Posts

பகுதிநேர வகுப்புக்களுக்கு நள்ளிரவு முதல் தடை.

Image
கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக நள்ளிரவின் பின்னர் பிரத்தியேக வகுப்புக்களை நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பரீட்சை முடியும் வரை இந்தத் தடை அமுலில் இருக்கும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் ஜித்த தெரிவித்துள்ளார்.    கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 12ஆம் திகதி ஆரம்பமாகும். இம்மாதம் 21ஆம் திகதி சாதாரண தரப் பரீட்சை முடிவடையவிருக்கிறது.  இம்முறை எட்டு லட்சத்து 88 ஆயிரத்து 573 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றவிருக்கிறார்கள்.    

மீள அறிவிக்கும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம்

Image
எதிர்வரும் 24 மணி நேரத்தில் நாட்டை சூழவுள்ள பகுதியிலும், கடல் பகுதியிலும் காற்றின் வேகம் வலுவடையும் நிலை காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையிலிருந்து சுமார் 1300 கிலோ மீற்றர் தொலைவில் வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு பகுதியில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு வலையமானது, எதிர்வரும் 24 மணி நேரத்தில் தாழமுக்கமாக மாற்றமடைவதே இதற்கு காரணம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் நாட்களில், குறிப்பாக நாளைய தினம் (05) முதல் நாட்டிலும், நாட்டை சுற்றிய கடற்பிரதேசங்களிலும் விசேடமாக வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு கடற் பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்காலப்குதியில் நாட்டின் வடக்கு, வட மத்திய, கிழக்கு, வடமேல் மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும், ஏனைய பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. நாட்டின் கிழக்கு, வடக்கு, வடமத்திய, ஊவா, மத்திய ம...

பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை விடுமுறை ஆரம்பம்

Image
அனைத்து அரச மற்றும் அரசாங்கம் அங்கீகரித்துள்ள தனியார் பாடசாலைகளுக்கான இவ்வருடத்திற்கான மூன்றாம் தவணை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (08) நிறைவடைவதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. அந்த வகையில் அனைத்தும் சிங்கள, தமிழ், முஸ்லிம் அரச, தனியார் பாடசாலைகளுக்கு, எதிர்வரும் டிசம்பர் 08 ஆம் திகதி மூன்றாம் தவணை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. குறித்த பாடசாலைகள், எதிர்வரும் ஜனவரி 02 ஆம் திகதி  முதலாம்  தவணைக்காக மீண்டும் திறக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வானிலை பற்றி அவதானமாக இருக்குமாறு இடர்முகாமைத்து அமைச்சு அறிவிப்பு

Image
நாளை தொடக்கம் வெள்ளிக்கிழமை வரையிலான காலப்பகுதியில் காலநிலை மாற்றங்கள் தொடர்பில் பொது மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமென இடர்முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.   இன்று கொழும்பில் நடந்த செய்தியாளர் மாநாட்டில் இதனை குறிப்பிட்ட அமைச்சர் வளிமண்டலவியல் திணைக்களம் உள்ளிட்ட நிறுவனங்கள் 24 மணித்தியாலங்கள் இயங்கி சகல விடயங்களையும் அவதானித்து வருகின்றன. இதன் அடிப்படையில் மக்களுக்கு அறிவூட்டி இடர் நிலையை தணியச் செய்ய நடவடிக்கை எடுக்கப் போவதாகவும்;  அமைச்சர் கூறினார்.      அரசாங்கம் காலநிலை பற்றி எதிர்வுகூறியுள்ளது.  எனவே அடிக்கடி விடுக்கப்படும் ஆலோசனைகளை மக்கள் பின்பற்ற வேண்டுமென இடர்காப்பு முகாமைத்துவ அமைச்சர் கேட்டுக்கொண்டார்.   வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் கே.எச்.எம்.எஸ்.பிரேமலால் கருத்து வெளியிடுகையில், இலங்கையிலிருந்து ஆயிரத்து 300 கிலோ மீற்றர் தொலைவில் அந்தமான் தீவுக்கு அருகில் உருவான காற்றழுத்த மண்டலம் தாழமுக்கமாக மாறக்கூடும் என்றார். இது சூறாவளியாக மாற வாய்ப்பு இருப்பதால் ஆழ்கடலில் மீன்பிடி...

