கல்முனையில் இன நல்லுறவுக்கான மீலாத் விழா
பல்லின சமூகம் வாழும் கல்முனை நகரில் இனங்களுக்கிடையேயான இன நல்லுறவு மற்றும் புரிந்துணர்வை வலியுறுத்தியும் சமயங்களினூடான சமாதானத்தை ஏற்படுத்தி மனித மனங்களில் நல்லெண்ணத்தை ஏற்படுத்தும் முகமாகவும் கல்முனை நகரில் உத்தம நபியின் மீலாத் பெரு விழாவும் மீலாத் ஊர்வலமும் அன்னதானம் வழங்கும் நிகழ்வும் இன்று (02) சனிக்கிழமை இடம் பெற்றது.
கல்முனை நகர் பள்ளிவாசல் ஏற்பாடு செய்த முகம்மது நபி அவர்களை போற்றிப் புகழும் மீலாத் பேருரையும் அன்னதானம் வழங்கும் நிகழ்வும் நகர் பள்ளிவாசல் முன்பாக இடம் பெற்றது. இந்த நிகழ்வில் தமிழ் முஸ்லிம் என்ற வேறுபாடுகளுக்கப்பால் இன ஒற்றுமை வலியுறுத்தப்பட்டது.
இதே வேளை கல்முனை கடற்கரைப்பள்ளி வாசலில் இடம் பெற்ற நபி பிறந்த மீலாத் விழா துஆ பிரார்த்தனையுடன் ஆரம்பித்து அங்கிருந்து ஸலவாத் முழங்க மீலாத் ஊர்வலமும் இடம் பெற்றது.
மதரஸா மாணவர்கள் மௌலவிமார்கள் பொது மக்கள் என ஆயிரக்கணக்கானோர் கொடிகளை ஏந்தி இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment