கல்முனை கல்வி வலய விளையாட்டுப் போட்டி இன்று ஆரம்பம்
கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் பாடசாலை களுக்கிடையிலான வலய மட்ட விளையாட்டுப் போட்டி கல்முனை
வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் தலைமையில் கல்முனை
உவெஸ்லி உயர்தர பாடசாலை மைதானத்தில் நேற்றுக் காலை ஆரம்பமானது.
கல்முனை
வலயத்துக்குட்பட்ட கல்முனை முஸ்லிம் ,தமிழ் பிரிவு ,சாய்ந்தமருது
,காரைதீவு மற்றும் நிந்தவூர் கோட்டங்களை சேர்ந்த 65 பாடசாலைகளை சேர்ந்த
ஆயிரத்துதுக்கும் குறையாத மாணவர்கள் போட்டிகளில் பங்குபற்றியிருந்தனர் .
வலய
மட்ட போட்டிகளில் பங்கு பற்றி முதலாம், இரண்டாம் இடத்தைப் பெறும்
மாணவர்கள் மாகாண மட்டப் போட்டிகளுக்கு தெரிவு செய்யப்படவுள்ளனர்.
நேற்று
நடை பெற்ற வலய மட்ட ஆரம்ப போட்டி நிகழ்வுகள் வலயக் கல்வி அலுவலக
முகாமைத்துவத்துக்குப்
பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.எம்.எஸ் உமர்மௌலானாவின்
நெறி ப்படுதலுடன் இடம் பெற்றன . ஆரம்ப நிகழ்வில் வலயக் கல்வி அலுவலக
நிருவாகத்துக்குப் பொறுப்பான பிரதிக்கல்விப் பணிப்பாளர் வீ.மயில்வாகனம்
,கல்வி அபிவிருத்திக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர்
எஸ்.எல்.ஏ.ரஹீம், கோட்டக் கல்விப் பணிப்பாளர்களான திருமதி ஜிஹானா ஆலிப்
,ஏ.எல்.சக்காப் ,கே.பரதன் கந்தசாமி ,ஐ.எல்.ஏ.ரகுமான் ,திருமதி
.ஆர்.திரவியராஜா ஆகியோர் கலந்து கொண்டதுடன்
விளையாட்டுக்குப் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர்
ஏ.ஏ.சத்தார்,விளையாட்டு ஆசிரிய ஆலோசகர் ஐ.எல்.ஏ.இப்றாகிம் ஆகியோர்
மேற்பார்வையில் போட்டிகள் யாவும் ஆரம்பமானது .
மத
வழிபாட்டுடன் ஆரம்பமான நிகழ்வுகளை தொடர்ந்து வலயக் கல்விப் பணிப்பாளர்
எம்.எஸ்.அப்துல் ஜலீல் தேசியக் கொடி ஏற்றி வைத்து நிகழ்வுகளை உத்தியோக
பூர்வமாக ஆரம்பித்து வைத்தார் . இன்று வெள்ளிக்கிழமை இரண்டாம் நாள்
போட்டிகள் நடை பெற்று பிற்பகல் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் கேடயம்
வழங்கும் நிகழ்வு இடம் என வலயக் கல்வி அலுவலக விளையாட்டு ஆசிரிய ஆலோசகர்
ஐ.எல்.ஏ.இப்றாகிம் தெரிவித்தார்,
Comments
Post a Comment