வடக்கு-கிழக்கு பிரதேச கரையோர மக்களுக்கும் கடற்றொழிலாளர்களுக்கும் விசேட அறிவுறுத்தல்

Image
வடக்கு கிழக்கு கரையோர கடற்பிரதேசத்தில் நாளை முதல் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என்று இடர்முகாமைத்துவ பிரதிப்பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். தற்போது எதிர்பார்க்கப்படும் சீரற்ற காலநிலையின் காரணமாக வடக்கு கிழக்கு பிரதேசங்களில் கடல் நடவடிக்கையில் ஈடுபடுவது பாதுகாப்பற்றது என்று  மேலும் அவர் தெரிவித்துள்ளார். இந்த சீரற்ற காலநிலையை கரையோரப்பிரதேசத்திலுள்ள மக்களும் கடல் நடவடிக்கையில் ஈடுபடுவோரும் எதிர்கொள்ளத் தயார் நிலையில் இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த தகவல்களை பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்ட செயலகங்கள் ஊடாக சம்பந்தப்பட்ட கரையோர மற்றும் கடற்றொழிலிலாளர் சமூகத்தினருக்கு அறிவிக்கப்பட்டிருப்பதாக வடக்கு இடர்முகாமைத்துவ அதிகாரி ஒருவர் எமது செய்திப்பிரிவிற்கு தெரிவித்தார். முல்லைத்தீவு பிரதேசத்தில் கடற்றொழில் மற்றும் கடல் நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கும் இவ்வாறான   அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. கடற்றொழில் மற்றும் கடல் நடவடிக்கையில் ஈடுபடுவோர் நாளை முதல் மறு அறிவித்தல் வரை கடல் நடவடிக்கையில் ஈடுபடவேண்டாம் அறிவுறுத்தப்பட்ட...

காலநிலை- தாழமுக்க நிலை வடக்கு கிழக்கு மாகாணங்களில் வலுவடையக்கூடும்

Image
நாட்டிலிருந்து 1300 கிலோமீற்றர் தொலைவில் கிழக்கு திசை வங்காள விரிகுடா கடற்பரதேசத்தில் நிலவும் தாழமுக்க நிலை எதிர்வரும் 24 மணித்தியால காலப்பகுதியில் வலுவடையக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. எதிர்வரும் 3-4 தினங்களில் இந்த தாழமுக்க தாழ்வு நிலை இந்த கட்டமைப்பின் மேற்குப்பகுதியில் வடமேல் திசையை நோக்கி நகர்ந்து மத்திய வங்காள விரிகுடாவில் கடற்பிரதேசத்தின் ஊடாக வடக்கு தமிழ்நாடு – தெற்கு ஆந்திரா பிரதேச கரையை நோக்கி நகரக்கூடும். இதற்கமைவாக எதிர்வரும் 5ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் இலங்கைக்கு கிழக்கு திசையில் இந்த கட்டமைப்பு நாட்டிற்கு அருகாமையில் நகரக்கூடும். எதிர்வரும் சில தினங்களில் விசேடமாக நாளை முதல் வங்காள விரிகுடா கடற்பிரதேசத்தலும் நாட்டை சுற்றியுள்ள கடற்பிரதேசத்திலும் காற்றின் வேகம் அதிகரிக்க கூடும் . மேலும் வங்காள விரிகுடா கடற்பிரதேசத்தில் காற்றின் வேகம் 90 கிலோமீற்றர் முதல் 100 கிலோமீற்றர் வரையிலும் நாட்டை சுற்றியுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பிரதேசத்தில் காற்றின் வேகம் 70 முதல் 80 கிலோமீற்றர் வரையிலும் நாட்டிற்குள் விசேடமாக வடக்கு கிழக்கு மாகாணங்...

