Posts

நற்பிட்டிமுனை வரலாற்று சாதனை!! லங்கா சதோச விற்பனை நிலையம் குதூகல திறப்பு விழா !!!

Image
கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின்  கல்முனை தொகுதி பிரதி அமைப்பாளரும்  உயர் பீட உறுப்பினரும் லங்கா சதோச நிறுவனத்தின்  பணிப்பாளருமான சி.எம்.முபீத்  தலைமையில் திறந்து வைக்கப்பட்ட   நிகழ்வில்  கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சரும்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவருமான றிஸாட் பதியுதீன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு  திறந்து வைத்தார்  பாராளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லாஹ் மஃரூப் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் எஸ்.சுபைதீன் , காரிய வள கூட்டுத்தாபனத்தின் தலைவர் எம்.ஏ.அப்துல் மஜீத்,லக்சல நிறுவனத்தின் தலைவர் எஸ்.எம்.எம்.இஸ்மாயில் ,கல்முனைக்குடி அமைப்பாளரும் முன்னாள் கல்முனை மாநகரசபை உறுப்பினருமான ஏ.எம்.றியாஸ் ,நெடா நிறுவனத்தின் பணிப்பாளரும்  மருதமுனை அமைப்பாளருமான  சித்தீக் நதீர்,அம்பாறை மாவட்ட கொள்கைப்பரப்பு செயலாளர் எம்.எம்.ஜுனைதீன்  உட்பட  கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சரின் இணைப்பாளரும்  அகில இலங்கை  மக்கள் காங்கிரசின் கல்முனை தொகுதி ...

கல்முனை ஸ்ரீ தரவப்பிள்ளையார் ஆலய செயலாளர் வரதன் வாகன விபத்தில் பலி

Image
கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருதில் இடம்பெற்ற வாகன விபத்தில் கல்முனை -03ஆம் குறிச்சியை சேர்ந்த அப்புக்குட்டி வரதராஜன் (58)என்பவர் மரணமடைந்துள்ளார் . இந்த சம்பவம் சனிக்கிழமை இரவு 10.30மணிக்கு சாய்ந்தமருது பிரதான வீதியில் ரெட் சில்லி ஹோட்டலுக்கு முன்பாக இடம் பெற்றுள்ளது திருக்கோவிலில் இருந்து திருகோணமலை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பஸ் வண்டியுடன் கல்முனையில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி மோட்டார் சைக்களில் பயணிக்கும் போது நேருக்கு நேர் மோதியே இந்த விபத்து இடம் பெற்றுள்ளது. தலையில் ஏற்பட்ட பலமான காயத்தினால் இரத்தப் பெருக்கு ஏற்பட்டு வரதராஜன் என்பவர் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டதன் பின்னர் மரணமடைந்தார் . கல்முனை ஸ்ரீ தரவப்பிள்ளையார் ஆலயம் மற்றும் கல்முனை கண்ணகி அம்மன் ஆலயங்களின் அறப்பணி புரிகின்ற இவர் 03 பிள்ளைகளின் தந்தையாவார் . சம்பவம் தொடர்பில் பஸ் சாரதி கல்முனை பொலிஸாரினால் கைது செய்யப் பட்டுள்ளதுடன் விசாரணை நடாத்தப் படுகிறது . இறந்தவரின் சடலம் கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையில் வைக்கப் பட்டுள்ளது .

