங்கையின் 71 வது சுதந்திர தின வைபவம் திருகோணமலையில் மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார தலைமையில் நடை பெற்றது. கிழக்கு மாகாண பிரதம செயலகமும் திருகோணமலை மாவட்ட செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்வில் முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையும் பாடசாலை மாணவர்களின் அணிவகுப் மரியாதையும் கலை நிகழ்வும் வெகு சிறப்பாக இடம் பெற்றது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களான நஜீப் அப்துல் மஜீத், ஜயந்த விஜேசேகர அரசியல்  பிரமுகர்கள் உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர். இதன் போது கொட்டும் மழையிலும் தேசிய கீதத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் இந்றைய நிகழ்வில் எவ்வித மழைத்தடுப்புகளையும் பயண்படுத்தாது செயற்பட்டமை பலரையும் வியப்பூட்டியது.

சாய்ந்தமருது – மாளிகைக்காடு வர்த்தகர் சங்கத்தின் சுதந்திர தின விழா

Image
( எம்.ஐ.எம்.அஸ்ஹர் , யு.கே.காலித்தீன் , எம்.வை.அமீர்) சாய்ந்தமருது  – மாளிகைக்காடு வர்த்தகர் சங்கம்  இலங்கை திருநாட்டின் 71 வது சுதந்திர தினத்தையொட்டிய நிகழ்வுகள்  சாய்ந்தமருதிலுள்ள தலைமையகத்தில் வர்த்தகர் சங்க தலைவர் எம்.எம்.முபாறக் தலைமையில்  இடம்பெற்றது. இந்நிகழ்வில் அபிவிருத்தி உபாயங்கள் சர்வதேச வர்த்தகங்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், கல்முனை இராணுவ படை முகாம் கட்டளை தளபதிகள் மேஜர் தர்மசேன , சுதுசிங்க , கல்முனைத் தொகுதி ஐக்கிய தேசியக்கட்சி அமைப்பாளர் சட்டத்தரணி எம்.எஸ்.ஏ.றஸாக் , ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர் சட்டத்தரணி எம்.ஸி.ஆதம்பாவா , கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.ஆர்.எம்.அஸீம் உட்பட வர்த்தக சங்க உயர்பீட உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கல்முனையில் நடைபெற்ற 71வது சுதந்திர தின நிகழ்வு

Image
(அகமட் எஸ். முகைடீன்)          கல்முனை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 71வது சுதந்திர தின நிகழ்வு இன்று (4) திங்கட்கிழமை காலை கல்முனை மாநகர ஐக்கிய சதுக்கத்தில் பிரதேச செயலாளர் எம்.எம். நஸீர் தலைமையில் நடைபெற்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப், அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சாமந்த விஜேசேகர, கல்முனை பொலிஸ் பிரிவு பொலிஸ் அத்தியட்சகர் எச்.எம்.ஏ.பி. ஹேரத், கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயநெத்தி, மேஜர் தர்மசேன, கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். அப்துல் ஜலீல், அம்பாறை மாவட்ட அனைத்து பள்ளிவாசல்களின் தலைவர் வைத்திய கலாநிதி எஸ்.எம்.ஏ. அஸீஸ், கல்முனை மாநகர ஆணையாளர் எம்.சி. அன்சார், கல்முனை மாநகர சபை செயலாளர் எம். பிர்னாஸ், கல்முனை மாநகர பிரதி முதல்வர் காத்தமுத்து கணேஸ், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சரின் இணைப்ப

71வது தேசிய தின நிகழ்வு நற்பிட்டிமுனை லாபிர் வித்தியாலயத்தில்

Image
71வது தேசிய தின நிகழ்வு நற்பிட்டிமுனை லாபிர் வித்தியாலயத்தில் அதிபர் வை.எல்.பஸீர்  தலைமையில் நேற்று நடை பெற்றது அமைச்சர் றிசாத் பதியுதீனின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் சி.எம்.ஹலீம் தேசிய கோடி ஏற்றி மரக்கன்று நடுவதையும் கல்லூரி ஆசிரியர்களையும் காணலாம் 

மீண்டும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக எம்.ரீ.எம்.நிசாம் நியமிக்கப்பட்டுள்ளார்.