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளுராட்சி மன்ற தேர்தல்

Image
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி 17 ஆம் திகதிக்கு முன்னர் நடைபெறுமென்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதற்காக இரண்டு கட்டங்களாக வேட்புமனு கோரப்படவுள்ளது. முதற்கட்டமாக 93 உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்கள் எதிர்வரும் திங்கட்கிழமை வரை ஏற்கப்படும். இரண்டாவது கட்டமாக ஏனைய 248 உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை ஏற்றுக் கொள்ளப்படும் என்று தெரிவித்தார். தேர்தல் முறைப்பாடுகளை ஏற்பதற்கு தனியான பிரிவொன்று ஸ்தாபிக்கப்படும். தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்கள் மட்டத்தில் இவை ஸ்தாபிக்கப்படும். எதிர்வரும் வியாழக்கிழமை தெரிவத்தாட்சி அதிகாரிகள் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொள்ளும் விசேட கூட்டம் ஒன்று நடைபெறும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

பாணத்துறை, எலுவில நிஸாமியா பாலர் பாடசாலையின் 23ஆவது வருட கலை விழா

Image
பாணத்துறை, எலுவில நிஸாமியா பாலர் பாடசாலையின் 23ஆவது வருட கலை விழா நிகழ்ச்சி  நேற்று ஞாயிற்றுக்கிழமை (03.12.2017) பாணந்துறை நகர மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பாணத்துறை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஜகத் அங்ககே பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், இஸட்.ஏ.எம்.அஸ்வர் ஜே.பி. மற்றும் அலவியா முஸ்லிம் மகா வித்தியாலய முன்னாள் அதிபர் எம்.எஸ்.எம்.சல்மான் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டனர். இதன்போது மாணவர்களின்  கலை  நிகழ்வுகளும்  அரங்கேற்றப் பட்டன 

பாடசாலை மாணவர்களின் சீருடைக்கான வவுச்சர்கள் அடுத்தவாரம் வழங்கப்படும்

Image
பாடசாலை மாணவர்களின் சீருடைக்கான வொவுச்சர்கள் அடுத்த வாரம் முதல் வழங்கப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வொவுச்சர்கள் அனைத்தும் மாகாண சபைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. சுமார் 42 இலட்சம் மாணவர்களுக்கு வொவுச்சர்கள் வழங்கப்படவுள்ளன. இதற்காக அரசாங்கம் 244 கோடி ரூபாவை செலவிட்டுள்ளது. பிரிவெனா மாணவர்களுக்கான வொவுச்சர்கள் வழங்கப்பட்டுள்ளன.

கல்முனை முஸ்லீம் கோட்ட சாதனையாளர்கள் கெளரவிப்பு

Image
கல்முனை கல்வி வலயத்துக்குட்பட்ட முஸ்லீம் கோட்டத்தில்  இவ்வாண்டு தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளைப்  பெற்று சித்தியடைந்த 131 மாணவர்களையும்  அவர்களுக்கு கற்பித்த 34 ஆசிரியர்களையும்  மற்றும் முஸ்லீம் கோட்டதுக்குட்பட்ட  15 அதிபர்களையும் 05 கல்வி அதிகாரிகளையும் பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு  நாளை ஞாயிற்றுக் கிழமை  மருதமுனை   அல் -மன்னார் மத்திய கல்லூரி மண்டபத்தில் நடை பெறவுள்ளது. கல்முனை முஸ்லீம் பிரிவு கோட்டக் கல்வி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப் பட்டுள்ள இப்பாராட்டு விழா நிகழ்வு கோட்டக் கல்வி அதிகாரி ஏ.எல்.சக்காப் தலைமையில் நடை பெறவுள்ளது. இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.அப்துல் நிஸாம்  பிரதம அதிதியாகவும் ,கல்முனை வலயக்கல்விப்  பணிப்பாளர்  எம்.எஸ்.அப்துல் ஜலீல் கெளரவ அதிதியாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளதுடன் சிறப்பு அதிதிகளாக பிரதிக் கல்விப்  பணிப்பாளர்களான வீ.மயில்வாகனம்,ஏ.எல்.எம்.முக் தார் ,எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மௌலானா ,எஸ்.எல்.ஏ.றகீம...

