சிங்கள மொழிப் பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு சாண்றிதழ் வழங்கும் நிகழ்வு
நல்லாட்சி அரசினால் முன்னெடுக்கப்பட்டுள்ள தேசிய மொழிக் கொள்கைக்கமைய தேசிய மொழிக் கொள்கை மற்றும் பயிற்சி நிறுவனத்தால் கல்வி அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கு அம்பாறை மாவட்டத்தில் 12 நாட்கள் சிங்கள மொழிப்பயிற்சி வழங்கப்பட்டது. கல்முனை மஹ்மூத் மகளீர் கல்லூரியில் நடை பெற்ற பயிற்சியை தொடர்ந்து இறுதி நாளான நேற்று மாலை சிங்கள மொழிப் பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு சாண்றிதழ் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது.
கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தின் அனுசரணையுடன் தேசிய மொழிக் கொள்கை மற்றும் பயிற்சி நிறுவனத்தால் வழங்கப்பட்ட இப்பயிற்சி செயலமர்வில் நாட்டின் பல பாகங்களிலும் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கல்வி அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் இந்த சிங்கள மொழிப் பயிற்சியை பூர்த்தி செய்துள்ளனர்.
காரைதீவு சண்முகா மகா வித்தியாலயத்தில் நடை பெற்ற சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கியதுடன் பாடநெறியை கற்பித்த தேசிய மொழிக் கொள்கை மற்றும் பயிற்சி நிறுவன அதிகாரிகளுக்கும் கற்பித்த ஆசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
12 நாட்கள் கற்றுக் கொண்ட சிங்கள மொழி மூலம் பயிற்சியாளர்களின் கலை கலாச்சார நிமழ்வுகளும் அங்கு இடம் பெற்றது.
Comments
Post a Comment