கல்முனை நகர் அருள் மிகு ஸ்ரீ சந்தான ஈஸ்வரர் ஆலய தேர்த் திருவிழா

Image
கல்முனை நகர் அருள் மிகு ஸ்ரீ சந்தான ஈஸ்வரர் ஆலய தேர்த் திருவிழா இன்று ஞாயிற்றுக் கிழமை வெகு சிறப்பாக இடம் பெற்றது. அதிகாலை 4.30 மணிக்கு அபிசே கத்துடன் பூஜை வழிபாடுகள் ஆரம்பமாகி காலை 6.00 மணிக்கு எம் பெருமான் தேரில் எழுந்தருளி தேர்பவனி ஆரம்பமானது. கௌரி அம்பாள் சமேத சந்தான ஈஸ்வரப் பெருமான் ஒரு தேரிலும், விநாயகப் பெருமான் மற்றுமொரு தேரிலும், வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமான் ஒரு தேரிலுமாக மூன்று தேர்களில் இறைவன் பவனி வருகின்ற  திரு நிகழ்வு  சிறப்பாக இடம் பெற்றன. யாழ் இளைஞர்  யுவதிகளின் காவடியாட்டம் ,கரகாட்டம்,  நாதஸ்வர தவில் முழங்க, பறை மேழ முழக்கத்துடன் ஆண்பெ, ண் வேறுபாடின்றி பக்தர்கள் திரண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். இத் தேர் திரு விழா கல்முனை பிரதான வீதி ஊடாக வலம் வந்து ஆலயத்தை சென்றடைந்தது.  கடந்த மார்ச் 29ஆம் திகதி  கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஆலய கிரியைகளைத் தொடந்து திரு விழாக்கள்  ஆலய வழிபாடுகள் மற்றும் அன்னதானம் வழங்கல் இடம் பெற்று 11 ஆம் நாளான இன்று இத் தேர் திரு விழா இடம் பெற்றன. நாளை 12 ஆம் நாளான இறுதி நிகழ்வாக தீர்தே...

நற்பிட்டிமுனையில் நாளை சதோச திறப்பு விழா

Image
நற்பிட்டிமுனை பிரதான வீதியில் அமைக்கப்பட்டுள்ள லங்கா சதோச விற்பனை நிலையம் நாளை ஞாயிற்றுக் கிழமை (09) மாலை 3.45 மணிக்கு திறந்து வைக்கப் படவுள்ளது . கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின்  கல்முனை தொகுதி பிரதி அமைப்பாளரும்  உயர் பீட உறுப்பினரும் லங்கா சதோச நிறுவனத்தின்  பணிப்பாளருமான சி.எம்.முபீத்  தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ள  நிகழ்வில்  கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சரும்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவருமான றிஸாட் பதியுதீன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு  திறந்து வைக்கவுள்ளார். கிராமிய பொருளாதார பிரதி அமைச்சரும்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளருமான சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி பாராளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லாஹ் மஃரூப் ,இஸ்ஸாக் ரகுமான் .எம்.எச்.எம்.நவவி  ஆகியோர் கெளரவ அதிதிகளாகவும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் எஸ்.சுபைதீன் ,அரச வர்த்தக கூட்டுத் தாபனங்களின்  தலைவரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும்  கட்சியின் பிரதி தவிசாளரும...

கல்முனை கல்வி வலய விளையாட்டுப் போட்டி இன்று ஆரம்பம்

Image
கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் பாடசாலை களுக்கிடையிலான  வலய மட்ட விளையாட்டுப் போட்டி கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் தலைமையில் கல்முனை  உவெஸ்லி உயர்தர பாடசாலை மைதானத்தில் நேற்றுக்  காலை ஆரம்பமானது. கல்முனை  வலயத்துக்குட்பட்ட  கல்முனை முஸ்லிம் ,தமிழ் பிரிவு ,சாய்ந்தமருது ,காரைதீவு மற்றும் நிந்தவூர் கோட்டங்களை சேர்ந்த  65 பாடசாலைகளை சேர்ந்த ஆயிரத்துதுக்கும் குறையாத மாணவர்கள் போட்டிகளில் பங்குபற்றியிருந்தனர் . வலய மட்ட போட்டிகளில் பங்கு பற்றி முதலாம், இரண்டாம் இடத்தைப் பெறும் மாணவர்கள் மாகாண மட்டப் போட்டிகளுக்கு தெரிவு செய்யப்படவுள்ளனர். நேற்று  நடை பெற்ற  வலய மட்ட ஆரம்ப போட்டி நிகழ்வுகள் வலயக்  கல்வி அலுவலக முகாமைத்துவத்துக்குப்  பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.எம்.எஸ் உமர்மௌலானாவின் நெறி ப்படுதலுடன்  இடம் பெற்றன . ஆரம்ப நிகழ்வில்  வலயக் கல்வி அலுவலக நிருவாகத்துக்குப் பொறுப்பான பிரதிக்கல்விப் பணிப்பாளர் வீ.மயில்வாகனம் ,கல்வி அபிவிருத்திக்குப் பொறுப்பான பிர...