வங்காளவிரிகுடாவில் மற்றுமொரு தாழமுக்க தாழ்வு நிலை

Image
வங்காளவிரிகுடாவில் மற்றுமொரு தாழமுக்க தாழ்;வு நிலை ஏற்படக்கூடிய நிலைமை இருப்பதாக வளிமண்லவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கே.எச்.எம்.எஸ்.பிரேமலால் எதிர்வு எதிர்வு கூறியுள்ளார். எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமைகளில் நாட்டுக்கு அருகாமையில் இந்த குறைந்த தாழமுக்க தாழ்வு நிலை ஏற்படக்கூடும் என்றும் அவர் கூறினார்.   இதன் நகர்வுக்கு அமைவாக எதிர்வரும் தினங்களில் மழை மற்றும் காற்று நிலைமையில் மாற்றம் ஏற்படக்கூடும்.   இது குறித்து பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என்றும் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

சிங்கள மொழிப் பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு சாண்றிதழ் வழங்கும் நிகழ்வு

Image
நல்லாட்சி அரசினால் முன்னெடுக்கப்பட்டுள்ள தேசிய மொழிக் கொள்கைக்கமைய தேசிய மொழிக் கொள்கை மற்றும் பயிற்சி நிறுவனத்தால் கல்வி அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கு அம்பாறை மாவட்டத்தில் 12 நாட்கள் சிங்கள மொழிப்பயிற்சி வழங்கப்பட்டது.  கல்முனை மஹ்மூத் மகளீர் கல்லூரியில் நடை பெற்ற பயிற்சியை தொடர்ந்து  இறுதி நாளான நேற்று மாலை  சிங்கள மொழிப் பயிற்சியை நிறைவு  செய்தவர்களுக்கு சாண்றிதழ் வழங்கும் நிகழ்வு  இடம் பெற்றது. கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தின் அனுசரணையுடன் தேசிய மொழிக் கொள்கை மற்றும் பயிற்சி நிறுவனத்தால் வழங்கப்பட்ட இப்பயிற்சி செயலமர்வில் நாட்டின் பல பாகங்களிலும் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கல்வி அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் இந்த  சிங்கள மொழிப் பயிற்சியை பூர்த்தி செய்துள்ளனர்.  காரைதீவு  சண்முகா மகா வித்தியாலயத்தில் நடை பெற்ற சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கியதுடன் பாடநெறியை கற்பித்த தே...

கல்முனை தமிழ் பிரதேசத்தை கல்முனை மாநகர சபை புறக்கணிக்கிறதா ?

Image
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கல்முனை-01 வைத்தியசாலை குறுக்கு வீதி கல்முனை நீதி மன்றம் ,தொலைத் தொடர்பு திணைக்களம், வீதி அபிவிருத்தி திணைக்களம் மற்றும் கல்முனை பொதுச் சந்தைக்கு  பொது மக்கள் பயன்படுத்தும் குறுக்கு வழி வீதியாகும் . இவ் வீதியில் வசிக்கும் மக்கள் போக்குவரத்து செய்வதில் கஸ்டத்தையும் டெங்கு ஆபத்தையும் எதிர் நோக்கியவர்களாக வாழ்ந்து வருகின்றனர். இந்த வீதியானது கல்முனை மாநகர சபையினால் பராமரிக்கப்படுகின்ற போதிலும் பல வருடமாக மாநகர சபை கவனிக்காமல் விட்டதனால் குன்றும் குழியுமாக சேதமடைந்துள்ளது. இதனால் மக்கள் பல அசௌகரியங்களை எதிர் கொள்கின்றனர். மேலும் மழைகாலம் ஆரம்பித்துள்ளதனால் இந்த வீதியின் அருகாமையில் அமைந்துள்ள வடிகான் நீண்டகாலமாக துப்புரவு  செய்யப்படாமயால் நீர் தேங்கி காணப்படுகின்றது. இதனால் இப்பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு டெங்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. வடிகான் சீர் இன்மையால் வெற்றுக் காணிகளில் நீர் தேங்கி காணப்படுவதுடன் குப்பை கூழங்களும் கொட்டப்பட்டு வருகின்றன இதனால் நுளம்பு பெருக்கம் அதிகரிக்க வாய்ப்பாக உள்ளது. எனவே இந்த விடயத்தை கல்முனை ம...

