நற்பிட்டிமுனையில் சாதாரண தரப் பரீட்சையில் 9A விசேட சித்தி பெற்ற 03 மாணவிகளுக்கு பரிசு வழங்கி கெளரவிப்பு
நற்பிட்டிமுனையில் சாதாரண தரப் பரீட்சையில் 9A விசேட சித்தி பெற்ற 03 மாணவிகள் பரிசு வழங்கி கெளரவிக்கப் பட்ட நிகழ்வு இன்று நற்பிட்டிமுனை அல் - கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக சேவை அமைப்பின் ஏற்பாட்டில் நடை பெற்றது .
நற்பிட்டிமுனை கல்வி அபிவிருத்திக் குழுவின் பொருளாளரும் ,நற்பிட்டிமுனை அல் - கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக சேவை அமைப்பின் தலைவரும் சமூக சேவையாளருமான சீ .எம் .ஹலீம் தலைமையில் சித்தி பெற்ற மாணவிகளின் வீடுகளுக்கு சென்ற குழுவினர் மாணவிகளான முகம்மட் நதீர் நுஸ்ஹா ,முகமட் ஷாபி பாத்திமா அஸ்ரா ,முகமட் அனீஸ் சனா அம்ரி ஆகியோருக்கு மாலை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி பணப் பரிசும் வழங்கி வைத்தனர் .
நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மகாவித்தியாலய பிரதி அதிபர் வீ.எம்.ஸம் ஸம் ,உதவி அதிபர் மௌலவி ஏ.சாலிதீன் , நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலய ஆசிரியர்களான திருமதி அன்சிலா தாஹிர் ,எம்.எல்.அஷ்ரப் , ஹிஜா கல்லூரியின் பணிப்பாளரும் ஆசிரியருமான டபிள்யு .ஐயூப்கான் உட்பட நற்பிட்டிமுனை அல் - கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக சேவை அமைப்பின் செயலாளர் யு.எல்.எம்.பாயிஸ் உட்பட மாணவிகளின் பெற்றோரும் நிகழ்வுகளில் கலந்து சிறப்பித்தனர்.
Comments
Post a Comment