முகநூல் முக வரிகள் கவிதை நூல் வெளியீடு

Image
(பி.எம்.எம்.ஏ.காதர்)   மருதமுனையைச் சேர்ந்த எழுத்தாளரும்ஊடகவியலாளருமான ஆசிரியர் ஜெஸ்மி எம்.மூஸா தொகுத்துள்ள முகநூல் கவிதைகளின் தொகுப்பான முகநூல் முக வரிகள் கவிதை நூல் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை (31-03-2017)மருதமுனை கலாச்சார மத்திய நிலைய மண்டபத்தில் நூலாசிரியர் தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னிலை அதிதி ஓய்வு  பெற்ற கல்விப்பணிப்பாளர் எம்.எச்.காதர் இப்றாகீம்எழுத்தாளர் உமாவரதராஜன்,  கலாநிதி சத்தார் எம்.பிர்தௌஸ், ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள் . இங்கு இலக்கிய அதிதியாகக் கலந்து கொண்ட பேராசிரியர் செ.யோகராசாவிடமிருந்து நூலின் முதல் பிரதியை சறோ  நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.எச்.தாஜூதீன் பெற்றுக் கொண்டார். எழுகவி ஜலீல் நாட்டார் கவி பாடினார்.நிகழ்வுகளை  பிறை எப்.எம்.கட்டுப்பாட்டாளர் பஷீர் அப்துல் கையூம், ஆசிரியர் எம்.எம்.விஜிலி ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள் பெரும் அளவில் எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர்.

நற்பிட்டிமுனையில் சாதாரண தரப் பரீட்சையில் 9A விசேட சித்தி பெற்ற 03 மாணவிகளுக்கு பரிசு வழங்கி கெளரவிப்பு

Image
நற்பிட்டிமுனையில் சாதாரண தரப் பரீட்சையில் 9A  விசேட  சித்தி  பெற்ற 03 மாணவிகள்   பரிசு வழங்கி  கெளரவிக்கப் பட்ட நிகழ்வு   இன்று  நற்பிட்டிமுனை அல் - கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக சேவை அமைப்பின்  ஏற்பாட்டில் நடை பெற்றது .  நற்பிட்டிமுனை  கல்வி அபிவிருத்திக்  குழுவின் பொருளாளரும் ,நற்பிட்டிமுனை அல் - கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக சேவை அமைப்பின் தலைவரும்  சமூக சேவையாளருமான  சீ .எம் .ஹலீம் தலைமையில்  சித்தி  பெற்ற  மாணவிகளின்  வீடுகளுக்கு சென்ற குழுவினர்  மாணவிகளான முகம்மட்  நதீர் நுஸ்ஹா ,முகமட் ஷாபி பாத்திமா அஸ்ரா ,முகமட் அனீஸ் சனா அம்ரி  ஆகியோருக்கு  மாலை அணிவித்து நினைவுப்  பரிசு வழங்கி பணப் பரிசும் வழங்கி வைத்தனர் . நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மகாவித்தியாலய பிரதி அதிபர் வீ.எம்.ஸம் ஸம் ,உதவி அதிபர்  மௌலவி ஏ.சாலிதீன் , நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலய ஆசிரியர்களான திருமதி அன்சிலா தாஹிர் ,எம்.எல்.அஷ்ரப் , ஹிஜா கல்லூரியின் பணிப்பாளரும் ஆசிரியருமான டபிள்ய...