கல்முனையில் இன நல்லுறவுக்கான மீலாத் விழா

Image
பல்லின சமூகம் வாழும் கல்முனை நகரில்  இனங்களுக்கிடையேயான இன நல்லுறவு  மற்றும் புரிந்துணர்வை வலியுறுத்தியும் சமயங்களினூடான சமாதானத்தை ஏற்படுத்தி மனித மனங்களில் நல்லெண்ணத்தை ஏற்படுத்தும் முகமாகவும் கல்முனை நகரில் உத்தம நபியின் மீலாத் பெரு விழாவும் மீலாத் ஊர்வலமும் அன்னதானம் வழங்கும் நிகழ்வும்  இன்று (02) சனிக்கிழமை இடம் பெற்றது. கல்முனை நகர் பள்ளிவாசல் ஏற்பாடு செய்த முகம்மது நபி அவர்களை போற்றிப் புகழும் மீலாத் பேருரையும் அன்னதானம் வழங்கும் நிகழ்வும்  நகர் பள்ளிவாசல் முன்பாக இடம் பெற்றது. இந்த நிகழ்வில் தமிழ் முஸ்லிம் என்ற வேறுபாடுகளுக்கப்பால் இன ஒற்றுமை வலியுறுத்தப்பட்டது. இதே வேளை கல்முனை கடற்கரைப்பள்ளி வாசலில் இடம் பெற்ற நபி பிறந்த மீலாத் விழா துஆ பிரார்த்தனையுடன் ஆரம்பித்து அங்கிருந்து ஸலவாத் முழங்க மீலாத் ஊர்வலமும் இடம் பெற்றது. மதரஸா மாணவர்கள் மௌலவிமார்கள் பொது மக்கள் என ஆயிரக்கணக்கானோர் கொடிகளை ஏந்தி இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

'ஒகி' சூறாவளியின் அழுத்தம் இலங்கையைவிட்டு இன்னும் முழுமையாக நீங்கவில்லை

Image
'ஒகி' சூறாவளியின் அழுத்தம் இலங்கையைவிட்டு இன்னும் முழுமையாக நீங்கவில்லை என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது இன்றும் நாளையும் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையை எதிர்பார்க்க முடியும் என்று எதிர்வு கூறியுள்ளது.    நாட்டைச் சுற்றியுள்ள கடற்பிரதேசத்திலும் நாட்டிலும் தொடர்ந்து கடும் காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல் மற்றும் தென்மாகாண பிரதேசங்களில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும். இதனால் கடற்தொழிலாளர்கள் இன்றையத் தினம் அவதானத்துடன் செயற்படவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளனர்.    இதேவேளை இலங்கையிலிருந்து நகர்ந்து செல்லும் 'ஒகி' சூறாவளியின் தாக்கம் இந்தியாவை பாதித்துள்ளது. தமிழ்நாடு, கேரளா மாநிலங்களில் கடும் மழைப் பெய்து வருகிறது.   வெள்ளமும் ஏற்பட்டுள்ளது. கடுங்காற்றின் காரணமாக மரங்கள் பல முறிந்துள்ளன. இந்த சம்பவங்களினால் தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். இருநூறுக்கும் மேற்பட்ட மீனவர்கள் காணாமற் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமற் போன மீனவர்களைக் கண்டுப்பிடிப்பதில் ஐந்து...

சீரற்ற காலநிலை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11

Image
சீரற்ற காலநிலையினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11அதிகரித்துள்ளது.  மாத்தறை கம்புறுப்பிட்டிய பலோப்பிட்டிய பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு விழுந்தமையினால் ஒருவர் உயிரிழந்தார். காயமடைந்த அவரது மனைவி மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சீரற்ற காலநிலையினால் 55 பேர் காயமடைந்துள்ளனர். 5 பேர் காணாமல்போயுள்ளனர;.     14 மாவட்டங்களில் 18 ஆயிரத்து 752 குடும்பங்களைச் சேர்ந்த 61 ஆயிரத்து 165 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.     சீரற்ற காலநிலை காரணமாக 30 படகுகள் வரையில் பாதிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது

திடீர் அனர்த்தம் : அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கங்கள்......