Image
கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக எம்.ரீ.அப்துல் நிசாம் நியமிக்கப்பட்டுள்ளார்.  இந்த நியம ன ம் மாகாண ஆளுநர் கலாநிதி MLAM ஹிஸ்புழ்ழாஹ்வினால் இன்று வியாழக்கிழமை வழங்க ப்பட்டுள்ளது. இதுவரை காலமும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக செயற்பட எம்.ஐ.எம்.மன்சூர் கிழக்கு மாகாண கல்வி அமைச்சிற்கு இடமாற்றப்பட்டுள்ளார்.  

கைதான பட்டதாரி மாணவர்களின் பெற்றோர் ஆளுநர் ஹிஸ்புல்லாவிடம் தஞ்சம்

Image
அண்மையில் கைது செய்யப்பட்ட 07 பொறியியல் பீட மாணவர்களுடைய பெற்றோர்கள் உறவினர்கள் இன்று கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி MLAM ஹிஸ்புழ்ழாஹ் அவர்களை ஆளுநர் செயலகத்தில் சந்தித்தனர். கடந்த வாரம் தொல் பொருள் என அடையாளப்படுத்தப்பட்ட பகுதியில் எடுத்த புகைப்படத்தை ஒரு வருடத்திற்கு முன்பு சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குறிப்பிட்ட பொறியியல் பீட மாணவர்களுடைய பொற்றோர்கள் இவ்வாறு சந்தித்தனர்.  எதிர் வரும் 05 ஆம் திகதி வழக்கு  விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள நிலையில் இந்த சந்திப்பு இடம் பெற்றது. இதன் போது கிழக்கு ஆளுநர் கலாநிதி ஹிஸ்புழ்ழாஹ் அவர்கள் சட்டரீதியான விபரங்களை  கேட்டறிந்ததோடு , இந்த வழக்கில் மாணவர்கள் சார்பாக வாதாடுகிற சட்டத்தரிணியை தொடர்பு கொண்டு தன்னுடைய பங்களிப்பை எவ்வாறு வழங்கலாம் என சட்ட ஆலோசனையை கேட்டறிந்து கொண்டார் , இது தொடர்பாக பொலிஸார் புராதண தொல் பொருள் திணைக்களத்தில் இருந்து விரிவான அறிக்கையினை கோரியுள்ளதாகவும் , அறிக்கை கிடைத்தவுடன் அந்த அறிக்கை ஆராய்ந்து தீர்பினை நீதிமன்றம் வழங்குமென எதிர்பார்பதாக

இன்று ஆளுநர் செயலகத்தில் பட்டதாரி (Bachelor of Education) ஆசிரியர் நிரந்தர நியமனம் ஆளுநர் கலாநிதி MLAM ஹிஸ்புழ்ழாஹ் வழங்கி வைத்தார்

Image
இன்று ஆளுநர் செயலகத்தில் பட்டதாரி (Bachelor of Education) ஆசிரியர் நிரந்தர நியமனம் ஆளுநர் கலாநிதி MLAM ஹிஸ்புழ்ழாஹ் வழங்கி வைத்தார் . அன்மையில் நேர்முகப்பரீட்சைக்கு தோற்றி நியமனம் வழங்கப்படாதிருந்த  நிலையில் தற்போதைய ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ் அவர்களின் விஷேட பணிப்புரைக்கு அமைய மீண்டும் தகுதி அடிப்படையில் சுமார் 19 B.Ed பட்டதாரிகளுக்கு இன்று ஆளுநர் செயலகத்தில் ஆசிரியர்  நிரந்தர நியமன   கடிதங்களை கிழக்கு ஆளுநர் வழங்கி  வைத்தார்  இந்த 19 நியமனத்தில் 18 தமிழ் பட்டதாரிகளும் ஒரு சிங்கள பட்டதாரியும் உள்வாங்கப்பட்டாதோடு இந்த நியமனங்கள் உரியவர்களின் மாவட்டத்தில் வழங்கப்பட்டதும்  குறிப்பிடத்தக்கது.

மருதமுனையைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் பி.எம்.எம்.ஏ.காதர் கலாபூஷணம் விருது பெறுகின்றார்.