Image
இயற்கை அனர்த்தங்கள் தொடர்பான தகவல்களை வழங்க உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு    1902   என்ற  அவசர தொலைபேசி இலக்கத்தை அறிமுகம் செய்துள்ளது.  இந்த தொலைபேசி  இலக்கத்தின் மூலம் அமைச்சின் செயலாளரை தொடர்பு கொண்டு தகவல்களை பெற முடியும்.    அமைச்சர் வஜிர அபேவர்த்தனவின் பணிப்புரைக்கு அமைய நிவாரணங்களை வழங்கும் நடவடிக்கைகள் மாவட்ட பிரதேச செயலாளர்களின் ஊடாக முன்னெடுக்கப்பட இருக்கின்றன.    தொடர்ந்து மழை பெய்வதால் வெள்ளம் ஏற்படுவதற்கான அபாயமும் காணப்படுகிறது.  இவ்வாறான விடயங்கள் பற்றி எச்சரிக்கையுடன் இருக்குமாறு அமைச்சர் அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.    வீடுகளுக்கோ சேதம் ஏற்பட்டிருப்பின் கிராம உத்தியோகத்தர்களின் ஊடாக அது பற்றி அறிவிக்குமாறு அமைச்சர் மக்களை கேட்டுள்ளார்.    மின்சார துண்டிப்பு தொடர்பாக தகவல்களை வழங்குவதற்கான தொலைபேசி இலக்கங்களும் வழங்கப்பட்டுள்ளன.  1987  என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக மின்சார சபையை தொடர்பு கொள்ள முடியும்.    இலங்கை தனியார் மின்சார நிறுவன...

சீரற்ற காலநிலையினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு

Image
நாட்டில் தற்சமயம் நிலவும் வலுவான காற்றுடன்கூடிய அடைமழையினால் 7 பேர் உயிரிழந்துள்ளார்கள். காலி கம்பஹா பதுளை மாவட்டங்களிலேயே இந்த உயிரிழப்புக்கள் இடமபெற்றுள்ளன.   13 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையினால் நான்காயிரத்து 886 குடும்பங்களைச் சேர்ந்த 18 ஆயிரத்து 781 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆகும்.     இதுவரை ஐந்து பேர் காணாமற்போய்யுள்ளனர். 202 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன.   பகுதியளவில் 3 ஆயிரத்து 236 வீடுகள் சேதமடைந்திருக்கின்றன. ஒன்பது பாதுகாப்பு மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டு;ள்ளன. இவற்றில் 179 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 36 பேர் இவற்றில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.     இதேவேளை நுவரெலியா பிரதேசத்தில் 14 கிராமங்கள் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டு;ளளன. இங்கு 51 குடும்பங்களைச் சேர்ந்த 254 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இம் மண்சரிவினால்,42 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன என;று நுவரெலியா பிரதேச செயலாளர்  தெரிவித்தார்.  

மபாஹிர் மசூர்மொலானாவின் திரைக்கதை நெறியாழ்கையில் “பொம்பளங்க வேல”இஸ்லாமிய நாடகம்

Image
(பி.எம்.எம்.ஏ.காதர்) நபிகள் நாயகத்தின் பிறந்த தினத்தையொட்டி மபாஹிர் மசூர்மொலானாவின் நெறியாழ்கையில் தயாரித்து வழங்கும்“பொம்பளங்க வேல”இஸ்லாமிய நாடகம் நாளை வெள்ளிக்கிழமை (01-12-2017)மாலை பி.ப.4.35 மணிக்கு இலங்கை ரூபவாஹினி கூட்டத்தாபன நேத்ரா அலைவரிசையில் ஒளிபரப்பாக உள்ளது. இறக்காமத்தைச் சேர்ந்த சிறந்த நாடக எழுத்தாளரும் நடிகரும், கலைஞருமான திருமதி பர்ஸானா றியாஸ் இந்த நாடகத்திற்கான கதையை எழுதியுள்ளார். சமூகத்தில் சீர்கெட்டிருக்கும் பெண்களின் அறியாமையினால் இடம் பெறும் தீய சம்பவங்களை கருப்பொருளாகக்  கொண்டே இக் கதை எழுதப்பட்டுள்ளது. இந்த நாடகத்தில் பல்துறைக் கலைஞரான திருமதி நெய் றஹீம் சஹீட், பிறை எப்.எம்.அறிவிப்பாளர் எஸ்.றபீக், நாடகத்தின் கதாசிரியர் பர்ஸானா றியாஸ், நடிகர் அஸ்வான் சக்காப் மௌலானா, முகம்மட் றியாஸ், யாழ் பரீத் ஜாபிர், விஜயா துரைசாமி, பரீட் பதீர், ஆகியோர் நடித்துள்ளனர்.