Image
மருதமுனையைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் பி.எம்.எம்.ஏ.காதர்  கலாபூஷணம் விருது பெறுகின்றார்.நாளை 29அம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணிக்கு கொழும்பு தாமரைத் தடாக மண்டபத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்விலேயே இவருக்கு இந்த கலாபூஷணம் விருது வழங்கப்படவுள்ளது. 2010ஆம் ஆண்டு இலங்கைப் பத்திரிகை ஸ்தாபனமும்,பத்திரிகை ஆசிரியர்  சங்கமும் இணைந்து நடாத்திய போட்டியில் ஞாயிறு தினக்குரல் பத்திரிகையில் எழுதிய கட்டுரைகளுக்காக சிறந்த பத்திரிகையாளருக்கான சுப்ரமணிய செட்டியார்  தேசிய விருதை வென்ற முதல் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர் என்ற பெருமை இவரையே சாரும். அதே போன்று 2012ஆம் ஆண்டு இங்கை பத்திரிகை ஸ்தாபனமும்,இலங்கை பத்;திரிகை ஆசிரியர்  சங்கமும் இணைந்து நடாத்திய போட்டியில் மெட்ரோ நியூஸ் பத்திரிகையில் ‘விலேஜ் விசிட்’என்ற தலைப்பில் எழுதிய கட்டுரைகளுக்காக சிறந்த சூழலியல் செய்தியாளருக்கான தேசிய விருதுதையும் இவர்  வென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் 2018ஆம் ஆண்டின் ஊடகத்துறைக்கான கிழக்கு மாகாண வித்தகர் விருதும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.இவை தவிர இ

அரச அலுவலகர்களின் அலுவலக நேரம் தொடர்பான சுற்றறிக்கைகள்

Image
அரச அலுவலகர்களின் அலுவலக நேரம் தொடர்பான சுற்றறிக்கைகளுக்கு அமைவாக  2006.06.19 ஆம் திகதி முதல் நடைமுறைப்படும் வண்ணம் அரச சேவைகளின் கனிட்ட ஊழியர்கள் தவிர்ந்த மற்றைய எல்லா ஊழியர்களதும் அலுவலக நேரம் (மதிய உணவுக்காக 30 நிமிட காலத்துடன்) மு.ப. 8.30 மணிமுதல் பி.ப. 4.15 மணிவரை ஆதல் வேண்டுமென அரசு தீர்மானித்துள்ளது, பணக்கொடுக்கல் வாங்கல்களுக்காக சகல அரச அலுவலகங்களும் வேலை செய்கின்ற நாட்களில் பிற்பகல் 3.00 மணிவரை அதற்காக வசதியளிக்க வேண்டும். அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை இல: 162 இல் குறிப்பிட்டுள்ள வாறு கனிட்ட ஊழியர்களின் அலுவவக நேரம் மதிய உணவுக்காக 30 நிமிடங்களுடன் மு.ப.8.30 மணி இல் இருந்து பி.ப.4.45 மணிவரை அமையும். அரச ஊளழியர்களின் அலுவலக நேரம் தொடர்பாக வெளியிடப்பட்ட அரச சுற்றுநிருபங்களின் விபரங்கள்: 08_0214(t) 09-2006(t) 17-1996(t) 162-1980(t)

காத்தான்குடி தள வைத்தியசாலையின் ஆண்கள் சிகிச்சை விடுதி திறப்பு

Image
காத்தான்குடி தளவைத்தியசாலையில் அமைக்கப்பட்ட ஆண்கள் சிகிச்சை விடுதி ஆளுநர் கலாநிதி MLAM ஹிஸ்புல்லாஹ்வினால் திறந்து வைக்கப்பட்டது மட்டக்களப்பு காத்தான்குடி தளவைத்தியசாலையில் அவசியத் தேவையாக காணப்பட்ட ஆண்கள் சிகிச்சை விடுதி பாத்திமா பௌண்டேசனின் அணுசரணையில் அமைக்கப்பட்டு இன்று பொது நோயாளிகளின் பயண்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டது. காத்தான்குடி தளவைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.எஸ்.எம்.ஜாபிர் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக பங்கேற்று இவ் வைத்தியப்பிரிவினை திறந்து வைத்தார். இந் நிகழ்வில் பாத்திமா பௌன்டேசனின் பணிப்பாளர் சஹாப்தீன் இக்ராம் சமூக செயற்பாட்டாளர் பிரோஸ் நவாஸ் ,வைத்திய அதிகாரிகள் ,உட்பட பலரும் கலந்து கொண்டனர். இதன் போது கிழக்கு மாகாண ஆளுநருக்கு காத்தான்குடி தளவைத்தியசாலையினால் அவரின் சேவைகளைப்பாராட்டி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.